திருப்புகழ் 1093 குடருமல சலமுமிடை  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1093 kudarumalasalamumidai  (common)
Thiruppugazh - 1093 kudarumalasalamumidai - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனதன தனனதன தனனதன தனனதன
     தனனதன தனனதன ...... தனதான

......... பாடல் .........

குடருமல சலமுமிடை யிடைதடியு முடையளவு
     கொழுவுமுதி ரமும்வெளிற ...... ளறுமாகக்

கொளகொளென அளவில்புழு நெளுநெளென விளைகுருதி
     குமுகுமென இடைவழியில் ...... வரநாறும்

உடலின்மண மலிபுழுகு தடவியணி கலமிலக
     வுலகமரு ளுறவரும ...... ரிவையாரன்

பொழியவினை யொழியமன மொழியஇரு ளொழியஎன
     தொழிவிலக லறிவையருள் ...... புரிவாயே

வடகனக சயிலமுத லியசயில மெனநெடிய
     வடிவுகொளு நெடியவிறல் ...... மருவாரை

வகிருமொரு திகிரியென மதிமுதிய பணிலமென
     மகரசல நிதிமுழுகி ...... விளையாடிக்

கடலுலகை யளவுசெய வளருமுகி லெனஅகில
     ககனமுக டுறநிமிரு ...... முழுநீலக்

கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக
     கடகமுட னமர்பொருத ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

குடரும் மலசலமும் இடை இடை தடியும் உடை அளவு
கொழுவும் உதிரமும் வெளிறு அளறுமாக
... குடல், மலம், நீர்
நெருங்கியதாய், இடையிடையே மாமிசமும் உடையதாய், அளவுக்கு
ஏற்ப கொழுப்பும், ரத்தமும் நிறம் கெட்டு வெளுத்து குழம்பு போல் ஆக,

கொள கொள என அளவு இல் புழு நெளு நெளு என விளை
குருதி குமு குமு என இடை வழியில் வர நாறும் உடலின்
...
கொள கொள என்று ஆகி கணக்கில்லாத புழுக்கள் நெளு நெளு என்று
நெளிய, (அங்ஙனம்) உண்டாகும் ரத்தம் குமு குமு என்று பெருகும்
வழியின் மத்தியில் வரும்போதே துர் நாற்றம் வீசும் தேகத்தில்,

மணம் மலி புழுகு தடவி அணிகலம் இலக உலகம் மருள் உற
வரும் அரிவையார்
... நறு மணம் மிகுந்த புனுகு சட்டம் ஆகிய
வாசனைப் பொருள்களைப் பூசி, அதன் மேல் ஆபரணங்கள் விளங்க
உலக மக்கள் காம மயக்கம் கொள்ளும்படி வருகின்ற விலைமாதர்களின்

அன்பு ஒழிய வினை ஒழிய மனம் ஒழிய இருள் ஒழிய எனது
ஒழிவில் அகல் அறிவை அருள் புரிவாயே
... மோகம் நீங்க, கர்ம
வினையெல்லாம் விட்டு ஒழிய, மனம் ஒடுங்க, அஞ்ஞான இருள் அகல,
யான், எனது எனப்படும் அகங்கார மகங்காரங்கள் நீங்குவதால் பெருகி
எழும் ஞானத்தை அருள் புரிவாயாக.

வட கனக சயிலம் முதலிய சயிலம் என நெடிய வடிவும்
கொ(ள்)ளு நெடிய விறல் மருவாரை
... வடக்கே உள்ள பொன்
மலையாகிய மேரு முதலிய மலைகள் என்னும்படி பெருத்த வடிவைக்
கொண்டு மிக்க வலிமை வாய்ந்த பகைவர்களை

வகிரும் ஒரு திகிரி என மதி முதிய பணிலம் என மகர சல
நிதி முழுகி விளையாடி
... பிளந்து எறியும் (திருமாலின்) ஒப்பற்ற
சக்ராயுதம் (சுதர்சனம்) என்னும்படியும், சந்திரன் போல முற்றின
வெண்மை நிறம் கொண்ட (பாஞ்ச சன்னியம் என்ற) சங்கு என்னும்படி
விளங்கி, (மச்சாவதரத்தில்) மகர மீன்கள் உள்ள கடலில் முழுகி
விளையாடி,

கடல் உலகை அளவு செய வளரும் முகில் என அகில ககன
முகடு உற நிமிரும் முழு நீலக் கலப ககம் மயில் கடவி
...
கடல் சூழ்ந்த இந்த உலகை அளவிட (திரிவிக்கிரமனாக) வளர்ந்த மேக
நிறத் திருமால் என்னும்படி, இந்த உலகமும் ஆகாய உச்சி முழுமையும்
பொருந்தும்படி நிமிர்ந்து எழுந்ததும், முழு நீல நிறமுள்ள தோகையைக்
கொண்டதுமான மயில் என்னும் பறவையை வலிவாகச் செலுத்தி,

நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத
பெருமாளே.
... யானை, தேர், குதிரை, காலாட் படை ஆகிய
நால்வகைச் சேனைகளுடன் போர் செய்த பெருமாளே.


