திருப்புகழ் 1132 இரவினிடை வேள்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1132 iravinidaivEL  (common)
Thiruppugazh - 1132 iravinidaivEL - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தான தத்த தந்த
     தனதனன தான தத்த தந்த
          தனதனன தான தத்த தந்த ...... தனதான

......... பாடல் .........

இரவினிடை வேள்தொ டுத்து டன்று
     முறுகுமலர் வாளி யைப்பி ணங்கி
          யிருகுழையு மோதி யப்ப டங்கு ...... கடலோடே

எதிர்பொருது மானி னைத்து ரந்து
     சலதிகிழி வேல்த னைப்பொ ருந்தி
          யினியமுத ஆல முற்ற கண்கள் ...... வலையாலே

முரணிளைஞ ராவி யைத்தொ டர்ந்து
     விசிறிவளை மாத ரைக்க லந்து
          மொழியதர கோவை யிக்க ருந்தி ...... யமுதாகு

முகிழ்முகுளி தார வெற்ப ணைந்து
     சுழிமிதுன வாவி யிற்பு குந்து
          முழுகியழி யாம னற்ப தங்கள் ...... தரவேணும்

திரையுலவு சாக ரத்தி லங்கை
     நகரிலுறை ராவ ணற்கி யைந்த
          தெசமுடியு மீரு பத்தொ ழுங்கு ...... திணிதோளுஞ்

சிதையவொரு வாளி யைத்து ரந்த
     அரிமருக தீத றக்க டந்து
          தெளிமருவு கார ணத்த மர்ந்த ...... முருகோனே

அரணமதிள் சூழ்பு ரத்தி ருந்து
     கருதுமொரு மூவ ருக்கி ரங்கி
          யருளுமொரு நாய கற்ப ணிந்த ...... குருநாதா

அகல்முடிவை யாதி யைத்தெ ளிந்து
     இரவுபக லாக நெக்க விழ்ந்த
          அடியவர்கள் பாட லுக்கி சைந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

(முதல் 6 வரிகள் பெண்களின் கண்களை வருணிப்பன).

இரவின் இடை வேள் தொடுத்து உடன்று முறுகு மலர்
வாளியைப் பிணங்கி
... இரவுப் பொழுதில் மன்மதன் கையில்
எடுத்து கோபித்து வலிமையாகச் செலுத்தும் மலர்ப் பாணங்களுடன்
மாறுபட்டு (அந்தப் பாணங்களுக்கு எதிர் பாணங்களாக விளங்கி),

இரு குழையும் மோதி அப்பு அடங்கு கடலோடே எதிர்
பொருது மானினைத் துரந்து
... இரண்டு காதில் உள்ள
குண்டலங்களையும் தாக்கி, நீர் பரவியுள்ள கடலுடன் எதிர்த்து
மாறுபட்டு (அதனினும் பெரியதாய் ஆழமாய் விளங்கி), (தமது
பார்வையின் அழகால்) மான்கள் எல்லாம் (வெட்கிக் காட்டுக்குள்)
புகும்படிச் செய்து,

சலதி கிழி வேல் தனைப் பொருந்தி இனி அமுத ஆலம் உற்ற
கண்கள் வலையாலே
... கடலைக் கிழித்த (வற்றும்படி செய்த)
வேலாயுதத்துக்கு இணையாகி, பின்னும் அமுதத்தையும் ஆலகால
விஷத்தையும் தம்மிடம் கொண்ட கண்கள் எனப்படும் வலையைக்
கொண்டு,

முரண் இளைஞர் ஆவியைத் தொடர்ந்து விசிறி வளை
மாதரைக் கலந்து
... வலிமை மிக்க வாலிபர்களுடைய உயிர் மீது
தொடர்ந்து (கண் வைத்துப்) பற்றி வளைத்துத் தம் வசப்படுத்தும்
விலைமாதர்களுடன் கூடி,

மொழி அதர கோவை இக்கு அருந்தி அமுதாகு(ம்) முகிழ்
முகுளி தார(ம்) வெற்பு அணைந்து
... அவர்களுடைய (குதலைப்)
பேச்சு புறப்படும் கொவ்வைப் பழம் போன்று சிவந்த வாயிதழின் கரும்பின்
சுவையை உண்டு, அமுதம் பொதிந்துள்ள, அரும்பும் மொட்டுப் போன்ற
முத்து மாலையை அணிந்த, மலை பொன்ற மார்பகத்தை அணைந்து,

சுழி மிதுன வாவியில் புகுந்து முழுகி அழியாமல் நற் பதங்கள்
தர வேணும்
... தொப்புள் என்னும் இன்பக் குளத்தில் படிந்து, முழுகி
அழிந்து போகாமல் உனது நன்மை தரும் திருவடியைத் தரவேண்டும்.

