பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 211 தேகத்தில் நறுமணம் நிறைந்த புனுகுசட்டம் ஆதிய வாசனைப் பொருள்களைப் பூசி, அதன்மேல் ஆபரணங்கள் விளங்க, உலகமக்கள் (காம் மயக்கம் கொள்ளும்படி வருகின்ற (அரிவையார்) மாதர்களின் (ஒழிய) நீங்க வினை ஒழிய கர்மவினையெல்லாம் விட்டு நீங்க, (ம்ன்ம் ஒழிய) மனம் ஒடுங்க (ఃు. அஞ்ஞான இருள் நீங்க (எனது ஒழிவில்) - தற்போத ஒழிவினால் - யான் எனது எனப்படும் அங்கார மமகாரங்கள் நீங்குவதால் - அகல் விசாலப் படும் பெருகி எழும் - (அறிவை) ஞானத்தை அருள்புரிவாயாக வடக்கே உள்ள (கனகசயிலம்) மேரு முதலிய (சயிலம் என) மலைகள் என்னும்படியும், பெருத்தவடிவைக் கொண்டு மிக்க வலிமை கொண்ட (மருவாரை) பகைவர்களை (வகிரும் ஒரு திகிரி என) பிளந்து எறியும் (திருமாலின்) ஒப்பற்ற (சுதர்சன்ம் என்னும் சக்ராயுதம் என்னும் படியும் (மதி முதிய பணிலம் என) - சந்திரன் போல முற்றின் வெண்மை நிறம் கொண்ட (பாஞ்ச சன்னியமாம்) சங்கு என்னும்படியும் விளங்கி, மச்சாவதாரத்தில் மகர மீன்கள் உள்ள கடலிலே முழுகி விளையாடிக் கடல் சூழ்ந்த இந்த உலகை அளவிட வளர்ந்த நீண்ட ரூபம் கொண்ட மேக் நிறத்திருமால் என்னும்படி ஓங்கி, (அதில ககன முகடு உற) ஆகாய உச்சி முழுமையும் பொருந்தும்படி நிமிர்ந்தெழுந்த முழுநீல நிறமுள்ள தோகையைக் கொண்ட மயில் ககம்) மயில் எனும் பறவை யைச் செலுத்தி அசுரர்களின் யானை தேர் - குதிரை காலாட் படை ஆகிய நால்வகைச் சேனைகளுடன் போர்புரிந்த பெருமாளே! (அறிவை அருள் புரிவாயே) 1097. (குதறும்) சிதறுண்டு நெறிதவறினதும், (முனை) ஆழமில்லாதது . நுனிப்புல் மேய்ந்தது போன்றதுமான (அறிவுகொடு) சிற்றறிவைக் கொண்டு பதறி கொதிப்புற்றுப் ே பசியும் எதிர்க் கூச்சலிட்டும், மிக்க பேரொலியை எழுப்புகின்ற பரசமயங்களைப் பற்றின ஒருகோடி குருடர்களுக்கும் தெரிவதற்கு அரிதான ஒப்பற்ற ஒரு பொருளை (நான்) அறிந்து கொள்ளுமாறு (நிகழ் மனது) ஒடிக் கொண்டே இருக்கும் மனம், பொல்லாத ( நல்வினை - தீவினை எனப்படும், இரண்டு வினைகள் எனப்படும் (அளறு) சேறு இவை போகும்படி