திருப்புகழ் 1104 காதல் மோகம் தரும்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1104 kAdhalmOgamtharum  (common)
Thiruppugazh - 1104 kAdhalmOgamtharum - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானனா தந்தனந் தானனா தந்தனந்
     தானனா தந்தனந் ...... தனதான

......... பாடல் .........

காதல்மோ கந்தருங் கோதைமார் கொங்கைசிங்
     காரநா கஞ்செழுங் ...... கனிவாய்கண்

காளகூ டங்கொடுங் காலரூ பம்பொருங்
     காமபா ணஞ்சுரும் ...... பினம்வாழும்

ஓதிகார் செஞ்சொல்மென் பாகுதே னென்றயர்ந்
     தோநமோ கந்தஎன் ...... றுரையாதே

ஊசலா டும்புலன் தாரியே சென்றுநின்
     றோயுமா றொன்றையுங் ...... கருதாதோ

தாதகீ சண்பகம் பூகமார் கந்தமந்
     தாரம்வா சந்திசந் ...... தனநீடு

சாமவே தண்டவெங் கோபகோ தண்டசந்
     தானமா தெங்கள்பைம் ...... புனமேவும்

தீதிலா வஞ்சியஞ் சீதபா தம்படுஞ்
     சேகரா தண்டையங் ...... கழல்பேணித்

தேவிபா கம்பொருந் தாதிநா தன்தொழுந்
     தேசிகா வும்பர்தம் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

காதல் மோகம் தரும் கோதைமார் கொங்கை சிங்கார நாகம்
செழும் கனி வாய்
... காம ஆசையை எழுப்பும் மாதர்களின் மார்பகங்கள்
அலங்கார மலைகள் என்றும், வாய் செவ்விய (கொவ்வைக்) கனி என்றும்,

கண் காள கூடம் கொடும் கால ரூபம் பொரும் காம பாணம் ...
கண்கள் ஆலகால விஷம், கொடிய யமனுடைய உருவம், போர் செய்யும்
மன்மதனுடைய அம்பு என்றும்,

சுரும்பினம் வாழும் ஓதி கார் செம் சொல் மென் பாகு தேன்
என்று அயர்ந்து
... வண்டினங்கள் வாழும் கூந்தல் மேகம் என்றும்,
செவ்விய சொற்கள் இனிக்கும் வெல்லம், தேன் என்றும் (உவமைகள்
சொல்லி) சோர்வடைந்து,

ஓம் நமோ கந்தா என்று உரையாதே ஊசலாடும் புலன்
தாரியே சென்று நின்று ஓயும் ஆறு ஒன்றையும் கருதாதோ
...
ஓம் நமோ கந்தா என்று கூறாமல், அலைந்து கொண்டே இருக்கும்
ஐம்புலன்கள் செல்லும் வழியிலேயே போய் அவ்வழியையே
கடைப்பிடித்து அலைச்சல் ஓய்வுறும் படியான ஒரு வழியையும் என்
உள்ளம் எண்ணாதோ?

தாதகீ சண்பகம் பூகம் ஆர் கந்த மந்தாரம் வாசந்தி சந்தன(ம்)
நீடு சாம வேதண்டம்
... தாதகி, சண்பகம், கமுகு, சரக் கொன்றை,
நறுமணமுள்ள மந்தாரம், குருக்கத்தி, சந்தனம் இவைகள் நிறைந்து
விளங்கும் கரிய நிறத்தை உடைய வள்ளி மலையில்,

வெம் கோப கோதண்டம் சந்தானம் மாது எங்கள் பைம் புனம்
மேவும்
... கொடிய கோபத்தை உடைய, வில்லை ஏந்திய, வேடர்கள்
வம்சத்தில் வளர்ந்த பெண்ணாகிய வள்ளி எங்களுக்கு உகந்தவளாய்
பசுமையான தினைப் புனத்தில் வாசம் செய்யும்

