திருப்புகழ் 864 தும்பி முகத்தானை  (கும்பகோணம்)
Thiruppugazh 864 thumbimugaththAnai  (kumbakONam)
Thiruppugazh - 864 thumbimugaththAnai - kumbakONamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்ததனத் தானதனத் தந்ததனத் தானதனத்
     தந்ததனத் தானதனத் ...... தனதான

......... பாடல் .........

தும்பிமுகத் தானைபணைக் கொம்பதெனத் தாவிமயற்
     றொந்தமெனப் பாயுமுலைக் ...... கனமாதர்

தும்பிமலர்ச் சோலைமுகிற் கங்குலிருட் காரினிறத்
     தொங்கல்மயிற் சாயலெனக் ...... குழல்மேவிச்

செம்பொனுருக் கானமொழிச் சங்கினொளிக் காமநகைச்
     செங்கயலைப் போலும்விழிக் ...... கணையாலே

சிந்தைதகர்த் தாளுமிதச் சந்த்ரமுகப் பாவையர்தித்
     திந்திமெனுற் றாடுமவர்க் ...... குழல்வேனோ

தம்பிவரச் சாதிதிருக் கொம்புவரக் கூடவனச்
     சந்தமயிற் சாய்விலகிச் ...... சிறைபோகச்

சண்டர்முடித் தூள்கள்படச் சிந்தியரக் கோர்கள்விழத்
     தங்கநிறத் தாள்சிறையைத் ...... தவிர்மாயோன்

கொம்புகுறிக் காளமடுத் திந்தமெனுற் றாடிநிரைக்
     கொண்டுவளைத் தேமகிழச் ...... சுதனீண

கொஞ்சுசுகப் பாவையிணைக் கொங்கைதனிற் றாவிமகிழ்க்
     கும்பகொணத் தாறுமுகப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தும்பி முகத்து ஆனை பணைக் கொம்பு அது எனத் தாவி
மயல் தொந்தம் எனப் பாயு(ம்) முலை கன மாதர்
...
துதிக்கையை உடைய முகத்தைக் கொண்ட யானையின் பெருத்த தந்தம்
போல வெளித்தோன்றி, காம இச்சைக்குச் சம்பந்தம் உடையது என
மேலெழுகின்ற மார்பகங்களை உடைய பெருமை வாய்ந்த (விலை) மாதர்கள்

தும்பி மலர்ச் சோலை முகில் கங்குல் இருள் காரின் நிறத்
தொங்கல் மயில் சாயல் எனக் குழல் மேவி
... வண்டுகளின்
கூட்டம், மலர்ச் சோலை, மேகம், இரவின் இருட்டு இவற்றின் கரு நிறம்
கொண்ட, தோகை மயிலின் அழகு இது என்று சொல்லும்படியான,
கூந்தலை உடையவர்களாய்,

செம் பொன் உருக்கான மொழிச் சங்கின் ஒளிக் காம நகைச்
செம் கயலைப் போலும் விழிக் கணையாலே
... செம்பொன் இளகி
விழுகின்றதோ என்னும்படியான பேச்சுடன், சங்கின் வெள் ஒளி போன்று,
காமத்தைத் தூண்டும், பற்கள், சிவந்த கயல் மீனைப் போன்ற
கண்களாகிய அம்புகள் கொண்டு,

சிந்தை தகர்த்து ஆளும் இதச் சந்த்ர முகப் பாவையர்
தித்திந்திம் என உற்று ஆடும் அவர்க்கு உழல்வேனோ
...
கண்டோர் மனதைச் சிதற வைத்து ஆளும், இன்பத்தைத் தரும் சந்திரனை
ஒத்த முகத்தைக் கொண்ட, பதுமை போன்றவர்கள் தித்திம்திம் என்ற
தாளங்களுக்கு நடனம் ஆடும் விலைமாதர்களுக்காக நான் வீணாக
அலைச்சல் உறுவேனோ?

தம்பி வரச் சாதி திருக் கொம்பு வரக் கூட வனச் சந்த மயில்
சாய் விலகிச் சிறை போக
... தம்பியாகிய லக்ஷ்மணன் கூட வர,
பண்பில் சிறந்த, கொம்பு போல மெலிந்த இடையை உடையவளும், லக்ஷ்மி
போன்றவளுமான சீதை (கானகத்தில்) உடன் வர, (அவளைக் கண்டு)
அழகிய மயில்கள் இவள் சாயலுக்கு நாம் ஈடாகோம் என்று ஒதுங்கி விலகி
ஒரு புறம் போக,

சண்டர் முடித் தூள்கள் படச் சிந்தி அரக்கோர்கள் விழத் தங்க
நிறத்தாள் சிறையைத் தவிர் மாயோன்
... கடுங் கோபம்
உடையவர்களான அசுரர்களின் முடிகள் தூளாகும்படி சிதறடித்து, அந்த
அரக்கர்கள் மாண்டு விழ, பொன் நிறம் உடைய சீதையின் சிறையை நீக்கிய
ராமனாகிய திருமால்,

