திருப்புகழ் 1222 எதிரொருவர் இலை  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1222 edhiroruvarilai  (common)
Thiruppugazh - 1222 edhiroruvarilai - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தனதனன தனதனன தனதனன
     தத்தத்த தத்தான ...... தந்ததான

......... பாடல் .........

எதிரொருவ ரிலையுலகி லெனஅலகு சிலுகுவிரு
     திட்டுக்ரி யைக்கேயெ ...... ழுந்துபாரின்

இடையுழல்வ சுழலுவன சமயவித சகலகலை
     யெட்டெட்டு மெட்டாத ...... மந்த்ரவாளால்

விதிவழியி னுயிர்கவர வருகொடிய யமபடரை
     வெட்டித் துணித்தாண்மை ...... கொண்டுநீபம்

விளவினிள இலைதளவு குவளைகமழ் பவளநிற
     வெட்சித் திருத்தாள்வ ...... ணங்குவேனோ

திதிபுதல்வ ரொடுபொருது குருதிநதி முழுகியொளிர்
     செக்கச் செவத்தேறு ...... செங்கைவேலா

சிகரகிரி தகரவிடு முருவமர கதகலப
     சித்ரக் ககத்தேறு ...... மெம்பிரானே

முதியபதி னொருவிடையர் முடுகுவன பரிககன
     முட்டச் செலுத்தாறி ...... ரண்டுதேரர்

மொழியுமிரு அசுவினிக ளிருசதுவி தவசுவெனு
     முப்பத்து முத்தேவர் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

எதிரொருவர் இலையுலகில் எனஅலகு சிலுகு ... எமக்கு
எதிரானவர் எவரும் இல்லை உலகத்திலேயே என்று கூர்மையான
வாதப்போருக்கு

விருதிட்டு க்ரியைக்கே யெழுந்து ... கொடிகட்டி, அத்தகைய
செய்கைக்கே துணிந்து எழுந்து,

பாரின் இடையுழல்வ சுழலுவன சமயவித ... இப்பூமியின்
இடையில் அலைந்து திரியும் எல்லாவிதமான சமயவாதிகளாலும்,

சகலகலை யெட்டெட்டும் எட்டாத மந்த்ரவாளால் ...
எல்லாவகையான அறுபத்து நான்கு கலைகளாலும் எட்ட முடியாத
சாந்தியான தனி ஞான வாள் கொண்டு,

விதிவழியின் உயிர்கவர வருகொடிய யமபடரை ... பிரமன்
விதித்த விதிப்படி உயிரைக் கவர்ந்து செல்ல வரும் கொடிய யமதூதர்களை

வெட்டித் துணித்து ஆண்மை கொண்டு ... வெட்டித் துணித்து,
என் ஆண்மை வைராக்கியத்தை நிலை நிறுத்தி,

நீபம் விளவின் இள இலைதளவு குவளைகமழ் ... கடப்பமலர்,
விளாவின் இளம் தளிர், முல்லை, கருங்குவளை இவற்றின் மணம் கமழும்

பவளநிற வெட்சித் திருத்தாள்வணங்குவேனோ ... பவள
நிறமுள்ள, சிவந்த வெட்சியை அணிந்துள்ள திருவடிகளை
வணங்குவேனோ?

திதிபுதல்வரொடுபொருது குருதிநதி முழுகி ... திதியின்
புதல்வர்களாகிய அசுரர்களுடன் போர் செய்து, ரத்த ஆற்றில் மூழ்கி,

யொளிர் செக்கச் செவத்தேறு செங்கைவேலா ... ஒளிரும் செக்கச்
செவேல் என்னும் மிகுந்த செந்நிறம் கூடிய வேலை உன் செங்கரத்தில்
ஏந்தியவனே,

சிகரகிரி தகரவிடுமுருவ ... சிகரங்களை உடைய கிரெளஞ்சகிரியைப்
பொடிபடச் செய்த உருவத்தோனே,

மரகத கலப சித்ரக் ககத்தேறும் எம்பிரானே ... மரகதப்
பச்சைநிறத் தோகையையும் அழகையும் உடைய பட்சியாம் மயில் மீது
ஏறும் பெருமானே,

