திருப்புகழ் 128 கதியை விலக்கு  (பழநி)
Thiruppugazh 128 gadhiyaivilakku  (pazhani)
Thiruppugazh - 128 gadhiyaivilakku - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தனத்த தாதத தனன தனத்த தானன
     தனன தனத்த தானன ...... தனதான

......... பாடல் .........

கதியை விலக்கு மாதர்கள் புதிய இரத்ன பூஷண
     கனத னவெற்பு மேல்மிகு ...... மயலான

கவலை மனத்த னாகிலும் உனது ப்ரசித்த மாகிய
     கனதன மொத்த மேனியு ...... முகமாறும்

அதிப லவஜ்ர வாகுவும் அயில்நு னைவெற்றி வேலதும்
     அரவு பிடித்த தோகையு ...... முலகேழும்

அதிர வரற்று கோழியும் அடியர் வழுத்தி வாழ்வுறும்
     அபிந வபத்ம பாதமு ...... மறவேனே

இரவி குலத்தி ராசத மருவி யெதிர்த்து வீழ்கடு
     ரணமு கசுத்த வீரிய ...... குணமான

இளைய வனுக்கு நீண்முடி அரச துபெற்று வாழ்வுற
     இதமொ டளித்த ராகவன் ...... மருகோனே

பதினொ ருருத்தி ராதிகள் தபனம் விளக்கு மாளிகை
     பரிவொ டுநிற்கு மீசுர ...... சுரலோக

பரிம ளகற்ப காடவி அரிய ளிசுற்று பூவுதிர்
     பழநி மலைக்குள் மேவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கதியை விலக்கு மாதர்கள் ... நற்கதியை அடையமுடியாதபடி
தடுக்கின்ற பொதுமகளிரின்

புதிய இரத்ன பூஷண ... புதிய ரத்னாபரணங்களை அனிந்துள்ள

கனதன வெற்பு மேல்மிகு மயலான ... பெருமார்பாகிய மலைமேல்
மோகம் மிக்க கொண்டதனால்

கவலை மனத்தனாகிலும் ... கவலை கொண்ட மனத்தினனாக
நான் இருந்த போதிலும்,

உனது ப்ரசித்த மாகிய ... உனது சிறப்பான புகழ்பெற்ற

கனதன மொத்த மேனியும் முகமாறும் ... தங்கநிதி போன்ற
திருமேனியையும் (1), ஆறு திருமுகங்களையும் (2)

அதிபல வஜ்ர வாகுவும் ... மிகுந்த வலிமை பொருந்திய
தோள்களையும் (3)

அயில்நுனை வெற்றி வேலதும் ... கூரிய நுனியை உடைய
வெற்றி வேலினையும் (4)

அரவு பிடித்த தோகையும் ... பாம்பினைக் கால்களில் பிடித்துள்ள
கலாப மயிலையும் (5)

உலகேழும் அதிர அரற்று கோழியும் ... ஏழுலகங்களும்
அதிரும்படியாக கொக்கரிக்கும் கோழியையும் (6)

அடியர் வழுத்தி வாழ்வுறும் அபிநவ பத்ம பாதமும் ...
உன்னடியார்கள் வாழ்த்தி வணங்கி வாழ்வு பெறும் புதிய தாமரை
மலர் போன்ற திருவடிகளையும் (7)

மறவேனே ... ஒருபோதும் மறக்கமாட்டேன்.

இரவி குலத்தி ராசத மருவி ... சூரிய அம்சமாக வந்த
சுக்ரீவன் ரஜோகுணத்தை மேற்கொண்டு

எதிர்த்து வீழ்கடு ரணமுக ... (வாலியை) எதிர்த்து, தோற்று
நின்ற கொடிய போர்க்களத்தில்,

சுத்த வீரிய குணமான இளையவ னுக்கு ... சுத்த வீரியம்
வாய்ந்த குணத்தினனாகிய தம்பி சுக்ரீவனுக்கு உதவி,

நீண்முடி அரசது பெற்று வாழ்வுற ... அவன் பெரிய
அரசாட்சியைப் பெற்று வாழுமாறு

இதமொடளித்த ராகவன் மருகோனே ... அன்புடன் அருளிய
ராகவனின் மருமகனே,

பதினொரு ருத்திராதிகள் தபனம் விளக்கு மாளிகை ...
பதினோரு ருத்திரர்களின்* பிரகாசம் விளங்கும் கோவிலில்

பரிவொடு நிற்கும் ஈசுர ... அன்போடு எழுந்தருளியிருக்கும்
ஈஸ்வரனே,

சுரலோக பரிமள கற்ப காடவி ... தேவலோகத்தில் உள்ள
வாசம் மிகு கற்பக விருட்சங்கள் இருக்கும் காட்டில்

அரியளி சுற்று பூவுதிர் ... வரிகளை உடைய வண்டுகள்
மொய்ப்பதால் கற்பக மலர்கள் உதிர்கின்ற

பழநி மலைக்குள் மேவிய பெருமாளே. ... பழநி மலையில்
வீற்றிருக்கும் பெருமாளே.


