திருப்புகழ் 1105 கோல காலத்தை  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1105 kOlakAlaththai  (common)
Thiruppugazh - 1105 kOlakAlaththai - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானனா தத்தனத் தானனா தத்தனத்
     தானனா தத்தனத் ...... தனதான

......... பாடல் .........

கோலகா லத்தைவிட் டாசுபா டக்கொடிக்
     கோவைபா டக்கொடிக் ...... கொடிவாதிற்

கோடிகூ ளக்கவிச் சேனைசா டக்கெடிக்
     கூறுகா ளக்கவிப் ...... புலவோன்யான்

சீலகா லப்புயற் பாரிசா தத்தருத்
     த்யாகமே ருப்பொருப் ...... பெனவோதுஞ்

சீதரா சித்ரவித் தாரமே செப்பிடக்
     கேளெனா நிற்பதைத் ...... தவிர்வேனோ

ஆலகா லப்பணிப் பாயல்நீ ளப்படுத்
     தாரவா ரக்கடற் ...... கிடைசாயும்

ஆழிமா லுக்குநற் சாமவே தற்குமெட்
     டாதரூ பத்தினிற் ...... சுடராய

காலகா லப்ரபுச் சாலுமா லுற்றுமைக்
     காகவே ளைப்புகக் ...... கழுநீராற்

காதும்வே ழச்சிலைப் பாரமீ னக்கொடிக்
     காமவேள் மைத்துனப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கோலகாலத்தை விட்டு ஆசு பாடக் கொடி கோவை பாட ...
வீண் ஆடம்பரங்கள் செய்யாமல் ஆசு கவிகள் பாடவும்,
கொடிக்கவி, கோவை என்னும் ப்ரபந்த வகைக் கவிகள் பாடவும்*,

கொடிக் கொ(ட்)டி வாதில் கோடி கூள(ம்) கவிச் சேனை
சாடக் கெடிக் கூறு காளக் கவிப் புலவோன் யான்
... காக்கைக்
கூட்டங்கள் போலக் கூச்சலிடும் வாதத்தில் கோடிக் கணக்கான குப்பை
போன்ற பயனற்ற கவிஞர்களின் கும்பலை வெல்வேன் என்று கீர்த்தியைக்
கூறும் பெரு மழை போலக் கவிகள் பாடவும் வல்ல புலவன் நான்.

சீல காலப் புயல் பாரிசாதம் தரு த்யாக மேருப் பொருப்பு என
ஓதும் சீதரா
... நியதியுடன் உரிய காலத்தில் பெய்யும் மேகம் என்றும்,
பாரிஜாத தெய்வ மரம் என்றும், கொடையில் மேரு மலை என்றும் (பரிசு
பெறுவோர்கள்) போற்றுகின்ற திருமால் போன்றவனே,

சித்ர வித்தாரமே செப்பிடக் கேள் எனா நிற்பதைத்
தவிர்வேனோ
... (உன் மீது) நான் சித்திரக் கவி, வித்தாரக் கவி*
பாட, நீ கேட்பாயாக என்றெல்லாம் நான் (செல்வந்தர்களிடம்) நின்று
காத்திருத்தலை ஒழிவேனோ?

ஆல காலப் பணிப் பாயல் நீளப் படுத்து ஆரவாரக் கடற்கு
இடை சாயும் ஆழி மாலுக்கு
... ஆலகால விஷத்தைக் கொண்டுள்ள
பாம்பாகிய ஆதிசேஷன் என்னும் படுக்கையில் நீண்டு படுத்து, பேரொலி
செய்யும் கடலின் மத்தியில் பள்ளி கொண்டிருப்பவனும், சக்ராயுதம்
ஏந்தியவனுமான திருமாலுக்கும்,

நல் சாம வேதற்கும் எட்டாத ரூபத்தினில் சுடர் ஆய கால
கால ப்ரபு
... நல்ல சாம வேதம் முதலான வேதத் தாமரையின் மேல்
வீற்றிருக்கும் பிரமனுக்கும் எட்டாத உருவத்தில் ஜோதி வடிவான,
காலகாலனான பிரபுவாகிய சிவ பெருமான்

சாலும் மாலுற்று உமைக்காக வேளைப் புகக் கழு நீரால் ...
மிகுதியான ஆசை கொண்டு பார்வதியை மணக்கும் பொருட்டு, தக்க
சமயத்தில் செங்கழு நீர் மலர் என்ற ஐந்தாவது பாணமாகிய நீலோற்பலம்
என்னும் பாணம் கொண்டு

காதும் வேழச் சிலைப்பாரம் மீனக் கொடிக் காம வேள்
மைத்துனப் பெருமாளே.
... (சிவபிரானைத்) தாக்கிய கரும்பு
வில்லை எந்தியவனும், பெருமை வாய்ந்த மீன் கொடியைக்
கொண்டவனுமாகிய மன்மதனுடைய மைத்துனனாகிய** பெருமாளே.


* தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:

ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,
மதுரம் - இனிமை வாய்ந்தது,
சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,
வித்தாரம் - வர்ணனை மிக்கது.


96 வகைப் ப்ரபந்தங்களுள் கொடிக்கவி, கோவை இரு வகை.


** மன்மதன் வள்ளி ஆகியோர் திருமாலின் மக்கள். வள்ளிக் கணவன்
முருகன் மன்மதனுக்கு மைத்துனன் ஆகிறான்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.244  pg 3.245  pg 3.246  pg 3.247 
 WIKI_urai Song number: 1108 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1105 - kOla kAlaththai (common)

kOlakA laththaivit tAsupA dakkodik
     kOvaipA dakkodik ...... kodivAthiR

kOdikU Lakkavic chEnaisA dakkedik
     kURukA Lakkavip ...... pulavOnyAn

seelakA lappuyaR pArisA thaththaruth
     thyAkamE rupporup ...... penavOthum

seetharA sithravith thAramE seppidak
     kELenA niRpathaith ...... thavirvEnO

AlakA lappaNip pAyalnee Lappaduth
     thAravA rakkadaR ...... kidaisAyum

AzhimA lukkunaR chAmavE thaRkumet
     tAtharU paththiniR ...... chudarAya

kAlakA laprapuc chAlumA lutRumaik
     kAkavE Laippukak ...... kazhuneerAR

kAthumvE zhacchilaip pAramee nakkodik
     kAmavEL maiththunap ...... perumALE.

......... Meaning .........

kOlakAlaththai vittu Asu pAdak kodi kOvai pAda: "To sing Asu poems without fussing about, to sing poems of prabandha variety including kodikkavi and kOvai*

kodik ko(t)ti vAthil kOdi kULa(m) kavic chEnai sAdak kedik kURu kALak kavip pulavOn yAn: and to sing poems torrentially, displaying my fame that thrashes, like the scum, millions of useless poets who argue loudly like bunches of crows, I am the only capable poet.

seela kAlap puyal pArisAtham tharu thyAka mErup poruppu ena Othum seetharA: 'You are like Lord VishNu comparable to the rain-bearing cloud that showers during the apppropriate season, like the wish-yielding divine tree PArijAtham and like the Mount MEru in terms of alms-giving' - so praise the people (who are the recipients of Your gifts);

sithra viththAramE seppidak kEL enA niRpathaith thavirvEnO: kindly hear the poems composed on You by me in the chiththira and viththAra styles" - so have I been speaking to rich people biding my time, standing at their doors; will I ever be able to shun this?

Ala kAlap paNip pAyal neeLap paduththu AravArak kadaRku idai sAyum Azhi mAlukku: Lord VishNu who slumbers amidst the roaring ocean, laying full-length on the serpent-bed, AdhisEshan, filled with the AlakAla poison, and who holds in His hand the disc as a weapon,

nal sAma vEthaRkum ettAtha rUpaththinil sudar Aya kAla kAla prapu: and Lord BrahmA, seated on the scriptural lotus, consisting of the great VEdAs including SAmavEda, were unable to discern His form of effulgence; He is Lord SivA who is the God of Death to the Lord of Death (Yaman);

sAlum mAlutRu umaikkAka vELaip pukak kazhu neerAl: to induce extreme love in that SivA for marrying Goddess PArvathi, He took the (fifth flower) blue lily as the arrow

kAthum vEzhac chilaippAram meenak kodik kAma vEL maiththunap perumALE.: and wielded it (on SivA); He holds the sugarcane as His bow and raises the staff of fish; He is Manmathan (God of Love) who is Your cousin**, Oh Great One!


* The four varieties of Tamil poetry are:

Asu (alliteration)
Mathuram (sweetness)
Chiththiram (artful presentation) and
ViththAram (description).


In the 96 varieties of prabhandams (mini-literature), kodikkavi and kOvai are two types.


** Manmathan and VaLLi are the children of Lord VishNu; therefore, VaLLi's spouse, Murugan, becomes the brother-in-law of Manmathan.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1105 kOla kAlaththai - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]