பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப் புகழ் உரை 307 காவல்கொண்ட மதில்கள் சூழ்ந்திருந்த திரிபுரத்தில் இருந்து, (கருதும்) தம்மைத் தியானித்து வணங்கி யிருந்த ஒப்பற்ற (பக்தர்களாம்) மூவர்மீது இரக்கம் கொண்டு அவர்களுக்கு அருள் பாலித்த நாயகன் (சிவபிரான்) வணங்கின குருமூர்த்தியே! (அகல்) பரந்துள்ள (முடிவை - ஆதியை) முடிவுக்கு முடிவாய் ஆதிக்கு ஆதியாய் உள்ள பொருள் இன்னதெனத் தெளிந்து, இரவும், பகலுமாக - எப்போதும் - நெக்கு அவிழ்ந்த உள்ளம் (பக்தியால்) நெகிழ்ந்து உருகும் அடியார்களுடைய பாடல்களை (இசைந்த) உடன் பாட்டுடன் கேட்டு மகிழும் பெருமாளே! (நற் பதங்கள் தரவேணும்) 1136. இரவொடும் பகலே - இரவும் பகலுமாக (மாறாதே) நீங்குதலின்றி - எப்போதும் (அனுதினம்) நாள்தோறும், துக்கம் (ஒயாதே) ஒய்தலின்றி - இடைவிடாமல் பிடிக்க (எரியும் உந்தியினாலே தீப்போல எரிகின்ற வயிற்றால் - பசி என்னும் அக்கினியால் - மாலே பெரிதாகி - ஆசைகளே பெரிதாய் வளர்ந்து (அதனால்) (இரை கொளும்படி) உணவு வேண்டி, (ஊடே) வாழ்க்கையினுாடே - வாழ்விலே, (பாடே) உழைப்பே வருத்தமே அதிகமாக அடைந்து, ஒழியாதே - வாதே - வாதே ஒழியாதே வாது பேசுதலிலேயே தருக்கம் பேசுதலிலேயே நீங்குதல் இல்லாமல் எப்போதும் காலம் கழித்து, (இடைகளின் சில நாளே போயே) (இவ்வாறு வாழ்க்கையின்) மத்தியிலே சிலகாலம் கழியப், (பின்பு) வயது மூத்து. நரைகளும் பெரிதாயே போயே - நரைகள் அதிகமாகிப் போய்க் - கிழவன் என்று ஒரு பேரே (சார்வே) - சாரவே வந்து கூடிட நடையும் நேரின்றிக் கோணலாய்ப், பலவித தாறுமாறுதலாகக் கீழே விழுந்து விடுவதாய் X ஏமாறாதே நடன குஞ்சித விட கூட முயல வேண்டும்: அங்ங்ணம் கூடாது அழிவேனோ - எனவும் பொருள் தொனிக்கப் பார்க்கலாம்.