திருப்புகழ் 129 கரிய பெரிய  (பழநி)
Thiruppugazh 129 kariyaperiya  (pazhani)
Thiruppugazh - 129 kariyaperiya - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தனன தனன தனன
     தனன தனன ...... தனதான

......... பாடல் .........

கரிய பெரிய எருமை கடவு
     கடிய கொடிய ...... திரிசூலன்

கறுவி யிறுகு கயிறொ டுயிர்கள்
     கழிய முடுகி ...... யெழுகாலந்

திரியு நரியு மெரியு முரிமை
     தெரிய விரவி ...... யணுகாதே

செறிவு மறிவு முறவு மனைய
     திகழு மடிகள் ...... தரவேணும்

பரிய வரையி னரிவை மருவு
     பரம ரருளு ...... முருகோனே

பழன முழவர் கொழுவி லெழுது
     பழைய பழநி ...... யமர்வோனே

அரியு மயனும் வெருவ வுருவ
     அரிய கிரியை ...... யெறிவோனே

அயிலு மயிலு மறமு நிறமும்
     அழகு முடைய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கரிய பெரிய எருமை கடவு ... கறுத்த பெரிய எருமையைச் செலுத்தும்

கடிய கொடிய திரிசூலன் ... கடுமையும் கொடுமையும் கொண்ட
முச்சூலம் ஏந்திய யமன்

கறுவி யிறுகு கயிறொடு ... கோபித்து, நெருக்கி அழுத்தும்
பாசக்கயிறோடு

உயிர்கள் கழிய முடுகி யெழுகாலம் ... உயிர் நீங்கும்படியாக
வேகமாய் எழுந்து வரும்பொழுது,

திரியு நரியு மெரியு முரிமை தெரிய ... திரிகின்ற நரியும்,
நெருப்பும் உரிமை கோரி

விரவி யணுகாதே ... நெருங்கி அணுகாமல்

செறிவு மறிவு முறவு மனைய ... என் நிறைவும், அறிவும்,
உறவும் போன்று

திகழு மடிகள் தரவேணும் ... விளங்கும் உன் திருவடிகளைத்
தந்தருள வேண்டும்.

பரிய வரையி னரிவை ... பெருமலையாம் இமகிரியின் மகளாம்
பார்வதியை

மருவ பரம ரருளு முருகோனே ... மணந்த பரமசிவன் அருளிய
முருகோனே,

பழன முழவர் ... வயல்களில் உழவர்கள்

கொழுவி லெழுது ... ஏர்க்காலால் உழுகின்ற

பழைய பழநி யமர்வோனே ... பழம்பெரும் பழநியில் வீற்றிருப்பவனே,

அரியு மயனும் வெருவ ... திருமாலும் பிரமனும் அஞ்சி நிற்க,

உருவ அரிய கிரியை ... உருவிச் செல்லும்படி அரிதான கிரெளஞ்ச
மலைமீது

எறிவோனே ... வேலாயுதத்தைச் செலுத்தியவனே,

அயிலு மயிலு மறமு நிறமும் ... வேலும், மயிலும், வீரமும், ஒளியும்,

அழகு முடைய பெருமாளே. ... அழகும் கொண்ட பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.318  pg 1.319  pg 1.320  pg 1.321 
 WIKI_urai Song number: 129 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 129 - kariya periya (pazhani)

kariya periya erumai kadavu
     kadiya kodiya ...... thirisUlan

kaRuvi iRugu kayiRo duyirgaL
     kazhiya mudugi ...... ezhukAlan

thiriyu nariyum eriyum urimai
     theriya viravi ...... aNugAdhE

seRivum aRivum uRavum anaiya
     thigazhum adigaL ...... tharavENum

pariya varaiyin arivai maruvu
     paramar aruLu ...... murugOnE

pazhana muzhavar kozhuvil ezhudhu
     pazhaiya pazhani ...... amarvOnE

ariyum ayanum veruva uruva
     ariya giriyai ...... eRivOnE

ayilu mayilum aRamu niRamum
     azhagum udaiya ...... perumALE.

......... Meaning .........

kariya periya erumai kadavu: One who comes mounting a black and huge buffalo,

kadiya kodiya thirisUlan: one who is harsh and cruel holding a sharp trident in his hand,

kaRuvi iRugu kayiRodu: one who angrily tightens the noose around my neck, that Yaman (Death-God) -

uyirgaL kazhiya mudugi ezhukAlan: when he closes in fast advancing towards me to snatch my life,

thiriyu nariyum eriyum urimai theriya: roaming foxes and fire claim their right to consume my body

viravi aNugAdhE: and approach me very speedily; to prevent that,

seRivum aRivum uRavum anaiya thigazhum adigaL: Your hallowed Feet which represent fullness, knowledge and genuine relationship should be granted to me.

pariya varaiyin arivai maruvu paramar: Lord SivA, who married PArvathi, the daughter of Himagiri, the loftiest mountain,

aruLu murugOnE: blessed us with You, Oh MurugA!

pazhana muzhavar kozhuvil ezhudhu: The fertile fields are ploughed by farmers in

pazhaiya pazhani amarvOnE: good old Pazhani, which is Your abode.

ariyum ayanum veruva: Vishnu and BrahmA were scared when

uruva ariya giriyai eRivOnE: You pierced the rare Mount Krouncha with Your spear!

ayilu mayilum aRamu niRamum: You are the Spear, the Peacock, the Valour, the Brightness

azhagum udaiya perumALE.: and the Beauty, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 129 kariya periya - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]