திருப்புகழ் 909 குயிலோ மொழி  (வயலூர்)
Thiruppugazh 909 kuyilOmozhi  (vayalUr)
Thiruppugazh - 909 kuyilOmozhi - vayalUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதானன தனதானன தனதானன தனதானன
     தனதானன தனதானன ...... தந்ததான

......... பாடல் .........

குயிலோமொழி அயிலோவிழி கொடியோஇடை பிடியோநடை
     குறியீர்தனி செறியீரினி ...... யென்றுபாடிக்

குனகாவடி பிடியாவிதழ் கடியாநகம் வகிராவுடை
     குலையாவல்கு லளையாவிரு ...... கொங்கைமீதிற்

பயிலாமன மகிழ்மோகித சுகசாகர மடமாதர்கள்
     பகையேயென நினையாதுற ...... நண்புகூரும்

பசுபாசமு மகிலாதிக பரிபூரண புரணாகர
     பதிநேருநி னருளால்மெயு ...... ணர்ந்திடேனோ

வெயில்வீசிய கதிராயிர வருணோதய விருணாசன
     விசையேழ்பரி ரவிசேயெனு ...... மங்கராசன்

விசிகாகவ மயல்பேடிகை படுபோதுசன் னிதியானவன்
     விதிதேடிய திருவாளிய ...... ரன்குமாரா

அயலூருறை மயிலாபல கலைமானுழை புலிதோல்களை
     யகிலாரம தெறிகாவிரி ...... வண்டல்மேவும்

அதிமோகர வயலூர்மிசை திரிசேவக முருகேசுர
     அமராபதி யதில்வாழ்பவர் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

குயிலோ மொழி அயிலோ விழி கொடியோ இடை
பிடியோநடை குறியீர் தனி செறியீர் இனி என்று பாடி
... பேச்சு
குயிலின் குரல் தானோ, கண்கள் அம்போ, இடுப்பு கொடியோ, நடை
பெண் யானை போன்றதோ, இந்த அழகைத் தெரிந்து கொள்ளுங்கள்,
இனிமேல் தனியாக வந்து நெருங்கிப் பழகுங்கள் என்றெல்லாம்
(விலைமாதர்களைப்) புகழ்ந்து பாடி,

குனகா அடி பிடியா இதழ் கடியா நகம் வகிரா உடை
குலையா அல்குல் அளையா இரு கொங்கை மீதில் பயிலா
மனம் மகிழ் மோகித(ம்) சுக சாகர மட மாதர்கள்
... கொஞ்சிப்
பேசி அவர்களுடைய காலைப் பிடித்தும், வாயிதழைக் கடித்தும், நகத்தால்
கீறியும், ஆடையைக் கலைத்தும், பெண்குறியில் திளைத்தும், இரண்டு
மார்பகங்கள் மீது நெருங்கிப் பழகியும் மனம் களிப்பதற்கு
இடமாயுள்ளவர்களும், காம மயக்க சுகக் கடல் போல் உள்ளவர்களுமான
அழகான விலைமாதர்கள்

பகையே என நினையாது உற நண்பு கூரும் பசு பாசமும்
அகிலா அதிக பரிபூரண புரண ஆகர பதி நேரு(ம்) நின்
அருளால் மெய் உணர்ந்திடேனோ
... பகைத்து விலக்கத் தக்கவர்கள்
என்று நான் நினைக்காமல் இருக்கிறேனே, பசு (ஆன்மா), பாசம்
(ஆணவம், கர்மம், ஆகிய தளையாகிய மும்மலக்கட்டு) ஆக
எல்லாவற்றுக்கும் மேம்பட்ட, ஆதரவை மிகக் காட்டும் நிறை பொருளே,
ஒளிக்கு இருப்பிடமானவனே, இறைவனாகிய உன்னிடத்தில் உள்ள
திருவருளால் உண்மையான மெய்ப் பொருளை நான் உணர
மாட்டேனோ?

வெயில் வீசிய கதிர் ஆயிர(ம்) அருணோதய இருள்
நாசனவிசை ஏழ் பரி ரவி சேய் எனும் அங்க ராசன் விசிக
ஆகவம் அயல் பேடி கை படு போது சன்னிதியானவன் விதி
தேடிய திருவாளி அரன் குமாரா
... ஒளி வீசும் ஆயிரக் கணக்கான
கிரணங்களை வீசுபவனும், உதய காலத்தில் இருளைப் போக்குபவனும்,
வேகமாகச் செல்லும் ஏழு குதிரைகளைக் கொண்டவனுமான சூரியனின்
பிள்ளையாகிய அங்க நாட்டு அரசனான கர்ணன் அம்புகள் நிறைந்த
போரில் தனக்குப் பகையாயிருந்த பேடி (அருச்சுனனுடைய) கை அம்பால்
இறந்து படும் போது, (அந்தக் கர்ணனுக்குத்) தரிசனம் தந்தவனாகிய
திருமாலும், பிரமனும் தனது முடியைத் தேடிய செல்வ நாயகனான
சிவபெருமானுடைய குமாரனே,

