திருப்புகழ் 1236 குறைவது இன்றி  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1236 kuRaivadhuindRi  (common)
Thiruppugazh - 1236 kuRaivadhuindRi - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தந்த தத்த தனன தந்த தத்த
     தனன தந்த தத்த ...... தனதான

......... பாடல் .........

குறைவ தின்றி மிக்க சலமெ லும்பு துற்ற
     குடிலி லொன்றி நிற்கு ...... முயிர்மாயம்

குலைகு லைந்து தெர்ப்பை யிடைநி னைந்து நிற்ப
     கொடிய கொண்ட லொத்த ...... வுருவாகி

மறலி வந்து துட்ட வினைகள் கொண்ட லைத்து
     மரண மென்ற துக்க ...... மணுகாமுன்

மனமி டைஞ்ச லற்று னடிநி னைந்து நிற்க
     மயிலில் வந்து முத்தி ...... தரவேணும்

அறுகு மிந்து மத்த மலையெ றிந்த அப்பு
     மளிசி றந்த புட்ப ...... மதுசூடி

அருந டஞ்செ யப்ப ரருளி ரங்கு கைக்கு
     அரிய இன்சொல் செப்பு ...... முருகோனே

சிறுகு லந்த னக்கு ளறிவு வந்து தித்த
     சிறுமி தன்த னத்தை ...... யணைமார்பா

திசைமு கன்தி கைக்க அசுர ரன்ற டைத்த
     சிறைதி றந்து விட்ட ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

குறைவது இன்றி மிக்க சலம் எலும்பு (அ)து உற்ற குடிலில்
ஒன்றி நிற்கும் உயிர் மாயம்
... குறைவு இல்லா வகையில், நிறைய
நீர், எலும்பு முதலியவை நெருங்கிய வீடாகிய உடலில் பொருந்தி
இருக்கும் உயிர் என்கின்ற மாயப் பொருள்,

குலை குலைந்து தெர்ப்பை இடை நினைந்து நிற்ப ...
நிலை கெட்டு, தெர்ப்பைப் படுக்கையில் (சுடுகாட்டுக்கு
அனுப்புவதற்காக) கிடத்த வேண்டும் என்று (உறவினர்கள்) நினைத்து
நிற்கும் போது,

கொடிய கொண்டல் ஒத்த உருவாகி மறலி வந்து துட்ட
வினைகள் கொண்டு அலைத்து
... பொல்லாதவனாய் கரு மேகம்
நிகரான உருவத்துடன் யமன் வந்து கொடிய செயல்களைச்
செய்து வருத்தி,

மரணம் என்ற துக்கம் அணுகா முன் ... இறப்பு என்ற
துயரம் என்னைக் கூடுவதற்கு முன்பாக,

மனம் இடைஞ்சல் அற்று உன் அடி நினைந்து நிற்க மயிலில்
வந்து முத்தி தர வேணும்
... நான் மன வேதனைகள் இல்லாமல்
உனது திருவடியைத் தியானித்து நிற்க, மயிலின் மீது ஏறி வந்து வீட்டுப்
பேற்றைத் தர வேண்டும்.

அறுகும் இந்து மத்தம் அலை எறிந்த அப்பும் அளி சிறந்த
புட்பம் அது சூடி
... அறுகு, பிறைச் சந்திரன், ஊமத்த மலர், அலைகள்
வீசும் கங்கை நீர், வண்டுகள் நிரம்பி மொய்க்கும் மலர்கள் இவைகளைச்
சூடிக் கொண்டு,

அரு நடம் செய் அப்பர் அருள் இரங்குகைக்கு அரிய இன்
சொல் செப்பு முருகோனே
... அருமையான ஊழிக் கூத்தாம்
நடனத்தைச் செய்த தந்தையாகிய சிவ பெருமான் உபதேசப் பொருளை
அருள்வாயாக என்று உன்னை வேண்டி இரங்கவும், (அதற்கு இசைந்து)
அருமையான இனிய பிரணவ மந்திரத்தை அவருக்கு உபதேசித்த
முருகனே,

