திருப்புகழ் 1316 துடிகொள் நோய்  (பழமுதிர்ச்சோலை)
Thiruppugazh 1316 thudikoLnOi  (pazhamudhirchOlai)
Thiruppugazh - 1316 thudikoLnOi - pazhamudhirchOlaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தான தான தத்த
     தனன தான தான தத்த
          தனன தான தான தத்த ...... தனதான

......... பாடல் .........

துடிகொ ணோய்க ளோடு வற்றி
     தருண மேனி கோழை துற்ற
          இரும லீளை வாத பித்த ...... மணுகாமல்

துறைக ளோடு வாழ்வு விட்டு
     உலக நூல்கள் வாதை யற்று
          சுகமு ளாநு பூதி பெற்று ...... மகிழாமே

உடல்செய் கோர பாழ்வ யிற்றை
     நிதமு மூணி னாலு யர்த்தி
          யுயிரி னீடு யோக சித்தி ...... பெறலாமே

உருவி லாத பாழில் வெட்ட
     வெளியி லாடு நாத நிர்த்த
          உனது ஞான பாத பத்ம ...... முறுவேனோ

கடிது லாவு வாயு பெற்ற
     மகனும் வாலி சேயு மிக்க
          மலைகள் போட ஆழி கட்டி ...... யிகலூர்போய்க்

களமு றானை தேர்நு றுக்கி
     தலைக ளாறு நாலு பெற்ற
          அவனை வாளி யால டத்தன் ...... மருகோனே

முடுகு வீர சூர பத்மர்
     தலையின் மூளை நீறு பட்டு
          முடிவ தாக ஆடு நிர்த்த ...... மயில்வீரா

முநிவர் தேவர் ஞான முற்ற
     புநித சோலை மாமலைக்குள்
          முருக வேல த்யாகர் பெற்ற ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

துடிகொள் நோய்களோடு வற்றி ... துடிதுடிக்கச் செய்கின்ற
நோய்களால் உடல் வற்றிப் போய்,

தருண மேனி கோழை துற்ற ... இளமையாக இருந்த மேனியில்
கபமும் கோழையும் மிகுந்து,

இருமல் ஈளை வாத பித்தம் அணுகாமல் ... இருமலும், காச
இழுப்பும், வாதமும், பித்தமும் என்னை அணுகாதபடி,

துறைகளோடு வாழ்வு விட்டு ... இல்லறம், துறவறம் என்ற
வகைப்படும் இந்த வாழ்வை விட்டு,

உலக நூல்கள் வாதை யற்று ... உலகிலுள்ள சாத்திர நூல்களைக்
கற்க வேண்டிய வேதனை நீங்கி,

சுகமுள அநுபூதி பெற்று மகிழாமே ... சுகத்தைத் தரும் சுய
அனுபவம் அடைந்து மகிழாமல்,

உடல்செய் கோர பாழ்வயிற்றை ... உடலை வளர்க்கும் கோரமான
பாழும் வயிற்றுக்கு

நிதமும் ஊணினால் உயர்த்தி ... நாள்தோறும் உணவு வகைகளைத்
தந்து உடலைக் கொழுக்கச் செய்து,

உயிரி னீடு யோக சித்தி பெறலாமே ... வெறும் ஆயுளை
நீட்டிக்கும் யோக சித்தியைப் பெறலாமோ?

உருவிலாத பாழில் ... உருவம் கடந்த பாழ்வெளியில்

வெட்ட வெளியிலாடு நாத நிர்த்த ... ஆகாயமாகிய வெட்டவெளியில்
இசையுடன் ஆடுகின்ற நடனனே,

உனது ஞான பாத பத்மம் உறுவேனோ ... உனது கூத்தாடும்
ஞான மயமான திருவடித் தாமரையை நான் அடைவேனோ?

கடிது உலாவு வாயு பெற்ற மகனும் வாலி சேயு ... வேகமாகத்
தாவ வல்லவனும், வாயு பெற்ற மகனுமான அநுமனும், வாலியின் மகன்
அங்கதனும்

மிக்க மலைகள் போட ஆழி கட்டி ... நிரம்ப மலைகளைக் கடலின்
மீது போட்டுக் கட்டிய அணைவழியாக

இகலூர்போய்க் களமுற ஆனை தேர்நுறுக்கி ... பகைவனது
ஊராம் இலங்கையை அடைந்து, போர்க்களத்தில் யானைப்படையையும்,
தேர்ப்படையையும் தூளாக்கி,

தலைகள் ஆறு நாலு பெற்ற அவனை ... பத்துத் தலைகள்
கொண்ட ராவணனை

வாளியால் அடு அத்தன்மருகோனே ... அம்பினால் கொன்ற
அண்ணல் ராமனின் மருகனே,

முடுகு வீர சூர பத்மர் ... வேகமாக எதிர்த்துவந்த வீரர்களான
சூரன், பத்மன், சிங்கமுகன், தாரகாசுரன்* ஆகியோரின்

தலையின் மூளை நீறு பட்டு முடிவதாக ... தலைகளில் உள்ள
மூளைகள் சிதறித் தூளாகி முடிவுபெற,

ஆடு நிர்த்த மயில்வீரா ... (துடிக் கூத்து) நடனம் ஆடிய
மயிலின் மீதமர்ந்த வீரனே,

முநிவர் தேவர் ஞான முற்ற புநித சோலை மாமலைக்குள் ...
முநிவர்களும், தேவர்களும் ஞானம் அடைந்த பரிசுத்தமான சோலை
மாமலைக்குள் (பழமுதிர்ச்சோலைக்குள்**) வீற்றிருக்கும்

முருக வேல த்யாகர் பெற்ற பெருமாளே. ... வேல் முருகனே,
தியாகமூர்த்தியாம் சிவபிரான் ஈன்ற பெருமாளே.