முதிய பதினொரு விடையர் ... பழைய பதினொரு ருத்திரர்களும்,

முடுகுவன பரிககன முட்டச் செலுத்து ஆறிரண்டு தேரர் ...
விரைவாக ஓடக்கூடிய குதிரைகளை ஆகாயத்தில் நன்கு செலுத்துகின்ற
பன்னிரு தேர்களை உடைய பன்னிரண்டு சூரியர்களும்,

மொழியும் இரு அசுவினிகள் இருசதுவித வசுவெனு ... மருத்துவ
நூல்களைச் சொல்லிய இரண்டு அசுவினி தேவர்களும், எட்டு வித
வசுக்களும் ஆகிய

முப்பத்து முத்தேவர் தம்பிரானே. ... முப்பத்து மூன்று
(11+12+2+8=33) தேவர்களின் தம்பிரானே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.540  pg 3.541  pg 3.542  pg 3.543 
 WIKI_urai Song number: 1221 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1222 - edhiroruvar ilai (common)

edhiroruvar ilai ulagilena alagu silugu viru
     dhittu kriyaikkE ...... ezhundhu pArin

idaiyuzhalva suzhalu vana samayavidha sakala kalai
     ettettum ettAdha ...... manthravALAl

vidhi vazhiyin uyir kavaravaru kodiya yamapadarai
     vettith uNith thANmai ...... koNdu neepam

viLavinil ilaithaLavu kuvaLai kamazh pavaLaniRa
     vetchith thiruththAL vaNanguvEnO

thithi pudhalvarodu porudhu kurudhinadhi muzhugi oLir
     chekkach chevaththERu ...... senkaivElA

sikaragiri thagaravidu muruva marakatha kalaba
     chithrak kagaththERum ...... embirAnE

mudhiyapathin oruvidaiyar muduguvana parigagana
     muttach cheluth AR ...... irandu thErar

mozhiyum iru asuvinigaL irusadhu vidha vasuvenu
     muppaththu mudhdhEvar ...... thambirAnE.

......... Meaning .........

edhiroruvar ilai ulagilena: People who boast that there is none in the world to match them

alagu silugu virudhittu kriyaikkE ezhundhu: raise their flag of sharp debating skills and challenge others;

pArin idaiyuzhalva suzhalu vana samayavidha: neither these religious fanatics of all kinds roaming around in this world

sakala kalai ettettum ettAdha manthravALAl: nor all the sixty-four arts are able to attain the tranquility which is in the form of a sword of ManthrA; with that sword,

vidhi vazhiyin uyir kavaravaru kodiya yamapadarai vettith uNiththu ANmai koNdu: I shall sever and cut off the messengers of the God of Death who come to grab my life as destined by my fate and assert my mainly resolve.

neepam viLavinil ilaithaLavu kuvaLai kamazh pavaLaniRa: (will I be able to prostrate at) Your hallowed feet of coral hue, decorated with fragrant kadappa flowers, the tender leaves of viLA, blue lilies and

vetchith thiruththAL vaNanguvEnO: the reddish vetchi flowers; worship them?

thithi pudhalvarodu porudhu kurudhinadhi muzhugi oLir: It fought with the demons (sons of Thithi), bathed in the river of their blood

chekkach chevaththERu senkaivElA: and became blood red in colour; You hold that Spear in Your reddish hand!

sikaragiri thagaravidum uruva: With Your majestic form, You destroyed the crest of Mount Krouncha and turned it into powder!

marakatha kalaba chithrak kagaththERum embirAnE: Oh Lord, You mount the beautiful bird, Peacock, with an emerald-green hue!

mudhiyapathin oruvidaiyar: The ancient RudrAs numbering eleven,

muduguvana parigagana muttach cheluth AR irandu thErar: the twelve Suns, with their chariots attached with galloping horses who drive them around in the skies,

mozhiyum iru asuvinigaL: the two prescribing celestial physicians called Aswini DEvAs,

irusadhu vidha vasuvenu: and the eight vasus, all of whom comprise

muppaththu mudhdhEvar thambirAnE.: the thirty-three (11+12+2+8 = 33) Celestials worship You, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1222 edhiroruvar ilai - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]