திருப்புகழ் 908 குருதி கிருமிகள்  (வயலூர்)
Thiruppugazh 908 kuruthikirumigaL  (vayalUr)
Thiruppugazh - 908 kuruthikirumigaL - vayalUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

......... பாடல் .........

குருதி கிருமிகள் சலமல மயிர்தசை
     மருவு முருவமு மலமல மழகொடு
          குலவு பலபணி பரிமள மறுசுவை ...... மடைபாயல்

குளிரி லறையக மிவைகளு மலமல
     மனைவி மகவனை யநுசர்கள் முறைமுறை
          குனகு கிளைஞர்க ளிவர்களு மலமல ...... மொருநாலு

சுருதி வழிமொழி சிவகலை யலதினி
     யுலக கலைகளு மலமல மிலகிய
          தொலைவி லுனைநினை பவருற வலதினி ...... யயலார்பால்

சுழல்வ தினிதென வசமுடன் வழிபடு
     முறவு மலமல மருளலை கடல்கழி
          துறைசெ லறிவினை யெனதுள மகிழ்வுற ...... அருள்வாயே

விருது முரசுகள் மொகுமொகு மொகுவென
     முகுற ககபதி முகில்திகழ் முகடதில்
          விகட இறகுகள் பறையிட அலகைகள் ...... நடமாட

விபுத ரரகர சிவசிவ சரணென
     விரவு கதிர்முதி ரிமகரன் வலம்வர
          வினைகொள் நிசிசரர் பொடிபட அடல்செயும் ...... வடிவேலா

மருது நெறுநெறு நெறுவென முறிபட
     வுருளு முரலொடு தவழரி மருகசெ
          வனச மலர்சுனை புலிநுழை முழையுடை ...... யவிராலி

மலையி லுறைகிற அறுமுக குருபர
     கயலு மயிலையு மகரமு முகள்செநெல்
          வயலி நகரியி லிறையவ அருள்தரு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

குருதி கிருமிகள் சல(ம்) மல(ம்) மயிர் தசை ... இரத்தம், புழுக்கள்,
நீர், மலம், மயிர், சதை ஆகிய இவை

மருவும் உருவமும் அலம் அலம் ... பொருந்திய உருவை உடைய
இந்த உடல் எடுத்தது போதும் போதும்.

அழகொடு குலவு பல பணி பரிமளம் ... அழகோடு விளங்கும் பல
விதமான நகைகளும், நறு மணமுள்ள வாசனைப் பொருள்களும்,

அறு சுவை மடை பாயல் ... ஆறு சுவைகள் கூடிய உணவும்,
படுக்கையும்,

குளிர் இல் அறை அகம் இவைகளும் அலம் அலம் ... குளிர்
இல்லாத அடக்கமான அறைகள் கொண்ட வீடும் - இவைகள் யாவும்
போதும் போதும்.

மனைவி மகவு அ(ன்)னை அநுசர்கள் ... மனைவி, குழந்தைகள்,
தாயார், உடன் பிறந்தவர்கள்,

முறை முறை குனகு கிளைஞர்கள் இவர்களும் அலம் அலம் ...
உறவு முறைகளைக் கூறி குலவும் சுற்றத்தினர் இவர்களும் போதும்
போதும்.

ஒரு நாலு சுருதி வழி மொழி சிவ கலை அலது ... ஒரு நான்கு
மறைகளின் வழியை எடுத்துக் கூறும் சைவ சித்தாந்த நூல்களைத் தவிர

இனி உலக கலைகளும் அலம் அலம் ... வேறு உலக சம்பந்தமான
நூல்களை ஓதுவதும் போதும் போதும்.

இலகிய தொலைவு இல் உனை நினைபவர் உறவும் அலது ...
விளங்கி நிற்பவனும், அழிவில்லாதவனுமாகிய உன்னை நினைப்பவர்களது
நட்பைத் தவிர,

இனி அயலார் பால் சுழல்வது இனிது என ... இனி பிறரிடத்தே
திரிவது நல்லது என்று

வசமுடன் வழிபடும் உறவும் அலம் அலம் ... அவர்கள் வசப்பட்டு,
அவர்களை வழிபடுகின்ற நட்பும் போதும் போதும்.

