திருப்புகழ் 1144 எத்தி இரு குழை  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1144 eththiirukuzhai  (common)
Thiruppugazh - 1144 eththiirukuzhai - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்த தனதனன தான தானதன
     தத்த தனதனன தான தானதன
          தத்த தனதனன தான தானதன ...... தனதான

......... பாடல் .........

எத்தி யிருகுழையை மோதி மீனமதின்
     முட்டி யிடறியம தூதர் போலமுகி
          லெட்டி வயவர்கர வாளை வேல்முனையை ...... யெதிர்சீறி

எத்தி சையினுமொரு காம ராஜன்மிக
     வெற்றி யரசுதனை யாள வீசியட
          லெற்றி யிளைஞருயிர் கோலு நீலவிழி ...... மடமாதர்

வித்தை தனிலுருகி யாசை யாகியவர்
     கைக்குள் மருவுபொரு ளான ஆகும்வரை
          மெத்தை தனிலுருகி மோக மாகிவிட ...... அதன்மேலே

வெட்க மிலைநடவு மேகு மேகுமினி
     மற்ற வரையழையு மாத ரேயெனமுன்
          விட்ட படிறிகள்தம் நேச ஆசைகெட ...... அருள்வாயே

ஒத்த வரிகமுகு வாளை தாவுபுனல்
     அத்தி நகரமர சான வாள்நிருபன்
          ஒக்கு நினைவுமுனி லாமல் வாகுபெல ...... நிலைகூற

உற்ற தருமனடல் வீமன் வேல்விசையன்
     வெற்றி நகுலசக தேவர் தேர்தனிலும்
          ஒத்து முடுகிவிடு பாகன் வாளமரி ...... லசுரேசன்

பத்து முடிகள்துக ளாக வாகுஇரு
     பத்து மொருகணையில் வீழ நேரவுணர்
          பட்டு மடியஅமர் மோது காளமுகில் ...... மருகோனே

பச்சை மயிலில்வரு வீர வேல்முருக
     துட்ட நிருதர்குல கால வானவர்கள்
          பத்தி யுடனடியில் வீழ வாழ்வுதவு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

(முதல் 6 வரிகள் வேசையர் கண்களை வருணிக்கின்றன).

எத்தி இரு குழையை மோதி மீனம் அதில் முட்டி இடறி யம
தூதர் போல
... இரண்டு குண்டலங்களையும் உதைத்து எறிதல் போலத்
தாக்கி, மீன் பாய்வது போன்று சென்று (செவிகளை) முட்டித் தாக்கி, யம
தூதுவர்களைப் போல விளங்கி,

முகில் எட்டி வயவர் கர வாளை வேல் முனையை எதிர் சீறி ...
மேகத்தின் கரு நிறத்துடன் போட்டி இட்டு, போர் வீரர்களின் கையில்
ஏந்திய வாளையும் வேல் முனையையும் எதிர்த்துச் சீறுவது போலக்
கூர்மை உடையனவாய்,

எத் திசையினும் ஒரு காம ராஜன் மிக வெற்றி அரசு தனை
ஆள வீசி அடல் எற்றி
... எல்லா திக்குகளிலும் ஒப்பற்ற மன்மதராஜன்
மிகவும் வெற்றியுடன் தனது அரசை எங்கும் ஆள விட்டது போலப் பரந்து,
தமது வல்லமையைச் செலுத்தி,

இளைஞர் உயிர் கோலும் நீல விழி மடமாதர் ...
இளைஞர்களுடைய உயிரை வளைத்து இழுக்கும் கரிய கண்ணை உடைய
அழகிய விலைமாதர்களின்

வித்தை தனில் உருகி ஆசை ஆகி அவர் கைக்குள் மருவு
பொருள் ஆன ஆகும் வரை மெத்தை தனில் உருகி
மோகமாகி விட
... சாமர்த்தியச் செயல்களால் உருக்கம் கொண்டு
ஆசைப்பட்டு, அவர்கள் கைக்குள்ளே அகப்பட்டு, கைப்பொருள்
செலவழிந்து போகும் வரை படுக்கையில் உள்ளம் உருகி, (பொருள்
தீர்ந்துவிட்ட காரணத்தால்) மோகம் முடிவு பெற,

