திருப்புகழ் 1235 குடிமை மனையாட்டி  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1235 kudimaimanaiyAtti  (common)
Thiruppugazh - 1235 kudimaimanaiyAtti - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தாத்தன தனதனன தாத்தன
     தனதனன தாத்தன ...... தனதான

......... பாடல் .........

குடிமைமனை யாட்டியும் அடிமையொடு கூட்டமும்
     குலமுமிறு மாப்புமி ...... குதியான

கொடியபெரு வாழ்க்கையி லினியபொரு ளீட்டியெ
     குருடுபடு மோட்டென ...... வுடல்வீழில்

அடைவுடைவி டாச்சிறு பழையதுணி போர்த்தியெ
     அரிடசுடு காட்டிடை ...... யிடுகாயம்

அழியுமள வாட்டிலுன் அமலமலர் மாப்பத
     அருணசர ணாஸ்பதம் ...... அருள்வாயே

அடியினொடு மாத்தரு மொளமொளமொ ளாச்சென
     அலறிவிழ வேர்க்குல ...... மொடுசாய

அவுணர்படை தோற்பெழ அருவரைக ளார்ப்பெழ
     அயிலலகு சேப்பெழ ...... மறைநாலும்

உடையமுனி யாட்பட முடுகவுணர் கீழ்ப்பட
     உயரமரர் மேற்பட ...... வடியாத

உததிகம ராப்பிள முதுகுலிச பார்த்திபன்
     உலகுகுடி யேற்றிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

குடிமை மனையாட்டியும் அடிமையொடு கூட்டமும் ...
குடிப்பிறப்பின் ஒழுக்கத்துக்கு ஏற்ற மனைவியும், ஏவலாலர்களுடைய
கூட்டமும்,

குலமும் இறுமாப்பும் மிகுதியான ... குலப் பெருமையும், ஆணவச்
செருக்கும் மிகுந்து நிற்கும்

கொடிய பெரு வாழ்க்கையில் இனிய பொருள் ஈட்டியே ...
பொல்லாத இப்பெரிய வாழ்க்கையில் இனிமை தரும் பொருளைச்
சேகரித்து,

குருடுபடு மோட்டு என உடல் வீழில் ... கண் தெரியாத
குருடுபோல் இங்கும் அங்கும் அலைந்த இந்த உடம்பு இறந்து வீழ்ந்தால்,

அடைவு உடை விடாச் சிறு பழைய துணி போர்த்தியெ ...
தகுந்த உடையைத் தவிர்த்து, (அதற்குப் பதிலாகச்) சிறிய பழைய துணி
ஒன்றால் (பிணத்தைப்) போர்த்தி,

அரிட(ம்) சுடு காட்டு இடை இடு காயம் அழியும்
அளவாட்டில்
... துயரத்துக்கு இடமான சுடு காட்டில் போடப்பட்டு
உடல் எரிந்து அழிந்து போகும் சமயத்தில்,

உன் அமல மலர் மாப்பாத அருண சரண ஆஸ்பதம்
அருள்வாயே
... உனது குற்றமற்ற, மலர் போன்ற, சிறந்த நிலையாகிய
சிவந்த திருவடி என்னும் பற்றுக் கோட்டை அருள்வாயாக.

அடியினொடு மாத் தரு மொள மொள மொள ஆச்சு என
அலறி விழ
... அடியோடு (சூரனாகிய) பெரிய மாமரம் மொள மொள
மொள என்னும் ஒலியோடு அலறிக் கூச்சலிட்டு விழ,

வேர்க் குலமொடு சாய ... (தன்னுடைய) வேர் போன்ற எல்லா அசுரர்
கூட்டத்துடன் சாய்ந்து அழிய,

அவுணர் படை தோற்பு எழ அருவரைகள் ஆர்ப்பு எழ ...
அசுரர்கள் சேனை தோல்வி அடைய, அருமையான கிரெளஞ்சம், ஏழு
குலகிரிகள் முதலிய மலைகள் கூக்குரல் இட்டு இடிய,