அருள் அலை கடல் கழி துறை செல் அறிவினை ... நின்
திருவருள் அலை வீசும் கடலின் சங்கமத் துறை வழியில் செல்லும் அறிவை

எனது உளம் மகிழ்வுற அருள்வாயே ... என் மனம் மகிழும்
பொருட்டு நீ அருள்வாயாக.

விருது முரசுகள் மொகு மொகு மொகு என முகுற ... வெற்றிச்
சின்னமான பறைகள் மொகு மொகு மொகு என்று பேரொலி செய்ய,

ககபதி முகில் திகழ் முகடு அதில் விகட இறகுகள் பறை
இட
... கருடன் மேகம் விளங்கும் உச்சி வானத்தில் அகன்ற இறகுகளைக்
கொண்டு வட்டமிட,

அலகைகள் நடமாட ... பேய்கள் நடனம் செய்ய,

விபுதர் அரகர சிவ சிவ சரண் என ... தேவர்கள் அரகர சிவசிவ உன்
அடைக்கலம் என்று ஒலி செய்ய,

விரவு கதிர் முதிர் இம கரன் வலம் வர ... பொருந்திய சூரியனும்,
குளிர்ச்சி நிறைந்த கிரணங்களை உடைய சந்திரனும் வலம் வர,

வினைகொள் நிசிசரர் பொடிபட ... தீச்செயலைக் கொண்ட
அசுரர்கள் பொடிபட்டு அழிய,

அடல் செயும் வடிவேலா ... போர் செய்த கூர்மையான வேலாயுதனே.

மருது நெறு நெறு நெறு என முறிபட ... இரண்டு மருத மரஙகள்
நெறு நெறு நெறு என்று முறிபடும்படி

உருளும் உரலொடு தவழ் அரி மருக ... உருண்டு சென்று
(இடுப்பில் கட்டிய) உரலுடனே தவழ்ந்திட்ட கண்ணனாம் திருமாலின்
மருகனே,

செவ் வனசம் மலர் சுனை புலி நுழை முழை உடைய ...
செந்தாமரை மலர்கின்ற சுனையும், புலி நுழையும் குகையும் கொண்ட

விராலி மலையில் உறைகிற அறு முக குருபர ... விராலிமலையில்
வீற்றிருக்கும் ஆறு முகனே, குருபரனே.

கயலும் மயிலையும் மகரமும் உகள் ... கயல் மீன்களும், மயிலை
என்னும் மீன்களும், மகர மீன்களும் தாவித் திரிகின்ற

செ(ந்)நெல் வயலி நகரியில் இறையவ ... செந்நெல் வயல்களைக்
கொண்ட வயலூர்ப் பதியில்* அமரும் இறைவனே,

அருள் தரு பெருமாளே. ... திருவருள் பாலிக்கும் பெருமாளே.


* வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான்
சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.


வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1217  pg 2.1218  pg 2.1219  pg 2.1220 
 WIKI_urai Song number: 912 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 908 - kuruthi kirumigaL (vayalUr)

kuruthi kirumikaL salamala mayirthasai
     maruvu muruvamu malamala mazhakodu
          kulavu palapaNi parimaLa maRusuvai ...... madaipAyal

kuLiri laRaiyaka mivaikaLu malamala
     manaivi makavanai yanusarkaL muRaimuRai
          kunaku kiLainjarka LivarkaLu malamala ...... morunAlu

suruthi vazhimozhi sivakalai yalathini
     yulaka kalaikaLu malamala milakiya
          tholaivi lunaininaip pavaruRa valathini ...... yayalArpAl

suzhalva thinithena vasamudan vazhipadu
     muRavu malamala maruLalai kadalkazhi
          thuRaice laRivinai yenathuLa makizhvuRa ...... aruLvAyE