கொம்பு குறிக் காளம் மடுத் திந்தம் என உற்று ஆடி நிரைக்
கொண்டு வளைத்தே மகிழ் அச்சுதன்
... புல்லாங்குழலை
அடையாளமாகக் கொண்டவனும், விஷம் நிரம்பிய மடுவில் (காளிங்கன்
மீது) திந்தம் என்று பொருந்தி நடனம் செய்வதவனும், பசுக் கூட்டங்களை
ஒன்று கூட்டி வளைத்து மேய்த்து மகிழ்ந்த கண்ணனுமாகிய

ஈண கொஞ்சு சுகப் பாவை இணைக் கொங்கை தனில் தாவி
மகிழ் கும்பகொணத்து ஆறுமுகப் பெருமாளே.
... அந்த திருமால்
பெற்ற கொஞ்சும் கிளி போன்ற பதுமையாகிய வள்ளியின் இரு
மார்பகங்களைத் தழுவி மகிழ்பவனும், கும்பகோணத்தில்
வீற்றிருப்பவனுமாகிய ஆறுமுகப் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1101  pg 2.1102  pg 2.1103  pg 2.1104 
 WIKI_urai Song number: 868 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 864 - thumbi mugaththAnai (kumbakONam)

thumpimukath thAnaipaNaik kompathenath thAvimayat
     Ronthamenap pAyumulaik ...... kanamAthar

thumpimalarc chOlaimukiR kangulirut kariniRath
     thongalmayiR chAyalenak ...... kuzhalmEvi

semponuruk kAnamozhic changinoLik kAmanakai
     sengayalaip pOlumvizhik ...... kaNaiyAlE

sinthaithakarth thALumithac chanthramukap pAvaiyarthith
     thinthimenut RAdumavark ...... kuzhalvEnO

thampivarac chAthithiruk kompuvarak kUdavanac
     chanthamayiR chAyvilakic ...... chiRaipOkac

chaNdarmudith thULkaLpadac chinthiyarak kOrkaLvizhath
     thanganiRath thALchiRaiyaith ...... thavirmAyOn

kompukuRik kALamaduth thinthamenut RAdiniraik
     koNduvaLaith thEmakizhac ...... chuthaneeNa

konjusukap pAvaiyiNaik kongaithanit RAvimakizhk
     kumpakoNath thARumukap ...... perumALE.

......... Meaning .........

thumpi mukaththu Anai paNaik kompu athu enath thAvi mayal thontham enap pAyu(m) mulai kana mAthar: They expose their bosom that resembles the large ivory tusk of an elephant with a trunk; these notorious whores show off their bulging and highly provocative breasts;

thumpi malarc chOlai mukil kangul iruL kArin niRath thongal mayil sAyal enak kuzhal mEvi: their hair is comparable in colour to a swarm of beetles, the flower garden, black cloud and the dark night and, in beauty, to a peacock with its plumes;

sem pon urukkAna mozhic changin oLik kAma nakaic chem kayalaip pOlum vizhik kaNaiyAlE: the flow of their speech is like that of molten and reddish gold; their sexy white teeth are like the bright conch-shell; with their reddish eyes looking like kayal fish serving as arrows,

sinthai thakarththu ALum ithac chanthra mukap pAvaiyar thiththinthim ena utRu Adum avarkku uzhalvEnO: they bombard and rule the hearts of their suitors; for the sake of these statuette-like whores, with a pleasant face like the moon, who dance to the beats "thiththinthim", am I supposed to roam about aimlessly?

thampi varac chAthi thiruk kompu varak kUda vanac chantha mayil sAy vilakic chiRai pOka: Accompanied by His brother LakshmaNan, He walked (in the forest) with Seethai, looking like Lakshmi, a quintessence of virtues with a creeper-like slender waist; (abashed by her beauty,) the pretty peacocks moved away to one side thinking that they would never match her;

saNdar mudith thULkaL padac chinthi arakkOrkaL vizhath thanga niRaththAL siRaiyaith thavir mAyOn: shattering the heads of the angry demons to pieces, He killed them and freed Seethai, with the complexion of gold, from her prison; He is Lord VishNu (coming as RAmA);

kompu kuRik kALam maduth thintham ena utRu Adi niraik koNdu vaLaiththE makizh acchuthan: He holds the flute as His status symbol; in a poisonous pond, He danced to the meter of "thintham" on the hood of the serpent (KALingan); He happily herded flocks of cows rounding them up together; He is Lord KrishNa;

eeNa konju sukap pAvai iNaik kongai thanil thAvi makizh kumpakoNaththu ARumukap perumALE.: that Lord VishNu delivered this idol-like damsel, looking like the cooing parrot; You happily hug the bosom of that VaLLi and are seated in KumbakONam, Oh six-faced Lord, the Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 864 thumbi mugaththAnai - kumbakONam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]