திருப்புகழ் 1228 கண்டு போல்மொழி  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1228 kaNdupOlmozhi  (common)
Thiruppugazh - 1228 kaNdupOlmozhi - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்த தானன தந்த தானன
     தந்த தானன ...... தனதான

......... பாடல் .........

கண்டு போல்மொழி வண்டு சேர்குழல்
     கண்கள் சேல்மதி ...... முகம்வேய்தோள்

கண்டு பாவனை கொண்டு தோள்களி
     லொண்டு காதலி ...... லிருகோடு

மண்டி மார்பினில் விண்ட தாமென
     வந்த கூர்முலை ...... மடவார்தம்

வஞ்ச மாலதில் நெஞ்சு போய்மடி
     கின்ற மாயம ...... தொழியாதோ

கொண்ட லார்குழல் கெண்டை போல்விழி
     கொண்டு கோகில ...... மொழிகூறுங்

கொங்கை யாள்குற மங்கை வாழ்தரு
     குன்றில் மால்கொடு ...... செலும்வேலா

வெண்டி மாமன மண்டு சூர்கடல்
     வெம்ப மேதினி ...... தனில்மீளா

வென்று யாவையு மன்றி வேளையும்
     வென்று மேவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கண்டு போல் மொழி வண்டு சேர் குழல் ... கற்கண்டைப்
போன்ற இனிய பேச்சு, வண்டுகள் சேரும் கூந்தல்,

கண்கள் சேல் மதி முகம் வேய் தோள் ... சந்திரனை ஒத்த
முகம், மூங்கில் போன்ற மென்மையான தோள்,

கண்டு பாவனை கொண்டு தோள்களில் ஒண்டு காதலில் ...
உவமைகளை அவ்வாறே பாவித்து தோள்களில் சாரும்படி ஆசை
ஏற்படுவதால்,

இரு கோடு மண்டி மார்பினில் விண்டதாம் என வந்த கூர்
முலை மடவார் தம்
... இரண்டு மலைகள் நெருங்கி மார்பில்
வெளிப்பட்டுள்ளன என்று சொல்லும்படி சிறப்புற்ற மார்பகங்களை
உடைய விலைமாதர்களின்

வஞ்ச மால் அதில் நெஞ்சு போய் மடிகின்ற மாயம் அது
ஒழியாதோ
... வஞ்சகம் நிறைந்த மாயத்தில் மனம் போய் மாய்கின்ற
மயக்க அறிவு நீங்காதோ?

கொண்டல் ஆர் குழல் கெண்டை போல் விழி கொண்டு
கோகில மொழி கூறும்
... கரிய மேகம் போன்ற கூந்தல், கெண்டை
மீன் போன்ற கண் இவைகளைக் கொண்டு, குயில் கூவுதல் போன்ற
பேச்சுக்களைப் பேசும்

கொங்கையாள் குற மங்கை வாழ் தரு குன்றில் மால் கொடு
செலும் வேலா
... அழகிய மார்பினளான குற மகள் வள்ளி வாழும்
வள்ளி மலையில் காதலோடு சென்ற வேலனே,

வெண்டி மா மனம் மண்டு சூர் கடல் வெம்ப மேதினி தனில்
மீளா
... சிறந்த தன் மனம் களைத்துப்போய், நெருங்கி வந்த சூரன்
வாடவும், கடல் கொதித்து வேகவும், உலகையே காக்க வந்து,

வென்று யாவையும் அன்றி வேளையும் வென்று மேவிய
பெருமாளே.
... எல்லாவற்றையும் வென்று, பின்னும் மன்மதனையும்
உன் அழகால் வென்ற* பெருமாளே.


* மன்மதனுக்கு 'மாரன்' என்று பெயர்.
முருகனுக்கு 'குமாரன்' என்ற பெயரின் காரணம் 'கு + மாரன்' = மாரனை
அழகிலே வென்றவன், என்பதால்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.550  pg 3.551  pg 3.552  pg 3.553 
 WIKI_urai Song number: 1227 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1228 - kaNdu pOlmozhi (common)

kaNdu pOlmozhi vaNdu sErkuzhal
     kaNkaL sElmathi ...... mukamvEythOL

kaNdu pAvanai koNdu thOLkaLi
     loNdu kAthali ...... lirukOdu

maNdi mArpinil viNda thAmena
     vantha kUrmulai ...... madavArtham

vanja mAlathil nenju pOymadi
     kinRa mAyama ...... thozhiyAthO

koNda lArkuzhal keNdai pOlvizhi
     koNdu kOkila ...... mozhikURung

kongai yALkuRa mangai vAzhtharu
     kunRil mAlkodu ...... selumvElA

veNdi mAmana maNdu cUrkadal
     vempa mEthini ...... thanilmeeLA

venRu yAvaiyu manRi vELaiyum
     venRu mEviya ...... perumALE.

......... Meaning .........

kaNdu pOl mozhi vaNdu sEr kuzhal: Their speech is sweet like sugar-candy; their hair attracts the beetles;

kaNkaL sEl mathi mukam vEy thOL: their face is like the moon; their shoulder is soft like bamboo;

kaNdu pAvanai koNdu thOLkaLil oNdu kAthalil: making such comparisons, desire to hug those shoulders mounts;

iru kOdu maNdi mArpinil viNdathAm ena vantha kUr mulai madavAr tham: as if two mounts have emerged on the chest, these whores have great bosom;

vanja mAl athil nenju pOy madikinRa mAyam athu ozhiyAthO: will my delusory mind ever cease to hanker after, and perish in, the treacherous magical spell cast by them?

koNdal Ar kuzhal keNdai pOl vizhi koNdu kOkila mozhi kURum: Her hair is like the dark cloud; her eyes are like the keNdai fish; her speech is like the cooing of the cuckoo;

kongaiyAL kuRa mangai vAzh tharu kunRil mAl kodu selum vElA: She is VaLLi, with a pretty bosom, the damsel of the kuRavAs; You lovingly went to her abode in VaLLimalai, Oh Lord with the spear!

veNdi mA manam maNdu cUr kadal vempa mEthini thanil meeLA: With his great mind blown out due to exhaustion, the demon SUran who confronted You lost his morale and the sea boiled and evaporated when You came to protect this world;

venRu yAvaiyum anRi vELaiyum venRu mEviya perumALE.: You conquered all and further went on to triumph* over Manmathan (God of Love) by Your handsomeness, Oh Great One!


* Manmathan's other name is MAran.
Murugan is known as KumAran, (Ku + MAran) meaning, one who has triumphed over MAran by His handsomeness.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1228 kaNdu pOlmozhi - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]