viruthu murasukaL mokumoku mokuvena
     mukuRa kakapathi mukilthikazh mukadathil
          vikada iRakukaL paRaiyida alakaikaL ...... nadamAda

viputha rarakara sivasiva saraNena
     viravu kathirmuthi rimakaran valamvara
          vinaikoL nisisarar podipada adalseyum ...... vadivElA

maruthu neRuneRu neRuvena muRipada
     vuruLu muralodu thavazhari marukase
          vanasa malarsunai pulinuzhai muzhaiyudai ...... yavirAli

malaiyi luRaikiRa aRumuka gurupara
     kayalu mayilaiyu makaramu mukaLsenel
          vayali nakariyi liRaiyava aruLtharu ...... perumALE.

......... Meaning .........

kuruthi kirumikaL sala(m) mala(m) mayir thasai: Blood, germs, urine, faeces, hair and flesh

maruvum uruvamum alam alam: make up the shape of this body; I have assumed enough of these bodies.

azhakodu kulavu pala paNi parimaLam aRu suvai madai pAyal: Many exquisitely dainty jewels, fragrant perfumes, several delicious cuisines, beds and

kuLir il aRai akam ivaikaLum alam alam: cosy house with temperate rooms - I have had enough of these.

manaivi makavu a(n)nai anusarkaL muRai muRai kunaku kiLainjarkaL ivarkaLum alam alam: Wife, children, mother, siblings, and many people claiming some kind of relationship - I have had enough of these.

oru nAlu suruthi vazhimozhi sivakalai yalathini yulaka kalaikaLu malamalam: Save the four VEdic scriptures and the Saiva treatises that deal with them, I do not want to study any of the worldly works.

ilakiya tholaivi lunaininai pavaruRa valathu: Rather than seeking the company of those who think of You alone, the Illuminated and Immortal One,

ini yayalArpAl suzhalva thinithena vasamudan vazhipadu muRavu malamalam: I have been roaming around others, totally enticed by them and worshipping them; I have had enough of that kind of friendship.

aruLalai kadalkazhi thuRaice laRivinai yenathuLa makizhvuRa aruLvAyE: I wish to tread the path towards blissful culmination in the Ocean where Your waves of grace are blowing; kindly grant me that Knowledge delighting my mind!

viruthu murasukaL mokumoku mokuvena: Symbolising victory, the drums were beaten making a loud noise;

mukuRa kakapathi mukilthikazh mukadathil vikada iRakukaL paRaiyida: Garudan, the King Eagle, stretched his two large wings and encircled the cloudy sky;

alakaikaL nadamAda: the devils commenced their dance of joy;

viputha rarakara sivasiva saraNena: the celestials prayed loudly "Hara Hara, SivA SivA, We seek Your refuge;"

viravu kathirmuthi rimakaran valamvara: The Sun and the Moon, with cool rays, went around You;

vinaikoL nisisarar podipada adalseyum vadivElA: and the evil-minded demons were all destroyed when You waged the war with Your sharp Spear, Oh Lord!

maruthu neRuneRu neRuvena muRipada: Once, two Marutha trees were broken to pieces

vuruLu muralodu thavazhari marukase: when Krishna rolled over crawling with His waist tied to the stone-barrel (ural); You are the nephew of that Vishnu!

vanasa malarsunai pulinuzhai muzhaiyudai ya: There are a lotus pond and a cave where tigers frequent in

virAli malaiyi luRaikiRa aRumuka gurupara: VirAli Malai which is Your abode, Oh Six-faced One! You are the Great Master!

kayalu mayilaiyu makaramu mukaL: There are plenty of fish of the type kayal, mayilai and makara jumping about in the

senel vayali nakariyi liRaiyava aruLtharu perumALE.: paddy-fields of VayalUr*, where You are seated; You are always showering grace, Oh Great One!


* VayalUr was the capital of Rajagembeera Nadu, a section of the ChOzha Nadu, where AruNagirinAthar got the boon of singing a Thiruppugazh daily.


VayalUr is about 6 miles southwest of ThiruchirApaLLi.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 908 kuruthi kirumigaL - vayalUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]