Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அநுபூதி
51 செய்யுட்கள்

Sri AruNagirinAthar's
Kandhar AnubUdhi
51 verses

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி  - 27  மின்னே நிகர்
 
Kandhar Anuboothi minnE nigar with meanings by Thiru S. NatarajanThiru S Nadarajan    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை'
    திரு சு. நடராஜன் (சென்னை)

   Meanings in Tamil by
   'Thiruppugazh Adimai'
   Thiru S Nadarajan (Chennai)

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 27 ... மின்னே நிகர்

(வினையால் வருவது பிறவி)

மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயன் இங்கு இதுவோ?
பொன்னே, மணியே, பொருளே, அருளே,
மன்னே, மயில் ஏறிய வானவனே.

......... பதவுரை .........

பொன்னே ... பொன்னைப் போன்றவனே,

மணியே ... நவ ரத்தினம் போல் ஒளியை வீசுபவனே,

பொருளே ... பேரின்பப் பொருளே,

அருளே ... பேரருளானவனே,

மன்னே ... தலைவனே,

மயில் ஏறிய வானவனே ... மயிலை வாகனமாகக் கொண்ட
மேலானவனே,

மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான் ... மின்னலைப் போல்
தோன்றி உடனே மறையும் நிலையில்லாத இவ்வுலக வாழ்வை
நிலையானது என எண்ணிக் கொண்டிருக்கும் நான்,

என்னே ... இந்த நிலையை என்ன என்று கூறுவேன்,

இங்கு விதியின் பயன் இதுவோ ... இந்த உலகில் என் தலை
விதியின் பயன் இதுதானோ?

......... பொழிப்புரை .........

யாவராலும் விரும்பப்படுகிற தங்கத்தைப் போன்றவனே, சுயப்
பிரகாசம் பொருந்திய நவரத்தினமானவனே, இவ்வுலக வாழ்விற்கு
ஆதாரமான செழுமைமிக்க பொருளே, அருள் வடிவமானவனே, சர்வ
லோக சக்ரவர்த்தியே, மயில் ஏறிய மாணிக்கமே, உன் அடிமையாகிய
அடியேன் மின்னலைப் போன்று தோன்றி மறையும் இவ்வுலக
வாழ்வை ஆசையோடு மேற்கொண்டது என் பிராப்தமோ?

......... விளக்கவுரை .........

அநித்யம் என்று அறிந்தும் பிரபஞ்ச வாழ்வில் பற்று வைக்க காரணம்
விதியின் பயன்தான் என்கிறார். அதற்கு மூல காரணம் விஞ்ஞானம்
அல்லது அவித்யை. முன்பு செய்த வினையின் காரணம் பின்பு
விளையும் வினையின் நியதியே விதி.

முன்பு செய்த நல்வினையின் பயனாக இப்பிறவியில் கிடைக்கும் அறிவு,
செல்வம், முயற்சி, பெருங்குடிப்பிறப்பு கிடைப்பது. இதை வள்ளுவர்
ஆகூழ்' என்பர். தீவினையின் பயனாக சோம்பல், அஞ்ஞானம்,
அறிவின்மை உண்டாகும். இதை 'போகூழ்' என்பர்.

மும்மல விகாரங்களே பிரபஞ்சத்தில் நாம் வைக்கும் பற்றுக்கு காரணம்.
அந்த மலம் அவரவர் செய்த வினைக்குத் தக்கபடி வகுத்து
அளிக்கப்படுகிறது. இதை 76ம் கந்தர் அலங்காரத்தில்,

   கோடாத வேதனுக் கியான்செய்த குற்றமென் குன்றெறிந்த
   தாடாள னேதென் தணிகைக் குமரநின் தண்டையந்தாள்
   சூடாத சென்னியு நாடாத கண்ணுந் தொழாதகையும்
   பாடாத நாவு மெனக்கே தெரிந்து படைத்தனனே.

... என்கிறார்.

எனக்கே தெரிந்து படைத்தனனே என்பதை நன்றாக ஊன்றி உணர
வேண்டும். நாம் முன் பிறவிகளில் செய்த வினைகளுக்கு தக்கபடி,
அதற்கு ஈடாக தக்க கரணங்களை நமக்கு பிரமன் கொடுத்தருக்கிறான்
அதனால் அவனைச் சொல்லி குற்றமில்லை. குருங்கச் சொன்னால்,
முன் பிறவியில் நல்ல வினைகளைச் செய்த ஆத்மாக்களே செக
மாயையில் மோகம் கொள்ளாமல் இறைவனை அடைய வழி தேடும்
என்பதே கருத்து. இவ்வுலகில் பிரபஞ்ச மாயையில் அகப்பட்ட உயிர்கள்
விரும்பும் பொன், மணி, பொருள் எல்லாம் முருகனே. இவற்றுக்கும்
மோலாக அருள் வடிவமாக இருப்பவனும் அவனேதான். இவ்வளவு
அரிய மெய்ப் பொருளாய் அவன் இருந்தாலும், அவனே சகல
சிருஷ்டிக்கும் அதிபதியாய் இருந்தாலும், அவன் அடியார்களுக்கு எளிய
பெருமாளாய் மயிலேறி வந்து ஆட்கொள்வான் என்பதைக் குறிக்கும்
வகையில் மயிலேறிய வானவனே என்கிறார்.
go to top
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.666  pg 4.667 
 WIKI_urai Song number: 27 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

 பதிவிறக்க 
0.10mb
 to download 
Malai Mandir Ishwinderjit Singh
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங்

'MalaiMandir' Thiru Ishwinderjit Singh
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

 பதிவிறக்க 
0.27mb
 to download 
Chennai Revathy Sankaran
சென்னை ரேவதி சங்கரன்

Revathy Sankaran (Chennai)
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

 பதிவிறக்க 
0.50mb
 to download 
 51 செய்யுட்கள்  51 செய்யுட்கள் (ஒலிவடிவத்துடன்) 
52-101 செய்யுட்கள்  52-101 செய்யுட்கள் (ஒலிவடிவத்துடன்) 
 பொருள் - பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா)  SS
 51 verses - English Transliteration   51 verses (with audio)
 52-101 verses - English Transliteration   52-101 verses (with audio)
 Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia)  SS
 அகரவரிசைப் பட்டியலுக்கு   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 For Alphabetical List   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar Anuboothi - Verse 27 minnE nigar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]