திருப்புகழ் 1255 தோரண கனக  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1255 thOraNakanaga  (common)
Thiruppugazh - 1255 thOraNakanaga - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானன தனன தானன தனன
     தானன தனன ...... தனதான

......... பாடல் .........

தோரண கனக வாசலில் முழவு
     தோல்முர சதிர ...... முதிராத

தோகையர் கவரி வீசவ யிரியர்
     தோள்வலி புகழ ...... மதகோப

வாரண ரதப தாகினி துரக
     மாதிர நிறைய ...... அரசாகி

வாழினும் வறுமை கூரினு நினது
     வார்கழ லொழிய ...... மொழியேனே

பூரண புவன காரண சவரி
     பூதர புளக ...... தனபார

பூஷண நிருதர் தூஷண விபுதர்
     பூபதி நகரி ...... குடியேற

ஆரண வனச ஈரிரு குடுமி
     ஆரியன் வெருவ ...... மயிலேறு

மாரிய பரம ஞானமு மழகு
     மாண்மையு முடைய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தோரண கனக வாசலில் முழவு தோல்முரசு அதிர ...
தோரணங்கள் கட்டிய அழகிய அரண்மனை வாசலில், முழவு, தோல்
முரசு முதலிய வாத்தியம் ஒலிக்க,

முதிராத தோகையர் கவரி வீச ... இளம்பருவப் பெண்கள்
சாமரம் வீச,

வயிரியர் தோள்வலி புகழ ... புகழ்ந்து பாடும் பாடகர்கள் என்
புஜ பராக்ரமத்தைப் புகழ,

மதகோப வாரண ரத ப தாகினி துரக மாதிர நிறைய ...
மதமும் கோபமும் கொண்ட யானைகள், தேர்கள், காலாட்படைகள்,
குதிரைகள் திசை நிரம்பி விளங்க,

அரசாகி வாழினும் வறுமை கூரினு ... நான் ஓர் அரசனாகி
வாழ்ந்தாலும் சரி, வறுமை நிலை மிகுந்து பாடுபட்டாலும் சரி,

நினது வார்கழ லொழிய மொழியேனே ... உனது திவ்யமான
திருவடிகளைத் தவிர வேறு எதையும், வேறு யாரையும் புகழ மாட்டேன்.

பூரண புவன காரண ... முழு முதற் கடவுளே, உலகங்களுக்கு
மூலாதார மூர்த்தியே,

சவரி பூதர புளக தனபார பூஷண ... குறப்பெண் வள்ளியின்
மலையைப் போன்ற பெரிய இனிய மார்பகங்களை அணிந்த மார்பனே,

நிருதர் தூஷண ... அசுரர்களை நிந்தித்துக் கண்டிப்பவனே,

விபுதர் பூபதி நகரி குடியேற ... தேவர்களின் தலைவனான
இந்திரன் அமரலோகத்தில் மீண்டும் குடியேறும்படியும்,

ஆரண வனச ஈரிரு குடுமி ஆரியன் வெருவ ... வேதம்
ஓதுபவனும், தாமரையில் அமர்ந்தவனும், நான்கு குடுமிகளை
உடையவனும் ஆகிய பெரியோனாம் பிரமன் அச்சம்
கொள்ளும்படியாகவும்,

மயிலேறும் ஆரிய ... மயில் மீது ஏறிவரும் பெரியவனே,

பரம ஞானமும் அழகும் ஆண்மையும் உடைய பெருமாளே. ...
மேலான ஞானத்தையும், அழகையும், பராக்ரமத்தையும் உடைய
பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.602  pg 3.603  pg 3.604  pg 3.605 
 WIKI_urai Song number: 1254 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1255 - thOraNa kanaga (common)

thOraNa kanaka vAsalil muzhavu
     thOl muras adhira ...... mudhirAdha

thOgaiyar kavari veesa vayiriyar
     thOLvali pugazha ...... madha kOpa

vAraNaratha padhAgini thuraga
     mAdhira niRaiya ...... arasAgi

vAzhinum vaRumai kUrinu ninadhu
     vArkazha lozhiya ...... mozhiyEnE

pUraNa buvana kAraNa savari
     bUdhara puLaka ...... thanabAra

bUshaNa nirudhar dhUshaNa vibudhar
     bUpathi nagari ...... kudiyERa

AraNa vanaja eeriru kudumi
     Ariyan veruva ...... mayilERum

Ariya parama nyAnamum azhagum
     ANmaiyum udaiya ...... perumALE.

......... Meaning .........

thOraNa kanaka vAsalil muzhavu thOl muras adhira: With decorated cloisters in front of the beautiful gates of the palace where drums and other percussion instruments of leather are beaten loudly,

mudhirAdha thOgaiyar kavari veesa: with young damsels gently shaking the hand-held fans made of peacock feathers,

vayiriyar thOLvali pugazha: with eminent singers singing in praise of my valour,

madha kOpa vAraNaratha padhAgini thuraga: with rows of armies of wild and angry elephants, chariots, soldiers and horses

mAdhira niRaiya: spread out in all the directions

arasAgi vAzhinum vaRumai kUrinu: I should be ruling like a king; whether I am a king or I am in the deep distress of poverty,

ninadhu vArkazha lozhiya mozhiyEnE: I shall not praise anything or anyone else but Your hallowed feet!

pUraNa buvana kAraNa: Oh Lord who is absolutely perfect! You are the cause of this entire universe!

savari bUdhara puLaka thanabAra bUshaNa: You bejewel Your chest with the mountain-like pretty bosoms of VaLLi, the damsel of the KuRavAs!

nirudhar dhUshaNa: You condemn the demons!

vibudhar bUpathi nagari kudiyERa: Enabling IndrA, the Lord of the Celestials, to resettle in the celestial land,

AraNa vanaja eeriru kudumi Ariyan veruva: and terrifying BrahmA, the great preacher of VEdAs who is seated on the lotus and who has four tufts,

mayilERum Ariya: You mount Your peacock, Oh Wise One!

parama nyAnamum azhagum ANmaiyum udaiya perumALE.: You possess the supreme knowledge, magnificence and valour, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1255 thOraNa kanaga - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]