திருப்புகழ் 1253 தெரிவை மக்கள்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1253 therivaimakkaL  (common)
Thiruppugazh - 1253 therivaimakkaL - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தத்த தய்ய தனன தத்த தய்ய
     தனன தத்த தய்ய ...... தனதான

......... பாடல் .........

தெரிவை மக்கள் செல்வ முரிமை மிக்க வுண்மை
     தெரிவ தற்கு உள்ள ...... முணராமுன்

சினமி குத்த திண்ணர் தனிவ ளைத்து வெய்ய
     சிலுகு தைத்து வன்மை ...... சிதையாமுன்

பரவை புக்கு தொய்யு மரவ ணைக்குள் வைகு
     பரம னுக்கு நல்ல ...... மருகோனே

பழுதில் நிற்சொல் சொல்லி யெழுதி நித்த முண்மை
     பகர்வ தற்கு நன்மை ...... தருவாயே

இருகி ரிக்க ளுள்ள வரைத டிக்கு மின்னு
     மிடியு மொய்த்த தென்ன ...... எழுசூரை

எழுக டற்கு ளுள்ளு முழுகு வித்து விண்ணு
     ளிமைய வர்க்கு வன்மை ...... தருவோனே

அரிவை பக்க முய்ய வுருகி வைக்கு மைய
     ரறிய மிக்க வுண்மை ...... யருள்வோனே

அறிவி னுக்கு ளென்னை நெறியில் வைக்க வல்ல
     அடிய வர்க்கு நல்ல ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தெரிவை மக்கள் செல்வம் உரிமை மிக்க உண்மை தெரிவதற்கு
உள்ளம் உணராமுன்
... மனைவி, பிள்ளைகள், செல்வம், இவற்றுக்கு
உரிமையாக இருக்கும் தன்மை எவ்வளவு என்னும் பெரும் உண்மையை
தெரிந்து கொள்ள வேண்டுமென்று என் மனம் உணர்ந்து கொள்ளுவதற்கு
முன்னே, (இளம் பருவத்தில் இருந்து)

சினம் மிகுத்த திண்ணர் தனி வளைத்து வெய்ய சிலுகு தைத்து
வன்மை சிதையா முன்
... கோபம் மிகுந்த, வலிமை வாய்ந்த
ஐம்புலன்களும் என்னைத் தனிப்பட வளைப்பதனால், கொடிய துன்பக்
குழப்பங்கள் அழுந்தப் பொருந்த, என் வலிமை அழிவு படுவதற்கு
முன்னர்,

பரவை புக்கு தொய்யும் அரவு அணைக்குள் வைகு(ம்)
பரமனுக்கு நல்ல மருகோனே
... திருப்பாற் கடலில் புகுந்து துவட்சி
உறும் பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டிருக்கும் மேலானவனாகிய
திருமாலுக்கு நல்ல மருகனே,

பழுது இல் நின் சொல் சொல்லி எழுதி நித்தம் உண்மை
பகர்வதற்கு நன்மை தருவாயே
... குற்றம் என்பதே இல்லாத உன்
திருப்புகழ்ச் சொற்களைச் சொல்லுதற்கும், எழுதுவதற்கும், நாள்தோறும்
உண்மையைப் பேசுவதற்கும் வேண்டிய நற்குணத்தைத் தந்து அருளுக.

இரு கிரிக்கள் உள்ளவரை தடிக்கும் மின்னும் இடியும்
மொய்த்தது என்ன எழு சூரை
... கிரெளஞ்சம், எழு கிரி என்ற
இரண்டு மலைகளுக்குள் வாசம் செய்த அசுரர்களையும், மிக்கு எழும்
மின்னலும் இடியும் நெருங்கி வருவது போல் போருக்கு எழுந்து வந்த
சூரனையும்,

எழு கடற்குள் உள்ளும் முழுகுவித்து விண்ணுள் இமையவர்க்கு
வன்மை தருவோனே
... ஏழு கடல்களிலும் முழுகும்படித் தள்ளி,
விண்ணுலகத்தில் உள்ள தேவர்களுக்கு வலிமையைத் தந்தவனே,