திரை உலவு சாகரத்து இலங்கை நகரில் உறை ராவணற்கு
இயைந்த தெச முடியும் ஈரு பத்து ஒழுங்கு திணி தோளும்
சிதைய ஒரு வாளியைத் துரந்த அரி மருக
... அலைகள் வீசுகின்ற
கடல் சூழ்ந்த இலங்கையில் வாழ்ந்துவந்த ராவணனுடைய பத்து
தலைகளும், இருபது ஒழுங்காய் அமைந்த வலிமையான தோள்களும்
அழிபட, ஒப்பற்ற அம்பைச் செலுத்திய திருமாலின் மருகனே,

தீது அறக் கடந்து தெளி மருவு காரணத்து அமர்ந்த
முருகோனே
... தெளிவான அறிவு பொருந்திய மூலப் பொருளில்
அமைந்து விளங்கும் முருகனே,

அரணம் மதிள் சூழ் புரத்து இருந்து கருதும் ஒரு மூவருக்கு
இரங்கி அருளும் ஒரு நாயகன் பணிந்த குரு நாதா
...
காவல்கள் கொண்ட மதில்கள் சூழ்ந்திருந்த திரிபுரத்தில் இருந்து தம்மைத்
தியானித்து வணங்கிய மூன்று* சிறந்த பக்தர்களுக்கு இரக்கம் கொண்டு
(திரிபுரத்தை எரித்தபோதும்) அவர்களுக்கு அருள் புரிந்த ஒப்பற்ற
நாயகனான சிவபெருமான் வணங்கிய குரு நாதா,

அகல் முடிவை ஆதியைத் தெளிந்து இரவு பகலாக நெக்கு
அவிழ்ந்த அடியவர்கள் பாடலுக்கு இசைந்த பெருமாளே.
...
பரந்த முடிவுக்கு முடிவாய், ஆதிக்கு ஆதியாய் உள்ள பொருள்
இன்னதெனத் தெரிந்து, இரவும் பகலும் உள்ளம் பக்தியால் நெகிழ்ந்து
உருகும் அடியார்களுடைய பாடல்களை விரும்பிக் கேட்டு மகிழும்
பெருமாளே.


* வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்கள் பொன்,
வெள்ளி, இரும்பு இவைகளால் ஆகிய திரிபுரங்கள் என்ற பறக்கும் பட்டணங்களைக்
கொண்டு அனைவரின் மேலே விழுந்துத் துன்புறுத்தினர். ஆதலால் சிவபெருமான்
அவர்களை எரித்தபோது, சிவ வழிபாட்டால் மாளாது பிழைத்த மூவரில், இருவர்
கோயில் காவலாளர் ஆனார்கள். மற்றவர் முழவு முழக்கும் பேற்றினை அடைந்தார்
- சுந்தரர் தேவாரம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.312  pg 3.313  pg 3.314  pg 3.315 
 WIKI_urai Song number: 1135 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1132 - iravinidai vEL (common)

iravinidai vELtho duththu danRu
     muRukumalar vALi yaippi Nangi
          yirukuzhaiyu mOthi yappa dangu ...... kadalOdE

ethirporuthu mAni naiththu ranthu
     salathikizhi vEltha naippo runthi
          yiniyamutha Ala mutRa kaNkaL ...... valaiyAlE

muraNiLainja rAvi yaiththo darnthu
     visiRivaLai mAtha raikka lanthu
          mozhiyathara kOvai yikka runthi ...... yamuthAku

mukizhmukuLi thAra veRpa Nainthu
     suzhimithuna vAvi yiRpu kunthu
          muzhukiyazhi yAma naRpa thangaL ...... tharavENum