* சூரன், பத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகிய பூதகணங்கள் கருடன் முதலிய
வாகனங்களுக்குப் பெருந் தொல்லை தந்தமையால் முருகனால் அசுரர்களாக
ஆகுமாறு சபிக்கப்பட்டனர். சாபம் நீங்கும்போது அவரவர்கள் விரும்பியபடியே
சிங்கமுகன் துர்க்கைக்கு சிம்மவாகனமாகவும், தாரகன் ஐயனாருக்கு யானை
வாகனமாகவும், சூரன் கந்தனுக்கு மயில் வாகனமாகவும், பத்மன் முருகனுக்குச்
சேவற்கொடியாகவும் ஆனார்கள் - கந்த புராணம்.


** பழமுதிர்ச்சோலை மதுரைக்கு வடக்கே 12 மைலில் உள்ள கள்ளழகர் கோயில்
என்ற தலமாகும்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.1097  pg 1.1098  pg 1.1099  pg 1.1100 
 WIKI_urai Song number: 442 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1316 - thudikoL nOi (pazhamudhirchOlai)

thudiko NOyka LOdu vatRi
     tharuNa mEni kOzhai thutRa
          iruma leeLai vAtha piththa ...... maNukAmal

thuRaika LOdu vAzhvu vittu
     ulaka nUlkaL vAthai yatRu
          sukamu LAnu pUthi petRu ...... makizhAmE

udalsey kOra pAzhva yitRai
     nithamu mUNi nAlu yarththi
          yuyiri needu yOka siththi ...... peRalAmE

uruvi lAtha pAzhil vetta
     veLiyi lAdu nAtha nirththa
          unathu njAna pAtha pathma ...... muRuvEnO

kadithu lAvu vAyu petRa
     makanum vAli sEyu mikka
          malaikaL pOda Azhi katti ...... yikalUrpOyk

kaLamu RAnai thErnu Rukki
     thalaika LARu nAlu petRa
          avanai vALi yAla daththan ...... marukOnE

muduku veera chUra pathmar
     thalaiyin mULai neeRu pattu
          mudiva thAka Adu nirththa ...... mayilveerA

munivar thEvar njAna mutRa
     punitha sOlai mAmalaikkuL
          muruga vEla thyAkar petRa ...... perumALE.

......... Meaning .........

thudikoL nOykaLOdu vatRi: Twitching due to painful diseases, the body is drained out.

tharuNa mEni kOzhai thutRa: What used to be a robust physique is now afflicted with thick slimy mucus in the throat,

irumal eeLai vAtha piththam aNukAmal: cough, wheezing, rheumatism and biliousness. To keep these diseases away from me,

thuRaikaLOdu vAzhvu vittu: I have to renounce this life of two kinds, namely, family life and ascetic life.

ulaka nUlkaL vAthai yatRu: I do not want to be burdened with the need to learn all pedantic works in this world.

sukamuLa anupUthi petRu makizhAmE: Rather than experiencing the blissful self-realisation and enjoying the status,

udalsey kOra pAzhvayitRai nithamum UNinAl uyarththi: I have been feeding the wretched stomach every day with varieties of food to fatten this body.

uyiri needu yOka siththi peRalAmE: Is this an achievement through yOgA, just extending the life?

uruvi lAtha pAzhil vetta veLiyi lAdu nAtha nirththa: In the cosmos without any shape or form, in the milky way, You dance liltingly to the rhythmic music!

unathu njAna pAtha pathma muRuvEnO: Will I ever be able to attain Your hallowed dancing feet that symbolise True Knowledge?

kadithu lAvu vAyu petRa makanum vAli sEyu: Hanuman, the son of VAyu (God of Air), who is capable of leaping with immense speed, and Angathan, the son of VAli,

mikka malaikaL pOda Azhi katti: built a bridge to LankA by throwing many mountains on the sea;

yikalUrpOyk kaLamuR Anai thEr nuRukki: through that bridge He went to the enemy's land, destroyed armies of elephants and chariots in the battlefield

thalaika LARu nAlu petRa avanai vALi yAla daththan marukOnE: and killed Ravana, the ten-headed one, with His arrow; He is Rama, and You are His nephew!

muduku veera chUra pathmar thalaiyin mULai neeRu pattu mudiva thAka: The menacing demons, namely SUran, Padman, Singamukan and TharakAsuran* were killed, with their brains shattered to pieces,

Adu nirththa mayilveerA: and then Your peacock danced a special dance (called thudi), Oh valorous One!

munivar thEvar njAna mutRa: Many sages and celestials attained enlightenment

punitha sOlai mAmalaikkuL muruga vEla: in this impeccable grove at this great mountain (PazhamuthirchOlai**), which is Your abode, Oh MurugA with the Spear!

thyAkar petRa perumALE.: You are the son of ThyAgar (the Sacrificer, SivA), Oh Great One!


* SUran, Padman, Singamukan and TharakAsuran were previously holy fiends in Mount KailAsh. Once they offended all the Divine Vehicles, including Garuda, and Murugan became enraged at this and cursed them to be born as demons in the world. When the spell of their curse was lifted by Murugan, they took forms according to their own wishes, respectively, as Peacock (as the vehicle for Murugan), Rooster (in the staff of Murugan), Lion (as the vehicle for Durga) and Elephant (as the vehicle of AyyanAr) - Kantha PurANam.


** PazhamuthirchOlai is 12 miles north of Madhurai and is known as KaLLazhagar Kovil.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1316 thudikoL nOi - pazhamudhirchOlai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]