தீதிலா வஞ்சி அம் சீத பாதம் படும் சேகரா ... குற்றமே
இல்லாத வஞ்சிக் கொடி போன்ற வள்ளியின் அழகிய குளிர்ந்த
திருவடிகள் படுகின்ற தலையை உடையவனே,

தண்டை அம் கழல் பேணி தேவி பாகம் பொருந்து ஆதி
நாதன் தொழும் தேசிகா உம்பர் தம் பெருமாளே.
... பார்வதி
தேவியின் ஒரு பாகத்தில் பொருந்தி உள்ள பழம்பொருளான
சிவபெருமான் உனது தண்டையும் அழகிய கழலும் அணிந்த திருவடியை
விரும்பித் தொழுத குரு மூர்த்தியே, தேவர்களுடைய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.240  pg 3.241  pg 3.242  pg 3.243 
 WIKI_urai Song number: 1107 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1104 - kAdhal mOgam tharum (common)

kAthalmO kantharum kOthaimAr kongaising
     kAranA kamchezhung ...... kanivAykaN

kALakU damkodum kAlarU pamporum
     kAmapA Nanjurum ...... pinamvAzhum

OthikAr sencholmen pAkuthE nenRayarn
     thOnamO kanthaen ...... RuraiyAthE

UsalA dumpulan thAriyE senRunin
     ROyumA RonRaiyum ...... karuthAthO

thAthakee caNpakam pUkamAr kanthaman
     thAramvA santhisan ...... thananeedu

sAmavE thaNdavem kOpakO thaNdasan
     thAnamA thengaLpaim ...... punamEvum

theethilA vanjiyam ceethapA thampadum
     sEkarA thaNdaiyang ...... kazhalpENith

thEvipA kamporun thAthinA thanthozhum
     thEsikA vumpartham ...... perumALE.

......... Meaning .........

kAthal mOkam tharum kOthaimAr kongai singAra nAkam sezhum kani vAy: Comparing those provocative bosom (of the whores) to pretty mountains, their mouth to the reddish kovvai fruit,

kaN kALa kUdam kodum kAla rUpam porum kAma pANam: their eyes to AlakAla poison, to the form of the evil Yaman (God of Death) and to the arrow of the war-mongering Manmathan (God of Love),

surumpinam vAzhum Othi kAr sem sol men pAku thEn enRu ayarnthu: their hair, where beetles swarm about, to the dark cloud, and their sweet speech to jaggery and honey, I am exhausted searching for so many comparisons;

Om namO kanthA enRu uraiyAthE UsalAdum pulan thAriyE senRu ninRu Oyum ARu onRaiyum karuthAthO: not chanting Your name as "Om namO, KanthA!" why does my mind run along the path propelled by the five restless sensory organs and roam about vainly sticking to that very path? Will it not think of any method to end such wandering?

thAthakee saNpakam pUkam Ar kantha manthAram vAsanthi santhana(m) needu sAma vEthaNdam: In that dark mountain, VaLLimalai, where trees like thAthaki, ShaNbagam, betel-nut, charkkonRai, fragrant manthAram, kurukkaththi and sandalwood abound,

vem kOpa kOthaNdam santhAnam mAthu engaL paim punam mEvum: this damsel, VaLLi, was reared by the hunters, known for their quick temper and the bows carried by them; She is our dear lass who lived in the green field of millet;

theethilA vanji am seetha pAtham padum sEkarA: at the beautiful, cool and hallowed feet of that unblemished belle, VaLLi, whose waist is like the creeper vanji (rattan reed), You prostrated, touching her feet with Your head, Oh Lord!

thaNdai am kazhal pENi thEvi pAkam porunthu Athi nAthan thozhum thEsikA umpar tham perumALE.: the Primordial Lord SivA, who has DEvi PArvathi concorporate on one side of His body, cherished Your hallowed feet wearing the anklets (thaNdai and kazhal) and prostrated at those feet, Oh Grand Master; You are the Lord worshipped by the celestials, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1104 kAdhal mOgam tharum - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]