திருப்புகழ் 1250 தீ ஊதை தாத்ரி  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1250 theeUdhaithAthri  (common)
Thiruppugazh - 1250 theeUdhaithAthri - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானான தாத்த தானான தாத்த
     தானான தாத்த ...... தனதான

......... பாடல் .........

தீயூதை தாத்ரி பானீய மேற்ற
     வானீதி யாற்றி ...... கழுமாசைச்

சேறூறு தோற்பை யானாக நோக்கு
     மாமாயை தீர்க்க ...... அறியாதே

பேய்பூத மூத்த பாறோரி காக்கை
     பீறாஇ ழாத்தி ...... னுடல்பேணிப்

பேயோன டாத்து கோமாளி வாழ்க்கை
     போமாறு பேர்த்து ...... னடிதாராய்

வேயூறு சீர்க்கை வேல்வேடர் காட்டி
     லேய்வாளை வேட்க ...... வுருமாறி

மீளாது வேட்கை மீதூர வாய்த்த
     வேலோடு வேய்த்த ...... இளையோனே

மாயூர வேற்றின் மீதே புகாப்பொன்
     மாமேரு வேர்ப்ப ...... றியமோதி

மாறான மாக்கள் நீறாக வோட்டி
     வானாடு காத்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தீ ஊதை தாத்ரி பானீயம் ஏற்ற வான் ஈதியால் திகழும் ...
நெருப்பு, காற்று, மண், நீர், உயர்ந்த விண் இந்த ஐம்பூதங்களால்
விளங்குகின்றதும்,

ஆசைச் சேறு ஊறு தோல் பை ... ஆசை என்னும் சேறு
ஊறியுள்ளதும், தோலால் ஆனதுமான பையாகிய இந்த உடம்பு,

யானாக நோக்கு(ம்) மா மாயை தீர்க்க அறியாதே ... நானாக
எண்ணுகின்ற பெரும் மாயையை ஒழிக்க அறியாமல்,

பேய் பூதம் மூத்த பாறு ஓரி காக்கை ... பேய்களும், பூதங்களும்,
வயதான பருந்துகளும், நரிகளும், காகங்களும்

பீறா இழாத் தி(ன்)னு(ம்) உடல் பேணி ... கிழித்து, இழுத்து
உண்ணப் போகின்ற உடலை விரும்பிப் பாதுகாத்து,

பேயோன் நடாத்து கோமாளி வாழ்க்கை ... பேய் போன்ற நான்
நடத்துகின்ற கோணங்கித்தனமான வாழ்க்கை

போம் ஆறு பேர்த்து உன் அடி தாராய் ... தொலையும் வண்ணம்
விலக்கவல்ல உனது திருவடிகளைத் தந்து அருள்வாயாக.

வேய் ஊறு சீரக் கை வேல் வேடர் காட்டில் ... புல்லாங் குழலில்
வைத்துத் தடவும் சீரான கையில் வேல் ஏந்தும் வேடுவர்கள் (வாழும்)
வள்ளிமலைக் காட்டில்,

ஏய்வாளை வேட்க உரு மாறி ... பொருந்தி இருந்த வள்ளியை
விரும்பித் திருமணம் செய்ய உருவத்தை மாற்றிக் கொண்டு,

மீளாது வேட்கை மீது ஊர வாய்த்த வேலோடு வேய்த்த
இளையோனே
... திரும்பாது காம ஆசை மேலெழ, பொருந்திய
வேலுடனே, ஒற்றர் செய்தி அறியப் போவதுபோலச் சென்ற இளையவனே,

மாயூர ஏற்றின் மீதே புகாப் பொன் மா மேரு வேர்ப் பறிய
மோதி
... ஒப்பற்ற மயிலின் மேல் ஏறி, பொன்னிறம் உடைய கிரெளஞ்ச
மலையின் வேர் பறியும்படி அதனைத் தாக்கி,

மாறு ஆன மாக்கள் நீறாக ஓட்டி ... மாறுபட்டு எதிர்த்த அசுரர்கள்
வெந்து சாம்பலாக ஓட்டி ஒழித்து,

வான் நாடு காத்த பெருமாளே. ... தேவர்களின் திருநாட்டைக்
காப்பாற்றிய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.594  pg 3.595 
 WIKI_urai Song number: 1249 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1250 - thee Udhai thAthri (common)

theeyUthai thAthri pAneeya mEtRa
     vAneethi yAtRi ...... kazhumAsai

sERURu thORpai yAnAka nOkku
     mAmAyai theerkka ...... aRiyAthE

pEypUtha mUththa pAROri kAkkai
     peeRAi zhAththi ...... nudalpENip

pEyOna dAththu kOmALi vAzhkkai
     pOmARu pErththu ...... nadithArAy

vEyURu seerkkai vElvEdar kAttil
     EyvALai vEtka ...... vurumARi

meeLAthu vEtkai meethUra vAyththa
     vElOdu vEyththa ...... iLaiyOnE

mAyUra vEtRin meethE pukAppon
     mAmEru vErppa ...... RiyamOthi

mARAna mAkkaL neeRAka vOtti
     vAnAdu kAththa ...... perumALE.

......... Meaning .........

thee Uthai thAthri pAneeyam EtRa vAn eethiyAl thikazhum: The five elements consisting of fire, air, earth, water and the great sky constitute this body;

Asai sERu URu thOl pai: it is but a bag of skin soaked in the mud of desire;

yAnAka nOkku(m) mA mAyai theerkka aRiyAthE: I believe that this body alone is myself; not knowing how to get aid of this great delusion,

pEy pUtham mUththa pARu Ori kAkkai peeRA izhAth thi(n)nu(m) udal pENi: I keenly nourish this body of mine, an eventual prey for devils, fiends, old vultures, jackals and crows that would tear it apart and devour;

pEyOn nadAththu kOmALi vAzhkkai: this facetious life led by the devil in myself

pOm ARu pErththu un adi thArAy: can be terminated only by Your granting me of Your hallowed feet, please oblige!

vEy Uru seerak kai vEl vEdar kAttil: Into the forest of VaLLimalai, where hunters roam about with bows in their well-formed hands rather than holding bamboo flutes,

EyvALai vEtka uru mARi: You entered assuming several disguises in pursuit of the pretty damsel, VaLLi, with a desire to marry her;

meeLAthu vEtkai meethu Ura vAyththa vElOdu vEyththa iLaiyOnE: Your passion for her was unremitting as You went about with a raised spear as though You were on a spying mission, Oh Young One!

mAyUra EtRin meethE pukAp pon mA mEru vErp paRiya mOthi: Mounting the great peacock, You attacked the golden mount Krouncha and uprooted it;

mARu Ana mAkkaL neeRAka Otti: all the confronting and hostile demons were burnt down into ash and destroyed;

vAn nAdu kAththa perumALE.: and the lofty land of the celestials was rescued by You, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1250 thee Udhai thAthri - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]