திருப்புகழ் 1131 இடர் மொய்த்து  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1131 idarmoiththu  (common)
Thiruppugazh - 1131 idarmoiththu - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதத்தத் தனதத்தத் தனதத்தத் தனதத்தத்
     தனதத்தத் தனதத்தத் ...... தனதான

......... பாடல் .........

இடர்மொய்த்துத் தொடரிற்பொய்க் குடிலக்கிக் கிடையிட்டிட்
     டினிமைச்சுற் றமுமற்றைப் ...... புதல்வோரும்

இனமொப்பித் திசையச்சொற் பலகத்திட் டிழியப்பிற்
     கிடையத்துக் கமும்விட்டிட் ...... டவரேக

விடமெத்தச் சொரிசெக்கட் சமன்வெட்டத் தனமுற்றிட்
     டுயிர்வித்துத் தனையெற்றிக் ...... கொடுபோமுன்

வினைபற்றற் றறநித்தப் புதுமைச்சொற் கொடுவெட்சிப்
     புயவெற்றிப் புகழ்செப்பப் ...... பெறுவேனோ

அடர்செக்கர்ச் சடையிற்பொற் பிறையப்புப் புனையப்பர்க்
     கறிவொக்கப் பொருள்கற்பித் ...... திடுவோனே

அலகைக்குட் பசிதித்தப் பலகைக்கொத் ததுபட்டிட்
     டலறக்குத் துறமுட்டிப் ...... பொரும்வேலா

கடலுக்குட் படுசர்ப்பத் தினில்மெச்சத் துயில்பச்சைக்
     கிரிகைக்குட் டிகிரிக்கொற் ...... றவன்மாயன்

கமலத்திற் பயில்நெட்டைக் குயவற்கெட் டிசையர்க்குக்
     கடவுட்சக் கிரவர்த்திப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

இடர் மொய்த்துத் தொடர் இல் பொய்க் குடில் அக்கிக்கு இடை
இட்டிட்டு
... துன்பங்கள் மொய்த்து நெருங்கித் தொடரும் இடமாகிய
நிலையில்லாத உடல் நெருப்புக்கு இடையில் வைக்கப்பட்டு,

இனிமைச் சுற்றமும் மற்றைப் புதல்வோரும் இனம் ஒப்பித்து
இசையச் சொல் பல கத்திட்டு இழிய
... இனிய சுற்றத்தினரும்,
பின்னும் புதல்வர்களும் தங்கள் தங்கள் உறவைச் சொல்லி
அச்சமயத்துக்கு ஏற்ற சொற்கள் பலவற்றைச் சொல்லி அழுது தீர்க்க,

பிற்கு இடையத் துக்கமும் விட்டிட்டு அவர் ஏக ... பின்பு மனம்
தளர்ந்து இருந்த துக்கத்தையும் விட்டுவிட்டு அந்தச் சுற்றத்தினர் போக,

விடம் மெத்தச் சொரி செக்கண் சமன் வெட்டத் தனம்
உற்றிட்டு
... விஷம் அதிகமாகச் சொரிகின்ற சிவந்த கண்களை
உடைய யமன் அழிக்க வேண்டும் என்ற பண்பை உணர்த்தும்
தன்மையை அடைந்து

உயிர் வித்துத்தனை எற்றிக் கொடு போ முன் வினை பற்று
அற்று அற
... உயிராகிய விதையை நீக்கிக் கொண்டு போவதற்கு
முன்பாக, எனது வினையும் பற்றும் அற்று ஒழிந்து நீங்க,

நித்தப் புதுமைச் சொல்கொடு வெட்சிப் புய(ம்) வெற்றிப் புகழ்
செப்பப் பெறுவேனோ
... நாள் தோறும் புதிய புதிய சொற்களைக்
கொண்டு, வெட்சி மாலை அணிந்த உனது திருப் புயங்களின் வெற்றிப்
புகழை* உரைக்கும் பாக்கியத்தைப் பெறுவேனோ?

அடர் செக்கர்ச் சடையில் பொன் பிறை அப்புப் புனை
அப்பர்க்கு
... நெருங்கியுள்ள சிறந்த சடையில் அழகிய பிறைச்
சந்திரனும் கங்கையும் அணிந்த தந்தையாகிய சிவபெருமானுக்கு

அறிவு ஒக்கப் பொருள் கற்பித்திடுவோனே ... ஞானம் கூடிய
பிரணவப் பொருளை உபதேசித்தவனே,

அலகைக்குள் பசி தித்தப் பலகைக் கொத்தது பட்டிட்டு
அலறக் குத்து உற முட்டிப் பொரும் வேலா
... பேய்க்
கூட்டங்களுள் பசி அடங்கும்படி பல பேய்களின் கைகளும்
ஒன்றோடொன்று பிணங்களைக் கொத்தும் போது ஒன்றின் கை ஒன்றின்
மேல் கொத்துப்பட, அந்த வலியால் பேய்கள் கூச்சலிடவும், ஒன்றை
ஒன்று குத்திடும்படியாகவும், அசுரர்களை எதிர்த்துச் சண்டை செய்த
வேலனே.