இப்பாடல் மிக அருமையானது. முருகனது அத்தனை உறுப்புக்களையும்
தொகுத்து அளிக்கும் பாடல்.

(1) திருமேனி, (2) ஆறு முகங்கள், (3) தோள்கள், (4) வேல், (5) மயில்,
(6) கோழி, (7) திருவடிகள்.


* 11 ருத்திரர்கள் பின்வருமாறு:

மஹாதேவன், ஹரன், ருத்திரன், சங்கரன்,
நீலலோஹிதன், ஈசான்யன், விஜயன், வீமதேவன், பவோத்பவன், கபாலி, ஸெளம்யன்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.406  pg 1.407  pg 1.408  pg 1.409 
 WIKI_urai Song number: 169 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 128 - gadhiyai vilakku (pazhani)

kathiyai vilakku mAtharkaL puthiya irathna pUshaNa
     kanatha naveRpu mElmiku ...... mayalAna

kavalai manaththa nAkilum unathu prasiththa mAkiya
     kanatha namoththa mEniyu ...... mukamARum

athipa lavajra vAkuvum ayilnu naivetRi vElathum
     aravu pidiththa thOkaiyu ...... mulakEzhum

athira varatRu kOzhiyum adiyar vazhuththi vAzhvuRum
     apina vapathma pAthamu ...... maRavEnE

iravi kulaththi rAsatha maruvi yethirththu veezhkadu
     raNamu kasuththa veeriya ...... kuNamAna

iLaiya vanukku neeNmudi arasa thupetRu vAzhvuRa
     ithamo daLiththa rAkavan ...... marukOnE

pathino ruruththi rAthikaL thapanam viLakku mALikai
     parivo duniRku meesura ...... suralOka

parima LakaRpa kAdavi ariya LisutRu pUvuthir
     pazhani malaikkuL mEviya ...... perumALE.

......... Meaning .........

kathiyai vilakku mAtharkaL: The women of dubious character who hinder my path to salvation,

puthiya irathna pUshaNa kanathana veRpu mEl: and their newly bejewelled bosom looking like huge mounts,

miku mayalAna: provoked me highly with passion and

kavalai manaththa nAkilum: disturbed my mind. Nevertheless, (I am now thinking about)

unathu prasiththa mAkiya kanathana moththa mEniyu: Your famous Supreme body (1) which is like a golden treasure;

mukamARum: Your six hallowed faces (2);

athipala vajra vAkuvum: Your extremely strong shoulders (3);

ayilnunai vetRi vElathum: Your sharp and victorious Spear (4);

aravu pidiththa thOkaiyum: Your Peacock (5), holding a snake in its legs;

ulakEzhum athira varatRu kOzhiyum: Your Rooster (6) which crows (on the staff) with a roar, reverberating in the seven worlds; and

adiyar vazhuththi vAzhvuRum apinava pathma pAthamum: Your fresh lotus feet (7) being praised by Your prostrating devotees who have attained salvation.

maRavEnE: How can I ever forget all these?

iravi kulaththi rAsatha maruvi: Sugrivan, whose lineage is of the Sun, became violent

yethirththu veezhkadu raNamuka: and took on VAli in a fierce battle which he lost;

suththa veeriya kuNamAna: appreciating his innocence and bravery,

iLaiyava nukku neeNmudi arasathu petRu vAzhvuRa: the younger brother (Sugrivan) was blesssed with the Crown and the Kingdom

ithamo daLiththa rAkavan marukOnE: graciously by RAghavan; and You are His nephew!

pathinoru ruththi rAthikaL thapanam viLakku mALikai: Your Temple is illuminated so brightly as if the Eleven RudrAs* have come together!

parivodu niRku meesura: You are standing in that Temple very gracefully, Oh Lord!

suralOka parimaLa kaRpa kAdavi: In the land of DEvAs, there is a forest of fragrant KaRpaga trees

ariyaLi sutRu pUvuthir: besieged by humming beetles, shaking the flowers that are falling on

pazhani malaikkuL mEviya perumALE.: Mount Pazhani, which is Your abode, Oh Great One!


This is one of the unique songs of AruNagirinAthar where he has described all aspects of Murugan's form as follows:

(1) His Supreme body; (2) His six faces; (3) His shoulders; (4) His Spear; (5) His Peacock; (6) His Rooster; and (7) His Lotus Feet.


* 11 RudrAs are as follows:

Mahadevan, Haran, Rudran, Sankaran, Neelalohithan, EesAnyan, Vijayan, Veemadevan, Bhavothbhavan, KapAli and Sowmyan.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 128 gadhiyai vilakku - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]