திருப்புகழ் 1137 உமை எனும் மயில்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1137 umaienummayil  (common)
Thiruppugazh - 1137 umaienummayil - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தனதத்த தனனா தனனா
     தனதன தனதத்த தனனா தனனா
          தனதன தனதத்த தனனா தனனா ...... தனதான

......... பாடல் .........

உமையெனு மயில்பெற்ற மயில்வா கனனே
     வனிதைய ரறுவர்க்கு மொருபா லகனே
          உளமுரு கியபத்த ருறவே மறவே ...... னெனவோதி

உருகுத லொருசற்று மறியேன் வறியேன்
     இ ருவினை யிடையிட்ட கொடியே னடியேன்
          உணர்விலி பெறமுத்தி தருவாய் துகிர்வாய் ...... மடமாதர்

அமையென வளர்சித்ர இருதோள் தழுவா
     அமுதென மதுரித்த கனிவா யணுகா
          அமளியி லணைவுற்ற அநுரா கமகோ ...... ததிமூழ்கி

அநவர தமுமுற்ற மணிமா முலைதோய்
     கலவியி னலமற்ப சுகமா கினுமா
          அநுபவ மிதுசற்றும் விடவோ இயலா ...... தியலாதே

தமனிய குலசக்ர கிரியோ கடலோ
     விடமென முடிவைத்த முதுபே ரிருளோ
          தனுவென முனையிட்ட கொலைமூ விலைவேல் ...... கொடுபார்வை

தழலெழ வருமுக்ர எமபா தகனோ
     யுகஇறு தியில்மிக்க வடவா னலமோ
          தனியிவ னெனமிக்க பிசிதா சனபூ ...... பதியாகி

இமையவ ரனைவர்க்கும் அறையோ அறையோ
     அரியயன் முழுதுக்கும் அறையோ அறையோ
          எழுபுவி யுலகுக்கும் அறையோ அறையோ ...... பொரவாரும்

எனவரு மொருதுட்டன் முறையோ முறையோ
     வடகுல கிரியெட்டும் அபிதா அபிதா
          எனவொரு அயில்தொட்ட அரசே யிமையோர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

உமை எனும் மயில் பெற்ற மயில் வாகனனே வனிதையர்
அறுவர்க்கும் ஒரு பாலகனே உளம் உருகிய பத்தர் உறவே
மறவேன் என ஓதி
... மயில் போன்ற உமா தேவி பெற்ற, மயிலை
வாகனமாக உடையவனே, கார்த்திகைப் பெண்டிர் அறுவருக்கும் ஒப்பற்ற
பாலகனே, உள்ளம் உருகுகின்ற பக்தர்களின் நட்பாளனே, நான்
உன்னை மறக்க மாட்டேன் என்று உன்னைப் போற்றி செய்து

உருகுதல் ஒரு சற்றும் அறியேன் வறியேன் இருவினை இடை
இட்ட கொடியேன் அடியேன் உணர்வு இலி பெற முத்தி
தருவாய்
... மனம் உருகுதல் ஒரு சிறிதும் அறியாதவன் நான். தரித்திரம்
பிடித்தவன். நல் வினை, தீவினை என்னும் இரண்டு வினைகளின்
இடையே சிக்கிக் கொண்டிருக்கும் கொடியவன் அடியேனாகிய நான்
அறிவு இல்லாதவன். (அத்தகையவனாகிய நான்) பெற்று உய்ய
முக்தியைத் தருவாயாக.

துகிர் வாய் மட மாதர் அமை என வளர் சித்ர இரு தோள்
தழுவா
... பவளம் போன்ற வாயை உடைய இளம் பெண்களின் மூங்கில்
போன்று செழித்து வளர்ந்துள்ள அழகிய இரண்டு புயங்களையும் தழுவி,

அமுது என மதுரித்த கனி வாய் அணுகா அமளியில்
அணைவுற்ற அநுராக மகா உததி மூழ்கி
... அமுதம் போல்
இனிப்பைக் கொண்ட (கொவ்வைக்) கனி போன்ற வாயை நெருங்கி
அனுபவித்து, படுக்கையில் சேர்ந்து களிக்கும் காம இச்சை என்னும்
பெரிய கடலில் முழுகி,

அநவரதமும் உற்ற மணி மா முலை தோய் கலவியின் நலம்
அற்ப சுகம் ஆகினும் மா அனுபவம் இது சற்றும் விடவோ
இயலாது இயலாதே
... எப்போதும் பொருந்தியுள்ள அழகிய
மார்பகங்களில் படியும் புணர்ச்சியின் இன்பம் கொஞ்ச நேரமே
நீடிக்கின்றது என்றாலும், அது பெரிதும் இயற்கையாகவே விரும்பப்படும்
ஒரு நுகர்ச்சி இன்பமாகும். இதைக் கொஞ்சமும் விட்டொழிக்க
முடியவே முடியாது.