அயலூர் உறை மயிலா பல கலை மான் உழை புலி தோல்களை
அகில் ஆரம் அது எறி காவிரி வண்டல் மேவும் அதி மோகர
வயலூர் மிசை திரி சேவக முருக ஈசுர அமராபதி அதில்
வாழ்பவர் தம்பிரானே
... பக்கங்களில் உள்ள ஊர்கள் எல்லாவற்றிலும்
வீற்றிருக்கும் மயில் வாகனனே, பல வகையான கலைமான்கள், பிற
வகையான மான்கள், புலி, யானைகளையும், அகில், சந்தனம்
இவைகளையும் தள்ளி வீசிக் கொண்டு வரும் காவிரி நதியின் நீர் மண்டிய
பொடி மண் உள்ளதும், அதிகமாக மனதுக்கு இனிமை தருவதுமான
வயலூரில்* உலவும் வலியவனே, முருகனே, ஈசுவரனே, பொன்னுலகில்
வாழும் தேவர்களின் தம்பிரானே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1219  pg 2.1220  pg 2.1221  pg 2.1222  pg 2.1223  pg 2.1224 
 WIKI_urai Song number: 913 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 909 - kuyilO mozhi (vayalUr)

kuyilOmozhi ayilOvizhi kodiyOidai pidiyOnadai
     kuRiyeerthani seRiyeerini ...... yenRupAdik

kunakAvadi pidiyAvithazh kadiyAnakam vakirAvudai
     kulaiyAvalku laLaiyAviru ...... kongaimeethiR

payilAmana makizhmOkitha sukasAkara madamAtharkaL
     pakaiyEyena ninaiyAthuRa ...... naNpukUrum

pasupAsamu makilAthika paripUraNa puraNAkara
     pathinEruni naruLAlmeyu ...... NarnthidEnO

veyilveesiya kathirAyira varuNOthaya viruNAsana
     visaiyEzhhpari ravisEyenu ...... mangarAsan

visikAkava mayalpEdikai padupOthusan nithiyAnavan
     vithithEdiya thiruvALiya ...... rankumArA

ayalUruRai mayilApala kalaimAnuzhai pulithOlkaLai
     yakilArama theRikAviri ...... vaNdalmEvum

athimOkara vayalUrmisai thirisEvaka murukEsura
     amarApathi yathilvAzhpavar ...... thambirAnE.

......... Meaning .........

kuyilO mozhi ayilO vizhi kodiyO idai pidiyOnadai kuRiyeer thani seRiyeer ini enRu pAdi: "Is their speech the cooing of the cuckoo? Are their eyes arrows? Is their waist a creeper? Is their gait that of the she-elephant? Come on and learn more about their beauty! From now on, come alone and mix with them closely" - so describing the whores and singing their praise,

kunakA adi pidiyA ithazh kadiyA nakam vakirA udai kulaiyA alkul aLaiyA iru kongai meethil payilA manam makizhhmOkitha(m) suka sAkara mada mAtharkaL: men flirt with them grabbing their feet, biting their lips, scratching their body with nail-marks, disrobing them, indulging in their genitals and having close encounters with their twin breasts; these beautiful whores serve as the source of the men's revelry and as the sea of passionate and delusory bliss.

pakaiyE ena ninaiyAthu uRa naNpu kUrum pasu pAsamum akilA athika paripUraNa puraNa Akara pathi nEru(m) nin aruLAl mey uNarnthidEnO: I wonder why I do not consider them as enemies to be shunned. Oh Benevolent and All-inclusive Principle that is far above all souls and the three binding bondages (namely, arrogance, karma and delusion), You are the source of light! By the divine grace in You, will I not realise the true value of that Principle, Oh Lord?

veyil veesiya kathir Ayira(m) aruNOthaya iruL nAsana visai Ezhhpari ravi sEy enum anga rAsan visika Akavam ayal pEdi kai padu pOthu sannithiyAnavan vithi thEdiya thiruvALi aran kumArA: He radiates thousands of bright light-rays and dispels the darkness in the early morning; He rides seven sprightly horses; He is the Sun-God whose son is KarNan, the King of the country Anga; when KarNan was felled in the battlefield by the arrows wielded by his cowardly enemy Arjunan, Lord VishNu (as KrishNan) gave him His huge vision of the Universal Lord covering the entire creation (ViswarUpam); that VishNu along with Brahma searched everywhere for the head of the great Lord SivA, and You are His son, Oh Lord!

ayalUr uRai mayilA pala kalai mAn uzhai puli thOlkaLai akil Aram athu eRi kAviri vaNdal mEvum athi mOkara vayalUr misai thiri sEvaka muruka eesura amarApathi athil vAzhpavar thambirAnE.: You mount the peacock and are seated in all the nearby places, Oh Lord! In this most pleasing town, VayalUr*, You roam about, Oh Mighty One; here one could find the sediments of wet sands of the River KAvEri which gushes dragging many stags and other species of deer, along with tigers, elephants, incence trees and sandalwood trees! Oh MurugA, my Lord, You are the leader of the celestials, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 909 kuyilO mozhi - vayalUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]