பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 233 முன்பு பூமியை அளந்தவரும், (பூமியை உண்டவருமான திருமாலின் மருக்னே செவ்விய பசிய (பெர்ன் மாநகரில் மா பொன் நகரில் - சிறந்த பொன்னுலகத்தில் இந்திரனுடைய செல்வமும் அழகுச் சிறப்புக்கள் எல்லாமும் நிரம்ப மேலெழுந்து விளங்கும் இன்பநிலையைக் கொண்ட (யானையை) தேவசேனையை (மணந்து) திருக்கலியாணம் செய்து கொண்டு அன்புடனே (தேவியுடன்) ஒன்றுபட்ட மனத்தினனாய் அமர்ந்து வீற்றிருப்பவனே! தேவர்கள் மிக்க பயம் கொண்டு வாட்டம் அடையும்படி பெரிய தண்டாயுதம், வாள் இவைகளுடன் எதிர்த்து வந்த சூரனுடைய (அங்கம்) உடலைப் பிளந்து, எங்கும் (வீரிட) கூச்சல் எழும்படிக் கோபித்து, அழகிய திருக்கையிலிருந்த வேல் சென்று படியும்படிச் செலுத்தின பெருமாளே! (உன்றன் மேல் உருக என்று அருள்வாப்) 1107. ஆசை மோகத்தை Sಿ மாதர்களின் கொங்கை - ஓர் அலங்கர் மலை என்றும், செவ்விய கொவ்வைக்கனி வாய் என்றும், கண்ணானது - காள கூடம் (ஆலகால விஷம்), கொடிய காலனுடைய உருவம், போர் செய்யும் மன்மத பாணம், வண்டின் கூட்டங்கள் மொய்த்து வாழும். (ஓதி) கூந்தல் - மேகம் என்றும், செவ்விய சொற்கள் - வெல்லம் (அல்லது பால்) தேன் என்றும், உவமை கூறிச் சோர்வுபட்டு, "ஓம் நமோ கந்த" என்று (உனது திருநாமத்தைக்) கூறாமல் - " கந்த நம ஐந்து முகர் தந்த முருகேச நம. குமார நம" - என்று தொழுதார்" . கந்த புரா 11-4-82 முருகவேளைத் துதி செய்யும்போது அவர் திருநாமங்களுள் வடமொழித் திருநாமங்களையே தேவர்கள் பெரிதும் உபயோகிப்பார்கள் போலும், "வால குமர குக கந்த குன்றெறி வேல மயில என வந்துகும்பிடு வான விபுதர்பதி இந்த்ரன்" என்றார் திருப்புகழில் (501): தமிழ் வடமொழி இரண்டினும் ஈடுபாடுள்ள அருணகிரியார் முருகன், குமரன், குகன், கந்தன். - சேந்தன், கடம்பன் என்னும் ஆறு திருநாமங்களில் அதிக ஈடுபாடு காட்டியுள்ளார். அவைகளுள், "கந்தன்" என்னும் திருநாமத்தை (தொடர்ச்சி 234-ம் பக்கம் பார்க்க)