திருப்புகழ் 1221 ஊனேறெலும்பு  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1221 UnERelumbu  (common)
Thiruppugazh - 1221 UnERelumbu - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானா தனந்த தானா தனந்த
     தானா தனந்த ...... தனதான

......... பாடல் .........

ஊனே றெலும்பு சீசீ மலங்க
     ளோடே நரம்பு ...... கசுமாலம்

ஊழ்நோ யடைந்து மாசான மண்டு
     மூனோ டுழன்ற ...... கடைநாயேன்

நானா ரொடுங்க நானார் வணங்க
     நானார் மகிழ்ந்து ...... உனையோத

நானா ரிரங்க நானா ருணங்க
     நானார் நடந்து ...... விழநானார்

தானே புணர்ந்து தானே யறிந்து
     தானே மகிழ்ந்து ...... அருளூறித்

தாய்போல் பரிந்த தேனோ டுகந்து
     தானே தழைந்து ...... சிவமாகித்

தானே வளர்ந்து தானே யிருந்த
     தார்வேணி யெந்தை ...... யருள்பாலா

சாலோக தொண்டர் சாமீப தொண்டர்
     சாரூப தொண்டர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஊனே றெலும்பு ... சதையின் மேல் மூடியுள்ள எலும்பு,

சீசீ மலங்களோடே ... சீச்சீ என அருவருக்கத்தக்க அழுக்குகளுடன்,

நரம்பு கசுமாலம் ... நரம்புகள், பிற அசுத்தங்கள்,

ஊழ்நோ யடைந்து ... ஊழ்வினை சம்பந்தமான நோய்கள்,

மாசான மண்டும் ஊனோடு ... இவைகள் சேர்ந்து, குற்றங்களே
நிறைந்த உடலோடு

உழன்ற கடைநாயேன் ... அலைந்து திரிந்த நாயினும் கீழான
அடியேன்

நானார் ஒடுங்க ... அடங்கி ஒடுங்குதல் என் வசத்தில் உள்ளதா?

நானார் வணங்க ... வணங்கிப் பணிதல் என் இச்சையில் உள்ளதா?

நானார் மகிழ்ந்து உனையோத ... மகிழ்ச்சியோடு உன்னைப்
போற்றுதல் என் செயலில் உள்ளதா?

நானார் இரங்க ... உயிர்களிடத்தே இரக்கம் காட்டுதல் என்
வசத்தில் உள்ளதா?

நானார் உணங்க ... சிந்தை நொந்து வாடுதல் என்னால் கூடுமோ?

நானார் நடந்து விழநானார் ... நடப்பதுதான் என் இச்சையா
அல்லது விழுவதுதான் என் செயலா?

தானே புணர்ந்து தானே யறிந்து ... சேரும் அனைத்தும் தானே
ஆகி, அறியும் பொருளும் தானேஆகி,

தானே மகிழ்ந்து அருளூறி ... மகிழ்பவனும் தானே ஆகி, அருள்
சுரந்து,

தாய்போல் பரிந்த ... தாய் போன்ற அன்பைக்காட்டும்

தேனோடு உகந்து ... தேன் போன்ற இனிய தேவியுடன் மகிழ்ந்து,

தானே தழைந்து சிவமாகி ... தானே செழிப்பாய் வளர்ந்து சிவமாகித்
திகழ்பவனும்

தானே வளர்ந்து தானே யிருந்த ... வளர்பவனும் அழியாது
இருப்பவனும் தானே ஆகி, இவ்வாறு தன்னந்தனியாய் நிற்கும் பெருமான்,

தார்வேணி யெந்தை யருள்பாலா ... பூமாலை அணிந்த சடையினன்
எம்பெருமான் சிவனார் அருளிய குழந்தையே,

சாலோக தொண்டர் சாமீப தொண்டர் ... இவ்வுலகிலுள்ள
அடியார்களுக்கும், உன்னருகே நெருங்கும் அடியார்களுக்கும்,

சாரூப தொண்டர் பெருமாளே. ... உன்னுருவத்தோடு ஒன்ற
நினைக்கும் அடியார்களுக்கும் பெருமாளே*.


* சாலோக, சாமீப, சாரூப, சாயுஜ்யம் என்ற நால்வகைத் தொண்டர்களில்
மூவரைப் பற்றி மட்டும் கூறினார். ஏனெனில் சாயுஜ்ய பதவியில் அவர்கள்
முருகனோடு இரண்டறக் கலந்துவிடுகிறார்கள்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.538  pg 3.539  pg 3.540  pg 3.541 
 WIKI_urai Song number: 1220 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1221 - UnERelumbu (common)

UnER elumbu chee chee malangaL
     OdE narambu ...... kasumAlam

Uzh nOy adaindhu mAsAna maNdum
     UnOd uzhandra ...... kadainAyEn

nAnAr odunga nAnAr vaNanga
     nAnAr magizhndhu ...... unai Odha

nAnAr iranga nAnAr uNanga
     nAnAr nadandhu ...... vizha nAnAr

thAnE puNarndhu thAnE aRindhu
     thAnE magizhndhu ...... aruLURi

thAy pOl parindha thEnOd ugandhu
     thAnE thazhaindhu ...... sivamAgi

thAnE vaLarndhu thAnE irundha
     thArvENi endhai ...... aruLbAlA

sAlOka thoNdar sAmeepa thoNdar
     sArUpa thoNdar ...... perumALE.

......... Meaning .........

UnER elumbu: Bones wrapped in flesh and skin,

chee chee malangaL: along with disgusting faeces and discharged slags,

OdE narambu kasumAlam: nervous system, other dirts and

Uzh nOy adaindhu: diseases arising from karma

mAsAna maNdum UnOdu: constitute this body that is full of sins.

uzhandra kadainAyEn: I roam about with this body worse than a stray dog!

nAnAr odunga: Who am I to control my sensory organs?

nAnAr vaNanga: Is prostration before You under my control?

nAnAr magizhndhu unai Odha: Who am I to sing Your Glory in ecstacy?

nAnAr iranga: Is compassion within my discretion?

nAnAr uNanga: Can I be depressed at my free will?

nAnAr nadandhu vizha nAnAr: Who am I to decide to walk or to fall when I choose?

thAnE puNarndhu thAnE aRindhu: He who mingles with, and perceives, everything of His own accord;

thAnE magizhndhu aruLURi: He who rejoices Himself fully exuding grace;

thAy pOl parindha thEnOd ugandhu: He who rejoices in the company of sweet loving Mother Sakthi;

thAnE thazhaindhu sivamAgi: He who thrives on His own and develops into Sivam;

thAnE vaLarndhu thAnE irundha: He who grows constantly and remains eternal;

thArvENi endhai aruLbAlA: He is Our Father, SivA, wearing garlands on His tresses; and You are His Son!

sAlOka thoNdar sAmeepa thoNdar: Devotees of this world, devotees who seek to be close to You and

sArUpa* thoNdar perumALE.: devotees desirous of merging in You praise You, Oh Great One!


* Devotees are of four kinds: sAloka, sAmeepa, sArUpa and sAyujya;
the last kind is not mentioned in this song as sAyujya means 'those who have already reached the Lord's lotus feet'.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1221 UnERelumbu - common


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]