கடலுக்குள் படு சர்ப்பத்தினில் மெச்சத் துயில் பச்சைக் கிரி
கைக்குள் திகிரிக் கொற்றவன் மாயன்
... பாற்கடலில் அமைந்த
ஆதிசேஷன் மேல் அடியார்கள் போற்றித் துதிக்க அறி துயில் கொண்டுள்ள
பச்சை மலை போன்ற வடிவை உள்ளவனும், திருக் கரத்தில் சக்கரம்
ஏந்திய அரசனும் ஆகிய திருமாலுக்கும்,

கமலத்தில் பயில் நெட்டைக் குயவற்கு எண் திசையர்க்குக்
கடவுள் சக்கிரவர்த்திப் பெருமாளே.
... தாமரையில் வீற்றிருக்கும்
நெடிய படைப்பவனாகிய பிரமனுக்கும், எட்டு திக்குகளிலும் உள்ள
மற்றவர்களுக்கும் கடவுள் சக்கிரவர்த்தியாக விளங்கும் பெருமாளே.


* அருணகிரிநாதர் அருளிய திருவகுப்பில் ஒன்றாகிய 'புய வகுப்பு' அவர் முருகனின்
புய வெற்றிப் புகழ் பாடியதை உணர்த்தும்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.308  pg 3.309  pg 3.310  pg 3.311  pg 3.312  pg 3.313 
 WIKI_urai Song number: 1134 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1131 - idar moiththu (common)

idarmoyththuth thodariRpoyk kudilakkik kidaiyittit
     tinimaicchut RamumatRaip ...... puthalvOrum

inamoppith thisaiyacchoR palakaththit tizhiyappiR
     kidaiyaththuk kamumvittit ...... tavarEka

vidameththac chorisekkat samanvettath thanamutRit
     tuyirviththuth thanaiyetRik ...... kodupOmun

vinaipatRat RaRaniththap puthumaicchoR koduvetchip
     puyavetRip pukazhseppap ...... peRuvEnO

adarsekkarc chadaiyiRpoR piRaiyappup punaiyappark
     kaRivokkap poruLkaRpith ...... thiduvOnE

alakaikkut pasithiththap palakaikkoth thathupattit
     talaRakkuth thuRamuttip ...... porumvElA

kadalukkut padusarppath thinilmecchath thuyilpacchaik
     kirikaikkut tikirikkot ...... RavanmAyan

kamalaththiR payilnettaik kuyavaRket tisaiyarkkuk
     kadavutchak kiravarththip ...... perumALE.

......... Meaning .........

idar moyththuth thodar il poyk kudil akkikku idai ittittu: This body is the place where all miseries gang up and stay for good relentlessly; this myth of a body will be eventually placed amidst burning fire;

inimaic chutRamum matRaip puthalvOrum inam oppiththu isaiyac chol pala kaththittu izhiya: dear relatives and sons will cry their hearts out, stating their relationship appropriately in many a word;

piRku idaiyath thukkamum vittittu avar Eka: later, the disheartened relatives will depart, leaving behind their grief;

vidam meththac chori sekkaN saman vettath thanam utRittu: Yaman, the God of Death, with reddish eyes that emit excessive poison, with a determination to destroy,

uyir viththuththanai etRik kodu pO mun vinai patRu atRu aRa: will pluck away the seed of my life; before that event, in order that my past deeds and attachments perish,

niththap puthumaic cholkodu vetchip puya(m) vetRip pukazh seppap peRuvEnO: will I be blessed with the privilege of singing everyday, using fresh words, the greatness of Your triumphant and hallowed shoulders*, adorned with vetchi garland?

adar sekkarch chadaiyil pon piRai appup punai apparkku: He is Your Father, Lord SivA, who wears the beautiful crescent moon and River Gangai on His thick, hallowed and matted hair;

aRivu okkap poruL kaRpiththiduvOnE: You taught Him the meaning of PraNava ManthrA which is full of Knowledge!

alakaikkuL pasi thiththap palakaik koththathu pattittu alaRak kuththu uRa muttip porum vElA: The hunger of herds of devils was satisfied when many of them, vying with one another, laid their hands and began plucking the corpses; in that scuffle, the devils screamed in pain and resorted to a brawl; such was the mighty war You waged against the demons, with Your spear, Oh Lord!

kadalukkuL padu sarppaththinil mecchath thuyil pacchaik kiri kaikkuL thikirik kotRavan mAyan: He is in the form of a green mountain, slumbering consciously on the serpent-bed of AdhisEshan over the milky ocean, adored by His devotees; He is Lord VishNu holding a disc in His hand;

kamalaththil payil nettaik kuyavaRku eN thisaiyarkkuk kadavuL sakkiravarththip perumALE.: He is the tall creator, Lord BrahmA, seated on a lotus; to these two and for all those in the eight directions, You are the Emperor-Lord, Oh Great One!


* AruNagirinAthar has sung special songs - Puyavakuppu- praising the glory of the hallowed shoulders of Lord Murugan.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1131 idar moiththu - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]