திருப்புகழ் 1317 பாசத்தால் விலை  (பழமுதிர்ச்சோலை)
Thiruppugazh 1317 pAsaththAlvilai  (pazhamudhirchOlai)
Thiruppugazh - 1317 pAsaththAlvilai - pazhamudhirchOlaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானத் தானன தத்தன தத்தன
     தானத் தானன தத்தன தத்தன
          தானத் தானன தத்தன தத்தன ...... தனதான

......... பாடல் .........

பாசத் தால்விலை கட்டிய பொட்டிகள்
     நேசித் தாரவர் சித்தம ருட்டிகள்
          பாரப் பூதர மொத்தத னத்திகள் ...... மிகவேதான்

பாவத் தால்மெயெ டுத்திடு பட்டிகள்
     சீவிக் கோதிமு டித்தள கத்திகள்
          பார்வைக் கேமய லைத்தரு துட்டிக ...... ளொழியாத

மாசுற் றேறிய பித்தளை யிற்பணி
     நீறிட் டேயொளி பற்றவி ளக்கிகள்
          மார்பிற் காதினி லிட்டபி லுக்கிகள் ...... அதிமோக

வாய்வித் தாரமு ரைக்கும பத்திகள்
     நேசித் தாரையு மெத்திவ டிப்பவர்
          மாயைக் கேமனம் வைத்தத னுட்டின ...... மலைவேனோ

தேசிக் கானக முற்றதி னைப்புன
     மேவிக் காவல்க வட்கல்சு ழற்றுவள்
          சீதப் பாதகு றப்பெண்ம கிழ்ச்சிகொள் ...... மணவாளா

தேடிப் பாடிய சொற்புல வர்க்கித
     மாகத் தூதுசெ லத்தரில் கற்பக
          தேவர்க் காதிதி ருப்புக லிப்பதி ...... வருவோனே

ஆசித் தார்மன திற்புகு முத்தம
     கூடற் கேவைகை யிற்கரை கட்டிட
          ஆளொப் பாயுதிர் பிட்டமு துக்கடி ...... படுவோனோ

டாரத் தோடகி லுற்றத ருக்குல
     மேகத் தோடொரு மித்துநெ ருக்கிய
          ஆதிச் சோலைம லைப்பதி யிற்றிகழ் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பாசத்தால் விலை கட்டிய பொட்டிகள் நேசித்தார் அவர்
சித்த(ம்) மருட்டிகள்
... (தம்மிடம் வருபவர்கள் தம்மீது வைத்த)
பாசத்தால் அதற்குரிய விலை பேசி முடிவு செய்யும் விலைமாதர்கள்.
தம்மை விரும்புவர்களின் மனதை மயக்குபவர்கள்.

பாரப் பூதரம் ஒத்த தனத்திகள் மிகவே தான் பாவத்தால்
மெய் எடுத்திடு பட்டிகள்
... கனத்த மலையை ஒத்த மார்பகத்தை
உடையவர்கள். மிகவும் பாவ வினையின் காரணத்தால் உடலை
எடுத்த வியாபாரிகள்.

சீவிக் கோதி முடித்த அளகத்திகள் பார்வைக்கே மயலைத்
தரு துட்டிகள்
... சீவி, ஆய்ந்து முடிந்து கொண்ட கூந்தலை
உடையவர்கள். பார்வையாலேயே மோகத்தை எழுப்பும் துஷ்டர்கள்.

ஒழியாத மாசு உற்று ஏறிய பித்தளையில் பணி நீறு இட்டே
ஒளி பற்ற விளக்கிகள் மார்பில் காதினில் இட்ட பிலுக்கிகள்
...
நீங்காத அழுக்கைப் பற்றி ஏறிய பித்தளை ஆபரணங்களை சாம்பலிட்டு
பளபளப்பு உறும்படி விளக்கி வைத்துள்ளவர்கள். மார்பிலும் காதிலும்
அந்த ஆபரணங்களை அணிந்து தளுக்கு செய்பவர்கள்.

