பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும்பகோணம்) திருப்புகழ் உரை (869) 545 (தம்பி) தம்பியாம் இலக்குமணன்கூட வர, (சாதி) தன்மையிற் சிறந்த (திருக்கொம்பு) கொம்புபோல மெலிந்த திரு-இலக்குமி அனைய சீதை உடன்வர அவளைக் கண்டு காட்டில் உள்ள அழகிய மயில்களெல்லாம் இவள் சாயலின் முன் நமது சாயல் எந்த மூலை என ஒதுங்கி விலகி (சிறை) ஒருபுறம் போக (சண்டர்) கடுங்கோபம் உடையவர்களாம் அரக்கர்களின் முடிகள் தூள்களாமாறு சிதறவைத்து (அந்த) அரக்கர்கள் மாண்டு விழும்படிச் செய்து, தங்க சொரூப முள்ளவளாம் சீதையின் சிறைய்ை நீக்கின ரீராமபிரானாம் திருமால் ஊதுகொம்பை (புல்லாங்குழலை) குறி (தனக்கு) அடையாளமாகக் கொண்டு, (காளம்) விஷம் நிரம்பின (மடு) மடுவில் திந்தம் என்று பொருந்தி நடனம் செய்தவனும், (நிரை) பசுக் கூட்டங்களை ஒன்று கூட்டி வளைத்து ஒட்டி மகிழ்ந்தவனுமான (அச்சுதன்) கண்ணபிரான் - (ஈண) பெற்ற கொஞ்சும் (சுகம்) கிளிபோன்ற பாவை - பதுமை வள்ளியின் இரண்டு கொங்கைகள் மீது தாவி ழும் பெருமாளே! கும்பகோணத்து ஆறுமுகப் பெருமாளே! (ஆடுமவர்க் குழல்வேனோ) 869. கெண்டைமீன் போன்ற கண்களை உடைய மாதர்கள் மீதுள்ள ஆசைக் கலப்பானது மிக்க நறுமணமுள்ள புனுகு சட்டத்தின் வாசனை வீசுவதும். கிம்புரி - தந்தத்திற் பூணணிந்தது போற் பூணணிந்ததும் ஈசக்களபம் - பச்சைக் கர்ப்பூரத் கலவை யணிந்ததுமான கொங்கை என்னும் யானையைச் சிறிதளவு கண்டதும் (காமம்) பெருகுற்று-அதிகமாகி, அதனால் அடியேனும் விரைந்து சென்று மோசக்கலவி - வஞ்சகத்துக்கு இடமான புன்னர்ச்சியின்பம் கொண்டு, காம உண்ர்ச்சியில்ே உள்ளம் உருகி (வண்டனாக) தீயோனாகப் பூமியில் (நான்) அலைச்சல் உறாமல் (நி) வந்து ஞானப் பொருளில் ஒன்றை (எனக்கு) உபதேசித்து உன்னுடைய அழகிய திருவடியை நாள்தோறும் தந்தருளுக;