பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலுர்) திருப்புகழ் உரை 665 அதிக மனோகரமானதும் ஆன வயலூரில் உலவும் பராக்ரம சாலியே! முருகனே! ஈசுரனே தேவர் தலைநகராம் அமராவதியில் வாழும் தேவர்கள் தம்பிரானே! (நின் அருளால் மெய் உணர்ந்திடேனோ) 914. கொவ்வைக் கனிபோன்ற வாயிதழுக்கும், ё95/TLD தாகத்தையும் இன்பத்தையும் கொடுக்கின்ற, - மாலை புனைந்துள்ள மாதர்களின் கொங்கைக்கும், பெண் குறியாலும் (அல்குலாலும்). அழகிய மாலையை வளையப் புனைந்துள்ள தோள். களாலும், வாசனை கொண்டதும், அழகாகச் சிக்கெடுத்து வாரி முடிக்கின்ற கூந்தலாலும், கோடிக்கணக்கான (ஆவி) உயிர்களை அழிக்கின்ற சேல்மின் போன்ற கண்ணாலும், நான் காம மயக்கம் கொண்டு ஆசை பிறந்தவனாய் இனியும் தினந்தோறும் சோர்வு அடையாமல. குற்றமில்லாத வேதங்களாலும் தேடிக் காண முடியாத (ஒருவர்க்கு) சிவபிரானுக்கு (ஒன்று)ம் பொருந்திய (மனதுக்கு உவந்த) (ஆடல் தாள்கள்) வெற்றி பொருந்திய திருவடிகளை (அல்லது நடனப் பதங்களை) எனக்கு இன்று தந்தருளுக; இடப வாகனத்தில் ஏறும் நடன மூர்த்தி, மயிலனைய பார்வதி தேவியைப் பாகத்திற் கொண்டவன், காத்தளிக்கும் கொடையருட்குணம் கொண்ட துய ஒழுக்கமான குணங் கொண்டவன், திருமாலும் தேடமுடியாத திருவடியை உடையவன், தீமையே இல்லாத மனத்தை உடையவன், நெருப்பின் நிறம் உடையவன் - ஆய-சிவனது குமாரனே! (664ஆம் பக்கத் தொடர்ச்சி) o "திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை" H திருவாசகம் 11-1. * "நன்றுடையானைத் தீயதில்லானை' - சம்பந்தர் 198-1. f அழல் திகழ் நிறத்தர் - சம்பந்தர் 1.78.5.