அதி மோக வாய் வித்தாரம் உரைக்கும் அபத்திகள் நேசித்து
யாரையும் எத்தி வடிப்பவர் மாயைக்கே மனம் வைத்து
அதனுள் தினம் அலைவேனோ
... மிகவும் காமத்தைக் காட்டி, வாய்
விரிவாகப் பேசும் பொய்யர்கள். நட்பு செய்து யாரையும் வஞ்சித்து
வடிகட்டுபவர்கள். இத்தகையோரின் மாயைச் செயலுக்கே மனத்தைச்
செலுத்தி அந்த மாயையுள் நாள் தோறும் அலைச்சல் உறுவேனோ?

தேசிக் கானகம் உற்ற தினைப் புனம் மேவிக் காவல் கவண்
கல் சுழற்றுவள் சீதப் பாத குறப் பெண் மகிழ்ச்சி கொள்
மணவாளா
... (வள்ளிமலையின்) அழகிய காட்டில் இருந்த தினைப்
புனத்துக்குச் சென்று காவல் இருந்து, (பறவைகளை விரட்ட) கவண் வீசி
கல்லைச் சுழற்றுபவள், குளிர்ந்த திருவடியை உடையவள் ஆகிய குறப்
பெண் வள்ளி மனம் மகிழும் கணவனே,

தேடிப் பாடிய சொல் புலவர்க்கு இதமாகத் தூது செல் அத்தர்
இல் கற்பக தேவர்க்கு ஆதி திருப் புகலிப் பதி வருவோனே
ஆசித்தார் மனதில் புகும் உத்தம
... (தலங்கள் தோறும்) தேடிச்
சென்று பாடிய சொல் வன்மை படைத்த புலவராகிய சுந்தரருக்கு இன்பம்
தர (பரவை நாச்சியாரிடம்) தூதாகச் சென்ற தந்தை சிவபெருமான் பெற்ற
கற்பகமே, தேவர்களுக்கு முதல்வனே, சீகாழியில் திருஞானசம்பந்தராக
அவதரித்தவனே, விரும்பி வாழ்த்துவோருடைய உள்ளத்தில் புகும் உத்தமனே,

கூடற்கே வைகையில் கரை கட்டிட ஆள் ஒப்பாய் உதிர்
பிட்டு அமுதுக்கு அடி படுவோன் ஓடு
... மதுரையில் வைகையில்
(வெள்ளம் வர) அணை கட்ட கூலி ஆளாக ஒப்புக் கொண்டு உதிர்ந்த
பிட்டமுதுக்காக (பிரம்பினால்) அடி பட்ட சொக்கநாதரோடு,

ஆரத்தோடு அகில் உற்ற தருக் குல மேகத்தோடு ஒருமித்து
நெருக்கிய ஆதிச் சோலை மலைப் பதியில் திகழ்
பெருமாளே.
... சந்தன மரமும் அகில் மரமும் உள்ள மரக் கூட்டங்கள்
மேகம் வரை உயர வளர்ந்து சம்பந்தப்பட்டு நெருங்கிய பழைய
பழமுதிர்ச்சோலை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.1099  pg 1.1100  pg 1.1101  pg 1.1102 
 WIKI_urai Song number: 443 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1317 - pAsaththAl vilai (pazhamuthirchOlai)

pAsath thAlvilai kattiya pottikaL
     nEsith thAravar siththama ruttikaL
          pArap pUthara moththatha naththikaL ...... mikavEthAn

pAvath thAlmeye duththidu pattikaL
     seevik kOthimu diththaLa kaththikaL
          pArvaik kEmaya laiththaru thuttika ...... LozhiyAtha

mAsut RERiya piththaLai yiRpaNi
     neeRit tEyoLi patRavi LakkikaL
          mArpiR kAthini littapi lukkikaL ...... athimOka

vAyvith thAramu raikkuma paththikaL
     nEsith thAraiyu meththiva dippavar
          mAyaik kEmanam vaiththatha nuttina ...... malaivEnO

thEsik kAnaka mutRathi naippuna
     mEvik kAvalka vatkalsu zhatRuvaL
          seethap pAthaku RappeNma kizhcchikoL ...... maNavALA

thEdip pAdiya soRpula varkkitha
     mAkath thUthuse laththaril kaRpaka
          thEvark kAthithi ruppuka lippathi ...... varuvOnE