முருகனின் வாகனமான மயிலின் சிறப்பை உணர்த்தி அதனை திருமாலுடன்
ஒப்பிடும் பாடல் இது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.216  pg 3.217  pg 3.218  pg 3.219 
 WIKI_urai Song number: 1096 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1093 - kudarumala salamumidai (common)

kudarumala chalamumidai yidaithadiyu mudaiyaLavu
     kozhuvumuthi ramumveLiRa ...... LaRumAkak

koLakoLena aLavilpuzhu neLuneLena viLaikuruthi
     kumukumena idaivazhiyil ...... varanARum

udalinmaNa malipuzhuku thadaviyaNi kalamilaka
     vulakamaru LuRavaruma ...... rivaiyAran

pozhiyavinai yozhiyamana mozhiyairu Lozhiyaena
     thozhivilaka laRivaiyaruL ...... purivAyE

vadakanaka sayilamutha liyasayila menanediya
     vadivukoLu nediyaviRal ...... maruvArai

vakirumoru thikiriyena mathimuthiya paNilamena
     makarasala nithimuzhuki ...... viLaiyAdik

kadalulakai yaLavuseya vaLarumuki lenaakila
     kakanamuka duRanimiru ...... muzhuneelak

kalapakaka mayilkadavi nirutharkaja rathathuraka
     kadakamuda namarporutha ...... perumALE.

......... Meaning .........

kudarum malachalamum idai idai thadiyum udai aLavu kozhuvum uthiramum veLiRu aLaRumAka: The intestines, faeces and water are packed together, interspersed with flesh, along with proportionate amount of fat, with the blood decolorising into slimy mud;

koLa koLa ena aLavu il puzhu neLu neLu ena viLai kuruthi kumu kumu ena idai vazhiyil vara nARum udalin: everything becoming loose and greasy, breeding countless worms squirming about, the resultant blood-flow gushes out with an unbearable stench on its passage-way;

maNam mali puzhuku thadavi aNikalam ilaka ulakam maruL uRa varum arivaiyAr: applying on such a body all kinds of perfumes like civet and adorning it with various ornaments, these whores come out tantalising the men-folk of this world;

anpu ozhiya vinai ozhiya manam ozhiya iruL ozhiya enathu ozhivil akal aRivai aruL purivAyE: removing my lust for these women, destroying all the deeds of my karma, tranquilising my wavering mind, dispelling the darkness of my ignorance and annihilating my egoism, egotism and possessiveness, kindly bless me so that True Knowledge springs within me, Oh Lord!

vada kanaka sayilam muthaliya sayilam ena nediya vadivum ko(L)Lu nediya viRal maruvArai: Those strong enemies were of immense size comparable to the holy golden mount MEru and other mountains in the north;

vakirum oru thikiri ena mathi muthiya paNilam ena makara sala nithi muzhuki viLaiyAdi: the bodies of those enemies were split by Lord VishNu's unique weapon, the disc (Sudharsanam); in His other hand is the famous conch (PAnchajanyam) whose colour is like the utterly white moon; He dived deep into the sea full of makara fish (in His AvatAr as Fish - MachchAvathAram) and played under the sea;

kadal ulakai aLavu seya vaLarum mukil ena akila kakana mukadu uRa nimirum muzhu neelak kalapa kakam mayil kadavi: in order to measure the world surrounded by the seas, He grew immensely tall (as Thirivikraman); He is Lord VishNu of the hue of the black cloud; like Him Your peacock, with a deep blue plume, also grew up covering the entire earth and rising fully up to the zenith in the sky; and mounting that bird and driving it powerfully,

niruthar kaja ratha thuraka kadakam udan amar porutha perumALE.: You fought with the four kinds of armies comprising the elephants, the chariots, the horses and the soldiers, Oh Great One!


This song extols the greatness of Murugan's vehicle, namely, the peacock and compares it to Lord VishNu.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1093 kudarumala salamumidai - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]