பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 339 (செப்புக என) உபதேச மொழியைச் சொல்வாயாக என்று கேட்க (முனம்) முன்பு ஒதாமலே உணர வேண்டியதும், (சிற் சுகம்) ஞானானந்தமானதும், (பரவெளி) மேலான ஞானாகாசமானதுமான பொருள் இதுதான் என்று அவருடைய (தெக்ஷண செவிதனில்) வலது காதிலே (போதனை அருள்) உபதேசப் பொருளை அறிவித் தருளிய குரு நாதனே! மட்டற குறைவற்ற வழியில் - மிகப் பல வழியில் - சண்டை செப்த சூரனாம் தலைவனுடைய உடலானது (பொட்டெழ) பொடி பட்டு அழிய, (அவனை) வேகமாய் எதிர்த்து (வை வேலால்) கூரிய வேல்கொண்டு எறிந்த வளப்பம் பொருந்திய புயங்களைக் கொண்டவனே. (மரகத பச்சை நிறம் கொண்ட அழகிய மயில்மீது நடனம் செய்பவனே! வச்சிராயுதத்தைக் (குலிசாயுதத்தைக்) கையிற் கொண்ட தேவர் தலைவனாம் இந்திரன் - அவனுடைய (பொற் புறு) அழகு கொண்ட கரி - ஐராவதம் என்னும் வெள்ளை யானை, ( பரி) உச்சைச் சிரவம் என்னும் குதிரை, தேர் முதலியவற்றுடன் அழகு பெற்று விளங்கும்படி அவனை வாழவைத்த மருமகனே! வாழ்ந்து விளங்கும் தேவர்களின் பெருமாளே! (அருளுவ தொருநாளே) 1147. எத்தி இரு குழையை இரண்டு குழைகளையும் (எத்தி) விசி எறிதல் போலத் தாக்கி, மோதி, (மீனம் அதில்) மீன்வோன்று சென்று முட்டித்தாக்கி, யமதூதர் போல (முகில்) மேகத்தின் கருநிறத்துடன் (எட்டி) எட்டித்தாவி, (வயவர்) போர் வீரர்களின் கையில் உள்ள வாளையும் வேல் முனையையும் எதிர்த்துச் சீறுவது போலக் கூர்மை கொண்டதாய் எல்லாத் திசைகளிலும் (நாலா பக்கத்திலும்) ஒப்பற்ற மன்மத ராஜன் மிகவும் தனது ஜய அரசாட்சியை எங்கும் ஆளவிட்டது போலப் பரந்து, (அடல்) தனது வலிமையை (எற்றி) செலுத்தி, இளைஞர்களுடைய உயிரைக் (கோலும்) வளைத்து இழுக்கும் (நீலவிழி) கரிய கண்ணை உடைய அழகிய மாதர்களின் .