திருப்புகழ் 1223 எழுந்திடும்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1223 ezhundhidum  (common)
Thiruppugazh - 1223 ezhundhidum - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனந்தனந் தத்தத் தனந்தனந் தத்தத்
     தனந்தனந் தத்தத் ...... தனதானம்

......... பாடல் .........

எழுந்திடுங் கப்புச் செழுங்குரும் பைக்கொத்
     திரண்டுகண் பட்டிட் ...... டிளையோர்நெஞ்

சிசைந்திசைந் தெட்டிக் கசிந்தசைந் திட்டிட்
     டிணங்குபொன் செப்புத் ...... தனமாதர்

அழுங்கலங் கத்துக் குழைந்துமன் பற்றுற்
     றணைந்துபின் பற்றற் ...... றகல்மாயத்

தழுங்குநெஞ் சுற்றுப் புழுங்குபுண் பட்டிட்
     டலைந்தலைந் தெய்த்திட் ...... டுழல்வேனோ

பழம்பெருந் தித்திப் புறுங்கரும் பப்பத்
     துடன்பெருங் கைக்குட் ...... படவாரிப்

பரந்தெழுந் தொப்பைக் கருந்திமுன் பத்தர்க்
     கிதஞ்செய்தொன் றத்திக் ...... கிளையோனே

தழைந்தெழுந் தொத்துத் தடங்கைகொண் டப்பிச்
     சலம்பிளந் தெற்றிப் ...... பொருசூரத்

தடம்பெருங் கொக்கைத் தொடர்ந்திடம் புக்குத்
     தடிந்திடுஞ் சொக்கப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

எழுந்திடும் கப்புச் செழும் குரும்பைக்கு ஒத்து இரண்டு கண்
பட்டு இட்டு இளையோர் நெஞ்சு இசைந்து இசைந்து
...
வெளித் தோன்றி எழுகின்றதும், கவர்ச்சி தருவதுமான, செழுமை
வாய்ந்த, தென்னங் குரும்பைக்கு இணையாகி, இளைஞர்களின்
இரண்டு கண்களும் படுவதாகி அந்த இளையோர்களின் மனம் அதன்
மேல் வெகுவாக ஈடுபடச் செய்து,

எட்டிக் கசிந்து அசைந்து இட்டு இட்டு இணங்கு பொன்
செப்புத் தன மாதர்
... தாவி, உள்ளம் இளகி, சலனப்படுவதற்கு இடம்
கொடுப்பதான அழகிய குடம் போன்ற மார்பகங்களை உடைய
விலைமாதர்கள்.

அழுங்கல் அங்கத்துக் குழைந்து மன் பற்று உற்று அணைந்து
பின் பற்று அற்று அகல் மாயத்து அழுங்கு நெஞ்சு உற்றுப்
புழுங்கு புண்பட்டிட்டு அலைந்து அலைந்து எய்த்திட்டு
உழல்வேனோ
... உருவழியக் கூடிய அங்கங்களின் மேல் மனம்
உருகுதல் உற்று, நிரம்ப காம ஆசை கொண்டவனாய் அவர்களை
அணைந்து, பிறகு அந்த ஆசை அற்று நீங்குவதான மாய வாழ்க்கையில்
வருந்துவதான நெஞ்சத்தைக் கொண்டு, கொதிப்புறும் மனப் புண்ணைக்
கொண்டவனாய், மிகவும் அலைச்சல் உற்று இளைப்பு எய்தித் திரிவேனோ?