தமனிய குல சக்ர கிரியோ கடலோ விடம் என முடி வைத்த
முது பேர் இருளோ
... பொன் மலையாகிய சிறந்த மேரு மலையோ?
சக்ரவாள கிரியோ? கடல் தானோ? விஷத்தை உச்சியில் கொண்டதும்
முற்றினதுமான பெரிய இருட்டாகுமோ?

தனு என முனை இட்ட கொலை மூ இலை வேல் கொடு
பார்வை தழல் எழ வரும் உக்ர எம பாதகனோ யுக இறுதியில்
மிக்க வடவா அனலமோ
... வில்லைப் போல போர்க்கென்று
அமைந்துள்ள, கொலை செய்ய வல்லதுமான மூன்று நுனிகளை உடைய
வேல் போன்ற கண்களின் கொடிய பார்வை நெருப்பைக் கக்க வருகின்ற
கொடுமை காட்டுகின்ற யமன் என்ற பாதகன் தானோ? யுக முடிவில்
மிகுந்து எழுகின்ற வடவா முகாக்கினியோ?

தனி இவன் என மிக்க பிசித அசன(ர்) பூபதியாகி இமையவர்
அனைவர்க்கும் அறையோ அறையோ
... ஒப்பற்ற இவன் என்று
யாவரும் பயப்படும்படி, மாமிசத்தை உண்ணும் அரக்கர்களின் அரசனாகிய
சூரன் தேவர்கள் யாவரும் போருக்கு வாருங்கள், வாருங்கள்,

அரி அயன் முழுதுக்கும் அறையோ அறையோ எழு புவி
உலகுக்கும் அறையோ அறையோ பொர வாரும்
... திருமால்,
பிரமன் முதலியோர் யாவரும் போருக்கு வாருங்கள், போருக்கு வாருங்கள்,
மூவேழு உலகத்தினரும் போருக்கு வாருங்கள், போருக்கு வாருங்கள்,
என்னுடன் சண்டை செய்ய வாருங்கள்,

என வரும் ஒரு துட்டன் முறையோ முறையோ வட குல கிரி
எட்டும் அபிதா அபிதா என
... என்று கூச்சலிட்டு வருகின்றான்
அந்த ஒப்பற்ற துஷ்டனாகிய சூரன். எங்களைக் காத்தருள வேண்டும்,
காத்தருள வேண்டும் என்று வடக்கில் உள்ள அஷ்ட குல பர்வத
வாசிகளும் அடைக்கலம், அடைக்கலம், புரந்தருளுக, காத்தருள்க என்று
முறை இட,

ஒரு அயில் தொட்ட அரசே இமையோர் பெருமாளே. ... ஒப்பற்ற
வேலாயுதத்தைச் செலுத்திய அரசனே, தேவர்கள் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.324  pg 3.325  pg 3.326  pg 3.327  pg 3.328  pg 3.329 
 WIKI_urai Song number: 1140 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1137 - umai enum mayil (common)

umaiyenu mayilpetRa mayilvA kananE
     vanithaiya raRuvarkku morupA lakanE
          uLamuru kiyapaththa ruRavE maRavE ...... nenavOthi

urukutha lorusatRu maRiyEn vaRiyEn
     iruvinai yidaiyitta kodiyE nadiyEn
          uNarvili peRamuththi tharuvAy thukirvAy ...... madamAthar

amaiyena vaLarsithra iruthOL thazhuvA
     amuthena mathuriththa kanivA yaNukA
          amaLiyi laNaivutRa anurA kamakO ...... thathimUzhki

anavara thamumutRa maNimA mulaithOy
     kalaviyi nalamaRpa sukamA kinumA
          anupava mithusatRum vidavO iyalA ...... thiyalAthE

