பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1098

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை) திருப்புகழ் உரை 625 442 துடிக்கச் செய்கின்ற நோய்களால் (உடல்) வற்றி இளமையைக் காட்டும் மேனியிற் கோழை நெருக்க, இருமல், ஈளை (காச இழுப்பு), வாதம், பித்தம் (எனப்படும் நோய்கள் என்னை) அணுகாதபடி இல்லறம், துறவறம் என்னும் கூறுகளை உடைய (வழிகளைக் கொண்ட) (இவ்) வாழ்வை விட்டு, உலக நூல்களைக் கற்க வேண்டிய வேதனை நீங்கிச் சுகத்தைக் கொண்ட அநுபூதியைப் பெற்று (நான்) மகிழாமல். உடலை வளர்க்கும் கோரமான பாழான வயிற்றைத் தினந்தோறும் உணவினால் வளரச் செய்து, உயிர் (ஆயுள்) வளரும் படியான யோக சித்தியைப் பெறலாமோ (பெறுதல் நன்றோ!) நன்றன்று என்றபடி, உருவம் கடந்த பாழ்வெளியில், வெட்ட வெளியிலே ஆடுகின்ற ஒலியுடன் கூடிய நடனனே! (கூத்தனே!) உனது ஞான திருவடிக் கமலங்களை அடைவேனோ! (அல்லது) வெளியில் ஆடுகின்ற நாதனே! உனது நிர்த்த, ஞான பாத பத்மம் உறுவேனோ! உனது கூத்தாடும் ஞான மயமான திருவடித் தாமரையை அடைவேனோ! வேகத்தில் உலாவ வல்ல வாயு பெற்ற மகனாகிய அநுமனும், வாலியின் பிள்ளை அங்கதனும், நிரம்ப மலைகளைப் போட்டுச் சமுத்திரத்தில் அணை கட்டிப் பகைவனுடைய ஊருக்குப் போய்ப் போர்க்களத்தில் இருந்த ஆனைகளையும் தேர்களையும் தூளாக்கித் தலைகள் (ஆறுநாலு) பத்து கொண்ட அவனை (ராவணனை) அம்பினால் அடு அத்தன் (அம்பினாற் கொன்ற அண்ணல் திருமாலின்) மருகனே!