பழம் பெரும் தித்திப்பு உறும் கரும்பு அப்பத்துடன் பெரும்
கைக்குள் பட வாரிப் பரந்து எழும் தொப்பைக்கு அருந்தி
முன் பத்தர்க்கு இதம் செய்து ஒன்று அத்திக்கு
இளையோனே
... பழ வகைகளையும், மிக்க இனிப்பைக் கொண்ட
கரும்பு அப்பம் இவைகளையும் பெரிய தும்பிக்கையில் உட்கொள்ளும்படி
வாரி, அகன்று வெளித் தோன்றும் தொப்பைக்குள் உண்டு,
முன்னதாகவே அடியார்களுக்கு நன்மை பொருந்தி விளங்கும் யானை
முக விநாயகருக்குத் தம்பியே,

தழைந்து எழும் தொத்துத் தடம் கை கொண்டு அப்பிச் சலம்
பிளந்து எற்றிப் பொருசூர் அத் தடம் பெரும் கொக்கைத்
தொடர்ந்து இடம் புக்குத் தடிந்திடும் சொக்கப் பெருமாளே.
...
செழிப்புற்று வெளித் தோன்றி திரண்ட விசாலமான இடங்களைக் கவர்ந்து
மூடி, கடல் நீரைக் கிழித்து மோதிச் சண்டைக்கு நின்ற சூரனாகிய அந்த
மிகப் பெரிய மாமரத்தைப் பின் தொடர்ந்து, அது இருந்த இடத்தை
அணுகிச் சென்று வெட்டி அழித்த அழகிய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.542  pg 3.543 
 WIKI_urai Song number: 1222 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1223 - ezhundhidum (common)

ezhunthidung kappuc chezhungurum paikkoth
     thiraNdukaN pattit ...... tiLaiyOrnen

jisainthisain thettik kasinthasain thittit
     tiNangupon sepputh ...... thanamAthar

azhungkalang kaththuk kuzhainthuman patRut
     RaNainthupin patRat ...... RakalmAyath

thazhungunen jutRup puzhungupuN pattit
     talainthalain theyththit ...... tuzhalvEnO

pazhamperun thiththip puRungkarum pappath
     thudanperung kaikkut ...... padavArip

paranthezhun thoppaik karunthimun paththark
     kithamcheython Raththik ...... kiLaiyOnE

thazhainthezhun thoththuth thadangaikoN dappic
     chalampiLan thetRip ...... porucUrath

thadamperung kokkaith thodarnthidam pukkuth
     thadinthidunj chokkap ...... perumALE.

......... Meaning .........

ezhunthidum kappuc chezhum kurumpaikku oththu iraNdu kaN pattu ittu iLaiyOr nenju isainthu isainthu: Prominently rising, attractive, fullsome, comparable to the tender-coconuts, conspicuously catching the eyes of young men and enticing their heart very much,

ettik kasinthu asainthu ittu ittu iNangu pon sepputh thana mAthar: are these leaping breasts, like beautiful pots, of the whores that thaw and stir the mind of the on-looker.

azhungal angaththuk kuzhainthu man patRu utRu aNainthu pin patRu atRu akal mAyaththu azhungu nenju utRup puzhungu puNpattittu alainthu alainthu eyththittu uzhalvEnO: I have been melting my heart upon these mortal transient body-parts of these women and I hug them with extreme passion. Then I let my mind feel miserable being unable to get out of this delusory desire which could not be shaken off. With boiling thoughts in my wounded mind, how long do I have to roam about miserably in a debilitated and weakened condition like this?

pazham perum thiththippu uRum karumpu appaththudan perum kaikkuL pada vArip paranthu ezhum thoppaikku arunthi mun paththarkku itham cheythu onRu aththikku iLaiyOnE: He scoops wholly with His trunk the varieties of fruits and the sweet sugarcane along with appam (cake of rice flour and sugar) and devours them sending them into His wide and big pot-belly; He grants His devotees all benefits in advance; He is the elephant-faced Lord VinAyagar, and You are His younger brother, Oh Lord!

thazhainthu ezhum thoththuth thadam kai koNdu appic chalam piLanthu etRip porucUr ath thadam perum kokkaith thodarnthu idam pukkuth thadinthidum chokkap perumALE.: He went into the sea tearing it apart and stood in the disguise of a fertile mango tree that emerged from the sea spanning in a huge and wide manner covering all around; You went near the site where the mango tree (the demon SUran) stood and destroyed it by severing its limbs, Oh Handsome and Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1223 ezhundhidum - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]