அதன் மேலே வெட்கம் இலை நடவும் ஏகும் ஏகும் இனி
மற்றவரை அழையும் மாதரே என
... அதற்குப் பிறகு (இப்படி
வெறும் கையுடன் வருவது) உமக்கு வெட்கமாக இல்லையா? வெளியேறும்,
போய்விடும் போய்விடும், இனி வேறு பேர்வழிகளை அழைத்து வாருங்கள்,
பெண்களே, என்று (சேடியர்களுக்குக் கட்டளை இட்டு)

முன் விட்ட படிறிகள் தம் நேச ஆசை கெட அருள்வாயே ...
இவ்வாறு வீட்டு வாசலுக்கு முன்னாலிருந்து விரட்டிவிடும் வஞ்சனை
எண்ணமுடைய வேசிகளின் மீதுள்ள ஆசை அற்றுத் தொலைய அருள்
செய்வாயாக.

ஒத்த வரி கமுகு வாளை தாவு புனல் அத்தி நகரம் அரசான
வாள் நிருபன்
... ஒழுங்காக அமைந்த கோடுகளைக் கொண்ட கமுக
மரத்தின் மீது வாளை மீன்கள் தாவிக் குதிக்கும் நீர் நிலைகளை உடைய
(நாட்டின் தலைநகரான) அஸ்தினா புரத்தை ஆண்டுவந்த, வாள் ஏந்திய
அரசனான துரியோதனன்,

ஒக்கு நினைவு முன் இலாமல் வாகுபெல(ம்) நிலை கூற ...
சமாதானத்துக்கு உடன்படும் நினைவே முன்பு இல்லாமல், தனது தோள்
பலத்தின் திடத்தையே (இறுமாப்புடன்) எடுத்துரைக்க,

உற்ற தருமன் அடல் வீமன் வேல் விசையன் வெற்றி நகுல
சகதேவர் தேர் தனிலும் ஒத்து முடுகிவிடு பாகன்
... (போருக்கு)
உடன்பட்ட, தருமன், பீமன், வேலேந்திய அருச்சுனன், வெற்றியே பெறும்
நகுலன், சகாதேவன் ஆகிய பாண்டவர்களின் தேரினை மனமொத்துச்
செலுத்திய சாரதியும் (கண்ணன்),

வாள் அமரில் அசுரேசன் பத்து முடிகள் துகளாக வாகு
இருபத்தும் ஒரு கணையில் வீழ நேர் அவுணர் பட்டு மடிய
அமர் மோது(ம்) காள முகில் மருகோனே
... வாட்போரில்
ராவணனுடைய பத்துத் தலைகளும் பொடிபட, தோள்கள் இருபதும் ஒரே
பாணத்தில் அற்று விழ, எதிர்த்து வந்த அசுரர்கள் யாவரும் அழிந்து
இறக்கும்படி போரைச் செய்த கரிய மேகம் போன்றவனுமாகிய (ராமன்)
திருமாலின் மருகனே,

பச்சை மயிலில் வரும் வீர வேல் முருக துட்ட நிருதர்
குலகால
... பச்சை மயிலின் மேல் ஏறிவரும் வீரனே, வேல் ஏந்தும்
முருகனே, கொடுமையான அசுரர்கள் குலத்துக்கு காலனாகத்
தோன்றியவனே,

வானவர்கள் பத்தி உடன் அடியில் வீழ வாழ்வு உதவு
பெருமாளே.
... தேவர்கள் பக்தியுடன் திருவடியில் விழ, அவர்களுக்கு
வாழ்வு உதவிய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.346  pg 3.347  pg 3.348  pg 3.349  pg 3.350  pg 3.351 
 WIKI_urai Song number: 1147 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1144 - eththi iru kuzhai (common)

eththi yirukuzhaiyai mOthi meenamathin
     mutti yidaRiyama thUthar pOlamuki
          letti vayavarkara vALai vElmunaiyai ...... yethirseeRi

eththi saiyinumoru kAma rAjanmika
     vetRi yarasuthanai yALa veesiyada
          letRi yiLainjaruyir kOlu neelavizhi ...... madamAthar

viththai thaniluruki yAsai yAkiyavar
     kaikkuL maruvuporu LAna Akumvarai
          meththai thaniluruki mOka mAkivida ...... athanmElE