அயில் அலகு சேப்பு எழ மறை நாலும் உடைய முனி ஆள்
பட
... வேலாயுதம் (ரத்தத்தின்) செந்நிறம் காட்ட, நான்கு வேதங்களும்
வல்ல முனியாகிய பிரமன் தனது ஆணவம் அடங்க,

முடுகு அவுணர் கீழ்ப் பட உயர் அமரர் மேற் பட ... எதிர்த்து
வந்த அசுரர்கள் கீழ்மை அடைய, சிறந்த தேவர்கள் மேம்பட்டு விளங்க,

வடியாத உததி கமராப் பிள ... வற்றாத கடலும் பூமி பிளவு
கொண்டது போலப் பிளவுபட,

முது குலிச பார்த்திபன் உலகு குடி ஏற்றிய பெருமாளே. ...
பழையவனும், வஜ்ராயுதம் ஏந்தியவனுமாகிய இந்திரனை பொன்னுலகில்
மீண்டும் குடி ஏற்றி வைத்த பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.566  pg 3.567 
 WIKI_urai Song number: 1234 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1235 - kudimai manaiyAtti (common)

kudimaimanai yAttiyum adimaiyodu kUttamum
     kulamumiRu mAppumi ...... kuthiyAna

kodiyaperu vAzhkkaiyi liniyaporu Leettiye
     kurudupadu mOttena ...... vudalveezhil

adaivudaivi dAcciRu pazhaiyathuNi pOrththiye
     aridasudu kAttidai ...... yidukAyam

azhiyumaLa vAttilun amalamalar mAppatha
     aruNasara NAspatham ...... aruLvAyE

adiyinodu mAththaru moLamoLamo LAccena
     alaRivizha vErkkula ...... modusAya

avuNarpadai thORpezha aruvaraika LArppezha
     ayilalaku sEppezha ...... maRainAlum

udaiyamuni yAtpada mudukavuNar keezhppada
     uyaramarar mERpada ...... vadiyAtha

uthathikama rAppiLa muthukulisa pArththipan
     ulakukudi yEtRiya ...... perumALE.

......... Meaning .........

kudimaimanai yAttiyum adimaiyodu kUttamum: The wife who upholds the family values, the whole lot of servants,

kulamumiRu mAppumi kuthiyAna: the prestige of the lineage and the arrogant superiority complex are all dominating

kodiyaperu vAzhkkaiyi liniyaporu Leettiye: in this great but perilous life; after earning pleasure-giving money to lead this life,

kurudupadu mOttena vudalveezhil: when this body, running blindly hither and thither, falls dead,

adaivudaivi dAcciRu pazhaiyathuNi pOrththiye: it is covered not by a worthy cloth but by a little piece of rag;

aridasudu kAttidai yidukAyam azhiyumaLa vAttil: then the body is laid in the dismal cremation ground to be burnt down! At that time,

un amalamalar mAppatha aruNasara NAspatham aruLvAyE: kindly grant me Your reddish, lotus-like, unblemished and hallowed feet which are the best refuge for me.

adiyinodu mAththaru moLamoLamo LAccena alaRivizha: The uprooted demon SUran, disguised as a big mango tree, fell down screaming, breaking apart with a cracking noise;

vErkkula modusAya: his entire clan was destroyed root and branch;

avuNarpadai thORpezha aruvaraika LArppezha ayilalaku sEppezha: the armies of the demons were defeated; the rare mountains, Krouncha and the seven protective hills, screamed when shattered; Your spear flashed blood-red colour;

maRainAlum udaiyamuni yAtpada mudukavuNar keezhppada uyaramarar mERpada: the sage BrahmA, well-versed in the four VEdAs, became humble; the confronting demons were humiliated; the renowned celestials were exalted;

vadiyAtha uthathikama rAppiLa: the inexhaustible ocean dried up and the parched land cracked open;

muthukulisa pArththipan ulakukudi yEtRiya perumALE.: when the good old King IndrA, holding Vajra as His weapon, was resettled in His golden land by You, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1235 kudimai manaiyAtti - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]