Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அநுபூதி
51 செய்யுட்கள்

Sri AruNagirinAthar's
Kandhar AnubUdhi
51 verses

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி  - 20  அரிதாகிய
 
Kandhar Anuboothi aridhAgiya with meanings by Thiru S. NatarajanThiru S Nadarajan    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை'
    திரு சு. நடராஜன் (சென்னை)

   Meanings in Tamil by
   'Thiruppugazh Adimai'
   Thiru S Nadarajan (Chennai)

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 20 ... அரிதாகிய மெய்

(உபதேசம் பெற்றதை வியத்தல்)

அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா
விரிதாரண, விக்ரம வேள், இமையோர்
புரிதாரக, நாக புரந்தரனே.

......... பதவுரை .........

விரி தாரண ... விரிந்து பரந்த உறுதியான உள்ளம் கொண்டவனே,

விக்ரம ... மிகுந்த வலிமை உடையவனே,

வேள் ... எல்லோராலும் விரும்பப்படுகின்றவனே,

இமையோர் புரி தாரக ... தேவர்கள் விரும்பும் தாரகப் மந்திரமாம்
பிரணவப் பொருளே, விண்ணுலகோரைக் காத்த தேவசேனாபதியே,

நாக புரந்தரனே ... தேவ லோகத்தைத் தாங்குபவரே,

அரிது ஆகிய மெய்ப் பொருளுக்கு ... அடைவதற்கு அரிது
ஆகிய உண்மைப் பொருளைப் பெறுவதற்கு,

அடியேன் ... அடியேனாகிய நான்,

உரிதா உபதேசம் உனர்த்தியவா ... தகுதி உடைவனாகும்படி
உபதேசம் செய்து உணர்த்தி அருளிய திறம் ஆச்சரியமானது.

......... பொழிப்புரை .........

எங்கும் விரிந்து எதையும் தாங்கும் பொறுப்பை உடைய
பராக்ரமசாலியே, தேவர்கள் சதா தியானம் செய்யும் பிரவண
சொரூபியே, விண்ணுலகத்தைக் காப்பவனே, கிடைப்பதற்கு
அரிதாகிய மெய்யுணர்வாகிய சிவஞானத்தை அடியேனுக்கு
உரியவை ஆகும்படி எனக்கு உபதேசம் செய்த பெருமையை
என்னவென்று சொல்வது?

......... விளக்கவுரை .........

குரு அருள் இன்றி ஞானம் கிட்டாது. அருணகிரி போன்ற அவதார
புருஷர்களுக்கு இறைவனே குருவாக வந்து உபதேசம் செய்கிறான்.
இதை பல கந்தர் அலங்காரப் பாடல்களிலும் கூறுகிறார்
(பாடல் 9) 'தேனென்று',

   .. தெளிய விளம்பியவா முகமாறுடை தேசிகனே
   தெய்வ வள்ளிக்கோன் அன்று எனக்கு உபதேசித்தது
   ஒன்று உண்டு ..

... என பல இடங்களில் வியக்கிறார். இதற்கு முன் உள்ள அநுபூதியில்,
வறுமையின் கொடுமையை வர்ணித்தார். இந்த வறுமை தீர முருகப்
பெருமானின் கருணையை வேண்டினார்.

   .. என் வறுமை தீர அன்று உன் அருள் பேணேன் ..

... என்கிறார்.

மிடியை மாற்ற பொருள் வேண்டும். அதை யாரிடம் சென்று கேட்பது?
மெய்ஞானமாகிய கிடைத்தற்கரிய பெரும் பொருளையே முருகன் எனக்கு
கொடுத்துவிட்டான். மெய்ப்பொருளாகிய பர ஞானத்தைப் பெற்றவன்
பிறவிப் பிணியினின்றும் விடுவிப்பான். உடம்பே அற்றுப் போகும் போது
மிடியும் கிடையாது. இவ்வளவு அரிதாகிய மெய்ப்பொருளை தன் முயற்சி
இல்லாமலேயே முருகன் எனக்கு உரிமையாக்கிக் கொடுத்தது என்ன
ஆச்சரியம்? என்று கேட்கிறார்.

   பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னை இப் பிரபஞ்சம்
   எனும் சேற்றைக் கழிய வழி விட்டவா ..

... என்கிறார்.

இதற்குக் காரணம் முருகப் பெருமானின் அவ்யாஜ கருணையே.

   .. நான் அவனுடைய அடியவன் என்ற உணர்வு முறுக்கேறி
   நிற்கும் பொழுது அந்த உறவையே பற்றாகக் கொண்டு நடந்த
   காரணத்தினால் அவன் அருளியதே இவைகள்.

... என்கிறார்.

தனக்கு அருள் செய்தது போல் உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளுக்கும்
முருகன் எல்லாவற்றையும் அருளிக் காப்பாற்றுவதை குறிக்க 'விரி தாரண'
என்று முருகனை கூப்பிடுகிறார்.

பூவுலகுக்கு மட்டுமா? விண்ணுலகை மீட்டுக்கொடுத்த பின்பு ஒரு தும்பி
கூட அங்கு நுழையாதபடி பாதுகாப்பதாக,

   கைத்தலத் தீக்குப் பார்த்து நுழையாத
   கற்பகத் தோப்புக் காத்த பேருமாளே.

... என்கிறார். திருப்புகழ் (பாடல் 1300) 'புத்தகத் தேட்டி' (திருநெல்வாயில்).

இது எதைக் காட்டுகிறதெனில், மீண்டும் தேவலோகத்தில் அசுத்த
விருத்திகளாகிய அனாத்ம தீய சக்திகள் அங்கு நுழைந்து விடாதபடி
முருகன் காவல் காத்து தேவர்களை காப்பாற்றி வருகிறார் என்பதை
அருணகிரியார் முருகனை,

   .. இமையோர்புரி தாரக நாக புரந்தரனே ..

... என்கிறார்.
go to top
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.659  pg 4.660 
 WIKI_urai Song number: 20 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

 பதிவிறக்க 
0.10mb
 to download 
Malai Mandir Ishwinderjit Singh
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங்

'MalaiMandir' Thiru Ishwinderjit Singh
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

 பதிவிறக்க 
0.26mb
 to download 
Chennai Revathy Sankaran
சென்னை ரேவதி சங்கரன்

Revathy Sankaran (Chennai)
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

 பதிவிறக்க 
0.53mb
 to download 
திருமதி காந்திமதி சந்தானம்

Mrs Kanthimathy Santhanam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Mrs Kanthimathy Santhanam
 51 செய்யுட்கள்  51 செய்யுட்கள் (ஒலிவடிவத்துடன்) 
52-101 செய்யுட்கள்  52-101 செய்யுட்கள் (ஒலிவடிவத்துடன்) 
 பொருள் - பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா)  SS
 51 verses - English Transliteration   51 verses (with audio)
 52-101 verses - English Transliteration   52-101 verses (with audio)
 Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia)  SS
 அகரவரிசைப் பட்டியலுக்கு   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 For Alphabetical List   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar Anuboothi - Verse 20 aridhAgiya

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]