vetka milainadavu mEku mEkumini
     matRa varaiyazhaiyu mAtha rEyenamun
          vitta padiRikaLtham nEsa Asaikeda ...... aruLvAyE

oththa varikamuku vALai thAvupunal
     aththi nakaramara sAna vALnirupan
          okku ninaivumuni lAmal vAkupela ...... nilaikURa

utRa tharumanadal veeman vElvisaiyan
     vetRi nakulasaka thEvar thErthanilum
          oththu mudukividu pAkan vALamari ...... lasurEsan

paththu mudikaLthuka LAka vAkuiru
     paththu morukaNaiyil veezha nEravuNar
          pattu madiya amar mOthu kALamukil ...... marukOnE

pacchai mayililvaru veera vElmuruka
     thutta nirutharkula kAla vAnavarkaL
          paththi yudanadiyil veezha vAzhvuthavu ...... perumALE.

......... Meaning .........

(The first six lines describe the eyes of the whores).

eththi iru kuzhaiyai mOthi meenam athil mutti idaRi yama thUthar pOla: They attack the two swinging ear-studs as if to knock them off; they bump against and collide (with the ears) like the leaping fish; they look like the messengers of Yaman (God of Death);

mukil etti vayavar kara vALai vEl munaiyai ethir seeRi: they vie with the dark cloud in complexion and fiercely challenge, in terms of sharpness, the swords and pointed spears carried in the hands by the soldiers;

eth thisaiyinum oru kAma rAjan mika vetRi arasu thanai ALa veesi adal etRi: they spread everywhere and wield their power like the victorious realm of the matchless Manmathan (God of Love) whose rule pervades in all directions;

iLainjar uyir kOlum neela vizhi madamAthar: and they hook the lives of young men and draw them towards; the dark eyes of the beautiful whores do this;

viththai thanil uruki Asai Aki avar kaikkuL maruvu poruL Ana Akum varai meththai thanil uruki mOkamAki vida: being enamoured of their moving and scheming acts, I became captive in their hands; I melted on their mattress until all the money in my hand was exhausted, resulting in the cessation of passion (due to lack of money);

athan mElE vetkam ilai nadavum Ekum Ekum ini matRavarai azhaiyum mAtharE ena: After that, they screamed at me saying "Are you not ashamed (to come empty-handed)? Leave right now; go away, go away; Oh girls, bring some one else" - (so commanding their girl-attendants),

mun vitta padiRikaL tham nEsa Asai keda aruLvAyE: and chased me away from their door; in order that my desire for such treacherous whores is destroyed, kindly bless me, Oh Lord!

oththa vari kamuku vALai thAvu punal aththi nakaram arasAna vAL nirupan: King DuriyOdhanan, bearing a sword, ruled (the country whose capital was) HasthinApuram, famous for its water resources where vALai fish leapt high up to the betel-nut trees with a stretch of straight stripes;

okku ninaivu mun ilAmal vAkupela(m) nilai kURa: he never had any inclination for a peaceful treaty and only bragged about his valour and bravery;

utRa tharuman adal veeman vEl visaiyan vetRi nakula sakathEvar thEr thanilum oththu mudukividu pAkan: then, the five PANdavAs comprising Dharman, Bheeman, Arjunan with his spear, Nakulan who is always victorious and SahAdEvan, had to agree to the war in which He (KrishNa) willingly drove the PANdavAs' chariot;

vAL amaril asurEsan paththu mudikaL thukaLAka vAku irupaththum oru kaNaiyil veezha nEr avuNar pattu madiya amar mOthu(m) kALa mukil marukOnE: in the battle of swords, RAvaNan's ten heads were shattered to pieces and his twenty shoulders were severed and felled by His single arrow; all the confronting demons were destroyed when He (RAmA), with the complexion of the dark cloud, battled; You are the nephew of that Lord VishNu!

pacchai mayilil varum veera vEl muruka thutta niruthar kulakAla: You mount the green peacock, Oh valorous One! You hold the spear in Your hand, Oh MurugA! You came as the God of Death to the entire dynasty of evil demons!

vAnavarkaL paththi udan adiyil veezha vAzhvu uthavu perumALE.: As the celestials prostrate at Your hallowed feet with devotion, You grant them their lives graciously, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1144 eththi iru kuzhai - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]