திருப்புகழ் 1085 கொலையிலே மெத்த  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1085 kolaiyilEmeththa  (common)
Thiruppugazh - 1085 kolaiyilEmeththa - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனா தத்த தனதனா தத்த
     தனதனா தத்த ...... தனதான

......... பாடல் .........

கொலையிலே மெத்த விரகிலே கற்ற
     குவளையேர் மைக்கண் ...... விழிமானார்

குழையிலே யெய்த்த நடையிலே நெய்த்த
     குழலிலே பற்கள் ...... தனிலேமா

முலையிலே யற்ப இடையிலே பத்ம
     முகநிலா வட்ட ...... மதின்மீதே

முதுகிலே பொட்டு நுதலிலே தத்தை
     மொழியிலே சித்தம் ...... விடலாமோ

கலையனே உக்ர முருகனே துட்டர்
     கலகனே மெத்த ...... இளையோனே

கனகனே பித்தர் புதல்வனே மெச்சு
     கடவுளே பச்சை ...... மயிலோனே

உலகனே முத்தி முதல்வனே சித்தி
     உடையனே விஷ்ணு ...... மருகோனே

ஒருவனே செச்சை மருவுநேர் சித்ர
     வுருவனே மிக்க ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கொலையிலே மெத்த விரகிலே கற்ற குவளை ஏர் மைக் கண்
விழி மானார்
... கொலைத் தொழிலையும், நிரம்பத் தந்திரங்களைக்
கற்றுள்ளனவும், குவளை மலர் போன்றனவும், அழகு கொண்டனவும்,
மை பூசியும் உள்ள விழிகளை உடைய விலைமாதர்களின்

குழையிலே எய்த்த நடையிலே நெய்த்த குழலிலே பற்கள்
தனிலே மா முலையிலே
... காதில் உள்ள குண்டலங்களிலும்,
இளைப்புற்ற நடையிலும், வாசனைத் தைலம் பூசியுள்ள கூந்தலிலும்,
பற்களிலும், பெரிய மார்பகங்களிலும்,

அற்ப இடையிலே பத்ம முக நிலா வட்டம் அதின் மீதே
முதுகிலே பொட்டு நுதலிலே தத்தை மொழியிலே சித்தம்
விடலாமோ
... குறுகிய இடையிலும், தாமரை போன்ற முகமாகிய சந்திர
பிம்ப வட்ட வடிவிலும், முதுகிலும், பொட்டு இட்டுள்ள நெற்றியிலும்,
கிளி போன்ற பேச்சிலும் நான் என் மனத்தைச் சிதற விடலாமோ?

கலையனே உக்ர முருகனே துட்டர் கலகனே மெத்த
இளையோனே
... எல்லா கலைகளிலும் வல்லவனே, (அசுரர்களிடத்தில்)
சினம் கொண்ட முருகனே, துஷ்டர்களைக் கலங்கச் செய்து
அடக்குபவனே, மிகவும் இளையவனே,

கனகனே பித்தர் புதல்வனே மெச்சு கடவுளே பச்சை
மயிலோனே
... பொன் உருவத்தினனே, பித்தராகிய
சிவபெருமானுடைய மகனே, யாவராலும் மெச்சப்படும் கடவுளே, பச்சை
மயில் வாகனனே,

உலகனே முத்தி முதல்வனே சித்தி உடையனே விஷ்ணு
மருகோனே
... உலகெல்லாம் நிறைந்தவனே, முக்தி தரும் முதல்வனே,
சித்திகளில் வல்லவனே, திருமாலின் மருகனே,

ஒருவனே செச்சை மருவு நேர் சித்ர உருவனே மிக்க
பெருமாளே.
... ஒப்பற்றவனே, செந்நிறம் கொண்ட நேர்த்தியான
அழகிய உருவத்தனே, யாவரிலும் மேம்பட்ட பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.200  pg 3.201  pg 3.202  pg 3.203 
 WIKI_urai Song number: 1088 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1085 - kolaiyilE meththa (common)

kolaiyilE meththa virakilE katRa
     kuvaLaiyEr maikkaN ...... vizhimAnAr

kuzhaiyilE yeyththa nadaiyilE neyththa
     kuzhalilE paRkaL ...... thanilEmA

mulaiyilE yaRpa idaiyilE pathma
     mukanilA vatta ...... mathinmeethE

muthukilE pottu nuthalilE thaththai
     mozhiyilE siththam ...... vidalAmO

kalaiyanE ukra murukanE thuttar
     kalakanE meththa ...... iLaiyOnE

kanakanE piththar puthalvanE mecchu
     kadavuLE pacchai ...... mayilOnE

ulakanE muththi muthalvanE siththi
     udaiyanE vishNu ...... marukOnE

oruvanE secchai maruvunEr sithra
     vuruvanE mikka ...... perumALE.

......... Meaning .........

kolaiyilE meththa virakilE katRa kuvaLai Er maik kaN vizhi mAnAr: These whores have eyes that are capable of murder and many treacherous tricks; those eyes are beautiful like the black lily, with dark pigment applied inside the eyelids;

kuzhaiyilE eyththa nadaiyilE neyththa kuzhalilE paRkaL thanilE mA mulaiyilE: in their ear-rings, their leisurely gait, fragrant hair with the scent of oil, teeth, big bosom,

aRpa idaiyilE pathma muka nilA vattam athin meethE muthukilE pottu nuthalilE thaththai mozhiyilE siththam vidalAmO: slender waistline, the circular moon-like shape of their lotus face, their back, their forehead bearing the vermilion mark and parrot-like sweet speech - in all these, am I to let my mind go on a rampage?

kalaiyanE ukra murukanE thuttar kalakanE meththa iLaiyOnE: You are well-versed in all arts! You show Your rage (on the demons), Oh MurugA! You first unnerve the evil ones and then tame them! You are very young!

kanakanE piththar puthalvanE mecchu kadavuLE pacchai mayilOnE: Your complexion is of a golden colour! You are the son of Lord SivA who was deemed by many as a mad one! You are the deity adored by all! You mount the green peacock as Your vehicle!

ulakanE muththi muthalvanE udaiyanE vishNu marukOnE: You are omnipresent throughout the world! You are the primordial Lord who can grant liberation! You are dexterous in many mystical sports (sidhdhis)! You are the nephew of Lord VishNu!

oruvanE secchai maruvu nEr sithra uruvanE mikka perumALE.: You are matchless! You have a handsome figure of a red hue! You are the Supreme Lord above all, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1085 kolaiyilE meththa - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]