thiraiyulavu sAka raththi langai
     nakariluRai rAva NaRki yaintha
          thesamudiyu meeru paththo zhungu ...... thiNithOLum

chithaiyavoru vALi yaiththu rantha
     arimaruka theetha Rakka danthu
          theLimaruvu kAra Naththa marntha ...... murukOnE

araNamathiL cUzhpu raththi runthu
     karuthumoru mUva rukki rangi
          yaruLumoru nAya kaRpa Nintha ...... gurunAthA

akalmudivai yAthi yaiththe Linthu
     iravupaka lAka nekka vizhntha
          adiyavarkaL pAda lukki saintha ...... perumALE.

......... Meaning .........

(The first six lines of the song describe the eyes of women).

iravin idai vEL thoduththu udanRu muRuku malar vALiyaip piNangi: In contrast to the flowery arrows wielded angrily and with intensity by Manmathan (God of Love) from his hand (acting as rival arrows),

iru kuzhaiyum mOthi appu adangu kadalOdE ethir poruthu mAninaith thuranthu: attacking the two swinging ear-studs, differing from the sea with abundant water (feeling wider and deeper), driving all the deer away (shying into the forest being belittled by their eyes' eminent beauty),

salathi kizhi vEl thanaip porunthi ini amutha Alam utRa kaNkaL valaiyAlE: looking like the spear that tore the sea (drying it out), their eyes contain the nectar and AlakAla poison together within them; with such a net of their eyes,

muraN iLainjar Aviyaith thodarnthu visiRi vaLai mAtharaik kalanthu: they persecute the lives of young and strong men, by hooking them (with those eyes) and bring them under their control; making love to such whores,

mozhi athara kOvai ikku arunthi amuthAku(m) mukizh mukuLi thAra(m) veRpu aNainthu: imbibing the sugarcane-like sweet saliva oozing from the reddish, kovvai-fruit-like lips of their (babbling) mouth, hugging their nectar-filled bosom adorned with a string of bud-like pearls,

suzhi mithuna vAviyil pukunthu muzhuki azhiyAmal naR pathangaL thara vENum: and sinking in the blissful pond of their navel, I do not wish to be destroyed by drowning; for that, kindly grant me Your benevolent and hallowed feet, Oh Lord!

thirai ulavu sAkaraththu ilangai nakaril uRai rAvaNaRku iyaintha thesa mudiyum eeru paththu ozhungu thiNi thOLum chithaiya oru vALiyaith thurantha ari maruka: He lived in LankA surrounded by wavy seas; the ten heads and twenty well-formed shoulders of that RAvaNan were knocked down by the unique arrow wielded by RAmA; and You are the nephew of that Lord VishNu!

theethu aRak kadanthu theLi maruvu kAraNaththu amarntha murukOnE: Oh Lord MurugA, You prevail in the fundamental principle of clear and lucid Knowledge!

araNam mathiL cUzh puraththu irunthu karuthum oru mUvarukku irangi aruLum oru nAyakan paNintha guru nAthA: In Thiripuram surrounded by protective fortress walls, there lived three* saivite devotees who worshipped Him, constantly meditating upon Him; (even though He burnt down Thiripuram,) He took pity on the three devotees and graciously saved their lives; He is the unique Lord SivA who prostrated at Your feet as His Master, Oh Lord!

akal mudivai Athiyaith theLinthu iravu pakalAka nekku avizhntha adiyavarkaL pAdalukku isaintha perumALE.: Realising the wide principle that is older than the oldest and is the end of all ends, these devotees sing hymns day and night, with a melting heart; You are delighted to listen to those songs, Oh Great One!


* Three demons named VidhyunmAli, ThArakAtchan and KamalAkshan created in the sky three floating islands made of gold, silver and iron (collectively called Thiripuram). They were falling all over people in the world, harassing and killing them. When Lord SivA burnt them down, He spared three of their residents who were totally devoted to the Lord. Two of them became the guards of Lord SivA's shrine; the third one became the drummer during the Cosmic Dance of SivA - ThEvAram by Sundarar.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1132 iravinidai vEL - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]