பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப் புகழ் Г0 %VIII 235 (ஊசலாடும் அலைந்து கொண்டே இருக்கும் ஐம்புலன்கள் செல்லும் (தாரியே) வழியே போய், (நின்று) . அவ்வழியையே கடைப்பிடித்து - (ஒயும் ஆறு) இத்தகைய அலைச்சல் ஒய்வுறும் படியான-வழி- ஒன்றையும் என் உள்ளம் (கருதாதோ) எண்ணாதோ' (தாதகி) ஆத்தி, சண்பகம், (பூகம்) கமுகமரம் (ஆர்) சரக்கொன்றை, (கந்தம்) நறுமணமுள்ள (மந்தாரம்) (முன் முருக்கு அல்லது) செம்பரத்தை (வாசந்தி) குருக்கத்தி, சந்தனமரம் இவைகள் நீடு விளங்கும். (சாம வேதண்டம்) கரிய நிறத்தையுடைய வள்ளி மலையில் வாசஞ் செய்பவர்களும், (வெம் கோப) கொடிய கோபத்தைக் கொண்டவர்களும், (கோதண்டம்) வில்லை ஏந்தினவர்களுமான வேடர்களின் சந்தானம்) வமிசத்தில் வளர்ந்த (மாது) பெண், (அல்லது சாமவேதண்டம் - பொன்மலையாகிய மேருவின் மீது அல்லது கிரவுஞ்சகிரியின் மீது - (வெங்கோப) மிக்க கோபங் கொண்டவனே (கோதண்ட) வில்லை ஏந்தின வேடர்களின் வமிசத்தில் வளர்ந்தமாது, அல்லது கோதண்டம் என்னும் பேரை உடைய வில்லை ஏந்தின பூரீராமரின் - திருமாலின் சந்ததியாகிய மாது). எங்கள் - எங்களுக்கு உகந்தவளாய் - பசிய திணைப்பு ததில் வாசம் செய்த குற்றமே இல்லாத வஞ்சிக்கொடி போன்றவள் ஆகிய வள்ளியின் குளிர்ந்த திருவடிகள் படுகின்ற (சேகரா) சிரசை உடையவனே தண்டையணிந்த உனது அழகிய கழலணிந்த திருவடியை விரும்பிப் பார்வதி தேவியின் பாகத்திற் பொருந்தியுள்ள ஆதிநாதன் . சிவபிரான் தொழுத (தேசிகா) குருமூர்த்தியே தேவர்களின் பெருமாளே! (ஒயுமா றொன்றையும் (என் உள்ளம்) கருதாதோ)