சிறு குலம் தனக்குள் அறிவு வந்து உதித்த சிறுமி தன்
தனத்தை அணை மார்பா
... கீழான குறக் குலத்தில் ஞான நிலை
கூடித் தோன்றிய சிறுமியாகிய குறப் பெண்ணின் மார்புகளை அணைந்த
திருமார்பனே,

திசை முகன் திகைக்க அசுரர் அன்று அடைத்த சிறை திறந்து
விட்ட பெருமாளே.
... பிரமதேவன் திகைக்குமாறு அசுரர்கள்
அந்நாளில் தேவர்களை அடைத்துவைத்த சிறைகளைத் திறந்துவிட்டு,
தேவர்களை விடுவித்த பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.566  pg 3.567  pg 3.568  pg 3.569 
 WIKI_urai Song number: 1235 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1236 - kuRaivadhu indRi (common)

kuRaiva thinRi mikka salame lumpu thutRa
     kudili lonRi niRku ...... muyirmAyam

kulaiku lainthu therppai yidaini nainthu niRpa
     kodiya koNda loththa ...... vuruvAki

maRali vanthu thutta vinaikaL koNda laiththu
     maraNa menRa thukka ...... maNukAmun

manami dainja latRu nadini nainthu niRka
     mayilil vanthu muththi ...... tharavENum

aRuku minthu maththa malaiye Rintha appu
     maLisi Rantha putpa ...... mathucUdi

aruna damce yappa raruLi rangu kaikku
     ariya insol seppu ...... murukOnE

siRuku lantha nakku LaRivu vanthu thiththa
     siRumi thantha naththai ...... yaNaimArpA

thisaimu kanthi kaikka asura ranRa daiththa
     siRaithi Ranthu vitta ...... perumALE.

......... Meaning .........

kuRaivathu inRi mikka salam elumpu (a)thu utRa kudilil onRi niRkum uyir mAyam: This delusory thing called life is adequately accommodated in this cottage of a body, amidst plenty of water and bones;

kulai kulainthu therppai idai ninainthu niRpa: when the body collapses, and the relatives stand around planning to lay it upon a bed of weedy-grass (preparatory to cremation),

kodiya koNdal oththa uruvAki maRali vanthu thutta vinaikaL koNdu alaiththu: the evil God of Death (Yaman), with the hue of dark cloud, comes to harass and torment the body;

maraNam enRa thukkam aNukA mun: and just before the woe of death strikes me,

manam idainjal atRu un adi ninainthu niRka mayilil vanthu muththi thara vENum: to enable me to meditate on Your feet, free of any mental anguish, kindly come to me, mounted on the peacock, and grant me liberation!

aRukum inthu maththam alai eRintha appum aLi siRantha putpam athu cUdi: He wears on His matted hair the grass aRuku, crescent moon, Umaththam flower, the wavy waters of the river Gangai and plenty of flowers around which beetles swarm;

aru nadam sey appar aruL irangukaikku ariya in sol seppu murukOnE: He is Your father who danced the rare cosmic dance; when that Lord SivA humbly beseeched You to explain the meaning of the PraNava ManthrA, (acceding to His request) You preached that sweet ManthrA, Oh MurugA!

siRu kulam thanakkuL aRivu vanthu uthiththa siRumi than thanaththai aNai mArpA: Although she was raised by KuRavAs of an inferior lineage, she was an enlightened girl; You embraced the bosom of that damsel VaLLi with Your broad chest, Oh Lord!

thisai mukan thikaikka asurar anRu adaiththa siRai thiRanthu vitta perumALE.: To the consternation of BrahmA, all the celestials previously imprisoned by the demons, were all freed by You, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1236 kuRaivadhu indRi - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]