திருப்புகழ் 1284 கருப்பையில்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1284 karuppaiyil  (common)
Thiruppugazh - 1284 karuppaiyil - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்த தத்தத் தனத்த தத்தத் தனத்த ...... தனதான

......... பாடல் .........

கருப்பை யிற்சுக் கிலத் துலைத்துற் பவித்து ...... மறுகாதே

கபட்ட சட்டர்க் கிதத்த சித்ரத் தமிழ்க்க ...... ளுரையாதே

விருப்ப முற்றுத் துதித்தெ னைப்பற் றெனக்க ...... ருதுநீயே

வெளிப்ப டப்பற் றிடப்ப டுத்தத் தருக்கி ...... மகிழ்வோனே

பருப்ப தத்தைத் தொளைத்த சத்திப் படைச்ச ...... மரவேளே

பணிக்கு லத்தைக் கவர்ப்ப தத்துக் களித்த ...... மயிலோனே

செருப்பு றத்துச் சினத்தை முற்றப் பரப்பு ...... மிசையோனே

தினைப்பு னத்துக் குறத்தி யைக்கைப் பிடித்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கருப்பையிற் சுக்கிலத்து உலைத்து உற்பவித்து மறுகாதே ...
கர்ப்பப் பையிலுள்ள சுக்கிலத்திலே (பெண் முட்டையிலே) அலைப்புண்டு
மீண்டும் பிறந்து கலங்காமலும்,

கபட்டு அசட்டர்க்கு இதத்த சித்ரத் தமிழ்க்கள் உரையாதே ...
வஞ்சனைமிக்க மூடர்களுக்கு இன்பம் தருவதான தமிழ்ப் பாடல்களைச்
சொல்லாமலும்,

விருப்பமுற்றுத் துதித்து எனைப்பற்று எனக்கருதுநீயே ...
ஆசையுடன் துதித்து என்னைப் பற்றிக் கொள்வாயாக என்று என்னைக்
குறித்து நீயே நினைக்க வேண்டுகிறேன்.

வெளிப்படப் பற்றிடப் படுத்தத் தருக்கி மகிழ்வோனே ...
அடியார்களின் முன் வெளிப்படவும், அவர்களைக் கைவிடாது
பற்றிக்கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் விருப்பத்துடன் வந்து மகிழ்ச்சி
அடைபவனே,

பருப்பதத்தைத் தொளைத்த சத்திப் படைச் சமரவேளே ...
கிரெளஞ்சமலையைத் தொளைத்த சக்திவேலினை ஏந்திய போர்வீரனே,

பணிக்குலத்தைக் கவர்ப்பதத்துக்கு அளித்த மயிலோனே ...
பாம்புக் கூட்டங்களை தனது பிளவுபட்ட பாதங்களுக்கு இடையே
அகப்படுத்தியுள்ள மயிலை வாகனமாகக் கொண்டவனே,

செருப்புறத்துச் சினத்தை முற்றப் பரப்பும் இசையோனே ...
போர்க்களத்தில் உன் கோபத்தை முற்றிலுமாக விரித்துக்காட்டிய புகழை
உடையவனே,

தினைப்புனத்துக் குறத்தியைக்கைப் பிடித்த பெருமாளே. ...
தினைப்புனத்திலே குறத்தி வள்ளியின் கையைப்பிடித்து பாணிக்கிரகணம்
(திருமணம்) செய்து கொண்ட பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.658  pg 3.659  pg 3.660  pg 3.661 
 WIKI_urai Song number: 1283 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1284 - karuppaiyil (common)

karuppai yiRsuk kilath thulaiththuR paviththu ...... maRukAthE

kapatta sattark kithaththa cithrath thamizhkka ...... LuraiyAthE

viruppa muRRuth thuthiththe naippaR Renakka ...... ruthuneeyE

veLippa dappaR Ridappa duththath tharukki ...... makizhvOnE

paruppa thaththaith thoLaiththa saththip padaicca ...... maravELE

paNikku laththaik kavarppa thaththuk kaLiththa ...... mayilOnE

seruppu Raththuc cinaththai muRRap parappu ...... misaiyOnE

thinaippu naththuk kuRaththi yaikkaip pidiththa ...... perumALE.

......... Meaning .........

karuppai yiRsuk kilath thulaiththuR paviththu maRukAthE: I do not want to be battered with an ovum in a womb for another miserable birth;

kapatta sattark kithaththa cithrath thamizhkkaL uraiyAthE: I do not want to compose Tamil poems to please deceitful blockheads any more;

viruppa muRRuth thuthiththe naippaR Renakkaruthu neeyE: For that, You have to consider directing me to firmly hold Your feet with loving prayers.

veLippa dappaR Ridappa duththath tharukki makizhvOnE: You are delighted to appear before Your devotees, support them firmly and accept their devotion!

paruppa thaththaith thoLaiththa saththip padaicca maravELE: You are the great warrior holding the powerful SakthivEl (Spear) that pierced through Mount Krouncha.

paNikku laththaik kavarppa thaththuk kaLiththa mayilOnE: You mount the Peacock that sent the whole bunch of snakes into captivity between the split toes of its feet.

seruppu Raththuc cinaththai muRRap parappum isaiyOnE: You are well known for spreading Your rage throughout the battlefield.

thinaippu naththuk kuRaththi yaikkaip pidiththa perumALE.: In the millet field, You took the hand of VaLLi, the damsel of the KuRavAs, in holy matrimony, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1284 karuppaiyil - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]