thamaniya kulachakra kiriyO kadalO
     vidamena mudivaiththa muthupE riruLO
          thanuvena munaiyitta kolaimU vilaivEl ...... kodupArvai

thazhalezha varumukra emapA thakanO
     yukaiRu thiyilmikka vadavA nalamO
          thaniyiva nenamikka pisithA sanapU ...... pathiyAki

imaiyava ranaivarkkum aRaiyO aRaiyO
     ariyayan muzhuthukkum aRaiyO aRaiyO
          ezhupuvi yulakukkum aRaiyO aRaiyO ...... poravArum

enavaru moruthuttan muRaiyO muRaiyO
     vadakula kiriyettum apithA apithA
          enavoru ayilthotta arasE yimaiyOr ...... perumALE.

......... Meaning .........

umai enum mayil petRa mayil vAkananE vanithaiyar aRuvarkkum oru pAlakanE uLam urukiya paththar uRavE maRavEn ena Othi: "Oh Lord, mounting the peacock as Your vehicle! You are the child of UmAdEvi, who looks like a peacock. You are also the unique child of the six KArththikai maids. You are the friend of all Your devotees whose hearts melt for You. I shall never forget You" - so saying a prayer to You,

urukuthal oru satRum aRiyEn vaRiyEn iruvinai idai itta kodiyEn adiyEn uNarvu ili peRa muththi tharuvAy: I do not know how to thaw my heart even to a little extent; I am such a miserable and poverty-stricken person; I am not only the evil one caught between my good deeds and bad deeds but am also dim-witted; (despite my shortcomings,) kindly grant me liberation, Oh Lord!

thukir vAy mada mAthar amai ena vaLar chithra iru thOL thazhuvA: Hugging the twin bamboo-like soft and well-grown shoulders of the young girls with coral-like red mouth,

amuthu ena mathuriththa kani vAy aNukA amaLiyil aNaivutRa anurAka makA uthathi mUzhki: getting closer to their reddish lips that look like the kovvai fruit, imbibing the sweet nectar-like saliva, drowning in the vast sea of love-making lying coupled on the bed,

anavarathamum utRa maNi mA mulai thOy kalaviyin nalam aRpa sukam Akinum mA anupavam ithu satRum vidavO iyalAthu iyalAthE: and resting for ever on their bosom may all mean that the pleasure is only transient and shortlived; nonetheless, it is a natural and blissful experience which I can never think of foregoing even slightly.

thamaniya kula sakra kiriyO kadalO vidam ena mudi vaiththa muthu pEr iruLO: "Is he the great golden mountain MEru? Or the Mount ChakravAlam? Or the sea? Or the absolute and vast darkness carrying venom on his head?

thanu ena munai itta kolai mU ilai vEl kodu pArvai thazhal ezha varum ukra ema pAthakanO yuka iRuthiyil mikka vadavA analamO: As his eyes are like the bow ready to wage a war and the evil look from those menacing eyes seems like the three pronged spear spewing fire, is he the malicious and dastardly God of Death, Yaman? Or is it the northerly inferno that attacks like a tornado at the end of the aeon?

thani ivan ena mikka pisitha asana(r) pUpathiyAki imaiyavar anaivarkkum aRaiyO aRaiyO: He is without any comparison" - so saying everyone around became terrified of the demon SUran. Being the king of all the demons who devour flesh, he challenged all the celestials screaming "Come to the war, come to the war;

ari ayan muzhuthukkum aRaiyO aRaiyO ezhu puvi ulakukkum aRaiyO aRaiyO pora vArum: I am challenging VishNu, Brahma and others to come to the war; all of you, come to the war; all those living in the twenty-one worlds, come to the war, come to the war; come and fight with me.";

ena varum oru thuttan muRaiyO muRaiyO vada kula kiri ettum apithA apithA ena: with these roaring words, that matchless evil demon SUran was confronting one and all. As the denizens of the eight holy mountains in the north prayed to You beseeching "Kindly save us all; kindly protect us; we seek solace in You; we surrender to You",

oru ayil thotta arasE imaiyOr perumALE.: You wielded Your unique and powerful spear, Oh Lord! You are the Lord of the celestials, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1137 umai enum mayil - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]