திருப்புகழ் 1254 தென்றலும் அன்று  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1254 thendRalumandRu  (common)
Thiruppugazh - 1254 thendRalumandRu - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்தன தந்த தந்தன தந்த
     தந்தன தந்த ...... தனதான

......... பாடல் .........

தென்றலு மன்றி யின்றலை பொங்கு
     திண்கட லொன்று ...... மிகமோதச்

செந்தழ லென்று வெந்தழல் சிந்து
     திங்களும் வந்து ...... துணையேய

அன்றிலு மன்றி துன்றுச ரங்க
     ளைந்துமெ னெஞ்ச ...... மழியாதே

அந்தியி லென்றன் வெந்துய ரஞ்ச
     அன்பொட லங்கல் ...... தரவேணும்

வென்றிவி ளங்கு குன்றவர் வஞ்சி
     விஞ்சிய கொங்கை ...... புணர்மார்பா

வெண்டர ளங்கள் தண்டைச தங்கை
     மின்கொடி லங்கு ...... கழலோனே

கொன்றைய ணிந்த சங்கர ரன்று
     கும்பிட வந்த ...... குமரேசா

குன்றிட அண்ட ரன்றுய வென்று
     குன்றமெ றிந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தென்றலும் அன்று இன்று அலை பொங்கு திண் கடல்
ஒன்றும் மிக மோத
... தென்றல் காற்று மட்டுமன்றி, இன்றைய
தினத்தில் அலை பொங்கி வலிய கடல் ஒன்றும் மிகப் பலமாக
என்னைத் தாக்க,

செம் தழல் என்று வெம் தழல் சிந்து திங்களும் வந்து துணை
ஏய
... பொங்கி எழும் நெருப்பு என்று சொல்லும்படி கொடிய கனலைத்
தூவுகின்ற சந்திரனும் வந்து (அவைகளுக்குத்) துணையாகப் பொருந்த,

அன்றிலும் அன்றி துன்று சரங்கள் ஐந்தும் என் நெஞ்சம்
அழியாதே
... அன்றில் பறவையும், அதனுடன் நெருங்கி வந்த
(மன்மதனின்) ஐந்து மலர்ப் பாணங்களும் என்னுடைய உள்ளத்தை
அழித்து விடாமல்,

அந்தியில் என்றன் வெம் துயர் அஞ்ச அன்போடு அலங்கல்
தர வேணும்
... அந்திப் பொழுதில் வந்து, என்னுடைய கொடிய துயர்
அஞ்சி நீங்க அன்புடன் உன் மாலையைத் தந்து அருள வேண்டும்.

வென்றி விளங்கு(ம்) குன்றவர் வஞ்சி விஞ்சிய கொங்கை
புணர் மார்பா
... வெற்றி விளங்கும் வேடர்களின் பெண்ணாகிய
வள்ளியின் மேலோங்கு மார்பகங்களை அணைந்த மார்பனே,

வெண் தரளங்கள் தண்டை சதங்கை மின் கொடு இலங்கு
கழலோனே
... வெண்மையான முத்துக்களால் ஆன தண்டையும்,
சதங்கையும் மின்னலைப்போல் ஒளி வீசும் கழலை உடையவனே,

கொன்றை அணிந்த சங்கரர் அன்று கும்பிட வந்த குமரேசா ...
கொன்றை மாலையை அணிந்த சிவபெருமான் அன்று உன்னை
வணங்க, அவருக்கு உபதேசம் செய்ய வந்த குமரேசனே,

குன்றி(ட்) ட அண்டர் அன்று உய என்று குன்றம் எறிந்த
பெருமாளே.
... மனம் வேதனையால் குன்றி இருந்த தேவர்கள் அன்று
பிழைக்கும்படி வெற்றி பெற்று, கிரெளஞ்ச மலையைப் பிளந்தெறிந்த
பெருமாளே.


இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் புலவர் தம்மையே நாயகியாக
பாவிப்பதாக அமைந்தது. தென்றல், அலைகடல், நிலவு, மன்மதன், மலர்ப் பாணங்கள்,
அன்றில் முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.600  pg 3.601  pg 3.602  pg 3.603 
 WIKI_urai Song number: 1253 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1254 - thendRalum andRu (common)

thendRalu mandRi yindRalai pongu
     thiNkada londRu ...... mikamOtha

senthazha lendRu venthazhal sinthu
     thingaLum vanthu ...... thuNaiyEya

andRilu mandRi thundRuca rangaL
     ainthume nenja ...... mazhiyAthE

anthiyi lendRan venthuya ranja
     anpoda langal ...... tharavENum

vendRivi Langu kundRavar vanji
     vinjiya kongai ...... puNarmArpA

veNdara LangaL thaNdaisa thangai
     minkodi langu ...... kazhalOnE

kondRaiya Nintha sankara ranRu
     kumpida vantha ...... kumarEsA

kundRita aNda randRuya vendRu
     kundRame Rintha ...... perumALE.

......... Meaning .........

thenRalum anRu inRu alai pongu thiN kadal onRum mika mOtha: Today, along with the haunting southerly breeze, the ferocious sea too hit me with its powerful waves;

sem thazhal enRu vem thazhal sinthu thingaLum vanthu thuNai Eya: keeping company with them, the moon also splashed on me its blazing rays which felt like leaping flames of fire;

anRilum anRi thunRu sarangaL ainthum en nenjam azhiyAthE: close on the heels of the anRil bird (a kind of swan), came the five flowery arrows shot by Manmathan (God of Love) to blow my heart away; I do not want to be destroyed like this;

anthiyil enRan vem thuyar anja anpOdu alangal thara vENum: to scare away my misery, will You kindly come at dusk and offer me Your hallowed garland?

venRi viLangu(m) kunRavar vanji vinjiya kongai puNar mArpA: You hug with Your chest the prominent bosom of VaLLi, the damsel of the victorious hunters!

veN tharaLangaL thaNdai sathangai min kodu ilangu kazhalOnE: Your anklets, studded with bright white pearls, sparkle like lightning, Oh Lord!

konRai aNintha sankarar anRu kumpida vantha kumarEsA: Lord SivA, adorned with the garland of kondRai (Indian laburnum) flowers, came prostrating at Your feet when You preached to Him, Oh Lord KumarA!

kunRi(t)ta aNdar anRu uya enRu kundRam eRintha perumALE.: When the celestials were depressed in mind, You came to their rescue that day by shattering the mount Krouncha, Oh Great One!


This song is based on the Nayaka-Nayaki Bhavam, where the poet, assuming the heroine's role, expresses the pang of separation from the hero, Murugan.
The southerly breeze, waves of the sea, moonlight, the God of Love Manmathan, His flowery arrows and the bird anRil, are a few of the things that aggravate the agony of separation.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1254 thendRalum andRu - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]