அரிவை பக்கம் உய்ய உருகி வைக்கும் ஐயர் அறிய மிக்க
உண்மை அருள்வோனே
... (பார்வதி என்னும்) அரிவையை, உலகம்
உய்ய, அவளுடைய தவத்துக்கு இரங்கி, தமது இடது பக்கத்தில்
வைத்துள்ள தலைவரான சிவபெருமான் அறியும்படி சிறப்புற்ற
பிரணவத்தின் உண்மைப் பொருளை அவருக்கு உபதேசித்தவனே,

அறிவினுக்குள் என்னை நெறியில் வைக்க வல்ல அடியவர்க்கு
நல்ல பெருமாளே.
... என்னை ஞான நிலையில் ஒழுங்கான நிலையில்
வைக்க வல்லவனும், அடியவர்களுக்கு நல்லவனும் ஆகிய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.598  pg 3.599  pg 3.600  pg 3.601 
 WIKI_urai Song number: 1252 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1253 - therivai makkaL (common)

therivai makkaL selva murimai mikka vuNmai
     theriva thaRku uLLa ...... muNarAmun

sinami kuththa thiNNar thaniva Laiththu veyya
     siluku thaiththu vanmai ...... sithaiyAmun

paravai pukku thoyyu marava NaikkuL vaiku
     parama nukku nalla ...... marukOnE

pazhuthil niRchol solli yezhuthi niththa muNmai
     pakarva thaRku nanmai ...... tharuvAyE

iruki rikka LuLLa varaitha dikku minnu
     midiyu moyththa thenna ...... ezhucUrai

ezhuka daRku LuLLu muzhuku viththu viNNu
     Limaiya varkku vanmai ...... tharuvOnE

arivai pakka muyya vuruki vaikku maiya
     raRiya mikka vuNmai ...... yaruLvOnE

aRivi nukku Lennai neRiyil vaikka valla
     adiya varkku nalla ...... perumALE.

......... Meaning .........

therivai makkaL selvam urimai mikka uNmai therivathaRku uLLam uNarAmun: (Right from my young age,) before my mind could comprehend the real extent of my right, if any, to my wife, children and wealth,

sinam mikuththa thiNNar thani vaLaiththu veyya siluku thaiththu vanmai sithaiyA mun: and before my strength is drained out by the oppressive miseries and terrible confusions caused by the five angry and powerful sensory organs that besiege me captively,

paravai pukku thoyyum aravu aNaikkuL vaiku(m) paramanukku nalla marukOnE: Oh, the good nephew of Lord Vishnu, who is the Supreme One slumbering on a slumping and coiled snake-bed in the middle of the milky ocean,

pazhuthu il nin sol solli ezhuthi niththam uNmai pakarvathaRku nanmai tharuvAyE: kindly grant me the good sense to say, write and chant the words of Your unblemished glory and to speak only the truth everyday!

iru kirikkaL uLLavarai thadikkum minnum idiyum moyththathu enna ezhu cUrai: The demons who inhabited the mount Krouncha and the seven hills and the demon SUran, who came to the battlefield like the flashy lightning and the thunder confronting together,

ezhu kadaRkuL uLLum muzhukuviththu viNNuL imaiyavarkku vanmai tharuvOnE: were all pushed by You down the seven seas to drown, and You gave strength to the DEvAs in the celestial land, Oh Lord!

arivai pakkam uyya uruki vaikkum aiyar aRiya mikka uNmai aruLvOnE: Goddess PArvathi has been placed concorporate on His left side for the benefit of the world and in recognition of Her penance; to the full enlightenment of that Leader, Lord SivA, You preached to Him the true meaning of the PraNava ManthrA, Oh Lord!

aRivinukkuL ennai neRiyil vaikka valla adiyavarkku nalla perumALE.: You are the One who is capable of keeping me on the righteous path of Knowledge; and You are good to Your devotees, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1253 therivai makkaL - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]