Asith thArmana thiRpuku muththama
     kUdaR kEvaikai yiRkarai kattida
          ALop pAyuthir pittamu thukkadi ...... paduvOnO

dArath thOdaki lutRatha rukkula
     mEkath thOdoru miththune rukkiya
          Athic chOlaima laippathi yitRikazh ...... perumALE.

......... Meaning .........

pAsaththAl vilai kattiya pottikaL nEsiththAr avar siththa(m) maruttikaL: Because of the attachment shown to them (by their suitors), these whores name a price for it and finalise a deal. They enchant the minds of their suitors.

pArap pUtharam oththa thanaththikaL mikavE thAn pAvaththAl mey eduththidu pattikaL: Their bosom is like a heavy mountain. Because of their past sinful deeds they were born in these bodies to become traders.

seevik kOthi mudiththa aLakaththikaL pArvaikkE mayalaith tharu thuttikaL: They comb their hair carefully and tie it into a coiffure. With their mere look these wicked women provoke a lot of passion.

ozhiyAtha mAsu utRu ERiya piththaLaiyil paNi neeRu ittE oLi patRa viLakkikaL mArpil kAthinil itta pilukkikaL: Their jewels made out of brass, with an indelible stain, are polished by these women with ash and made to glitter; and then they wear those polished jewels on their chest and ears in an ostentatious display.

athi mOka vAy viththAram uraikkum apaththikaL nEsiththu yAraiyum eththi vadippavar mAyaikkE manam vaiththu athanuL thinam alaivEnO: Demonstrating extreme passion, these women are loud-mouthed, speaking utter lies. By befriending one and all, they ditch them treacherously, after subjecting them to a screening process. Why should I fall a victim to their luring acts by losing my mind over them and roam about everyday caught in their clutches of delusion?

thEsik kAnakam utRa thinaip punam mEvik kAval kavaN kal suzhatRuvaL seethap pAtha kuRap peN makizhcchi koL maNavALA: She went to the millet-field in the beautiful forest (of VaLLimalai) to stand guard to the crop; She used to swing the sling pelting stones from it (to drive the birds away); She had cool feet; You are the Consort of that VaLLi, the damsel of the KuRavAs, making her delighted, Oh Lord!

thEdip pAdiya sol pulavarkku ithamAkath thUthu sel aththar il kaRpaka thEvarkku Athi thirup pukalip pathi varuvOnE AsiththAr manathil pukum uththama: The Great Saivite Sundarar used to go in search of many places of worship to sing hymns; to please that Sundarar, who was a poet with good command of words, He (Your Father) went as a messenger (to Paravai NAcchiyAr); You are the wish-yielding kaRpaga tree born to that Lord SivA! You are the Leader of the celestials! In SeekAzhi, You were born as ThirugnAna Sambandhar! You enter the heart of all those devotees who praise You with relish in their prayers, Oh Virtuous One!

kUdaRkE vaikaiyil karai kattida AL oppAy uthir pittu amuthukku adi paduvOn Odu: When the river Vaigai in Madhurai was flooded, He came as a manual worker being content with loose millet-flour (pittu) as wages; He was caned by the King; along with that Lord ChokkanAthan (SivA),

AraththOdu akil utRa tharuk kula mEkaththOdu orumiththu nerukkiya Athic chOlai malaip pathiyil thikazh perumALE.: You are seated in this ancient town PazhamuthirchOlai where sandalwood trees and other trees of incence are seen crowded in the groves rising high in the sky and touching the clouds, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1317 pAsaththAl vilai - pazhamudhirchOlai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]