திருப்புகழ் 1136 இலகிய வேலோ  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1136 ilagiyavElO  (common)
Thiruppugazh - 1136 ilagiyavElO - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தானா தானா தனதன தானா தானா
     தனதன தானா தானா ...... தனதான

......... பாடல் .........

இலகிய வேலோ சேலோ ஒளிவிடு வாளோ போதோ
     எமன்விடு தூதோ மானோ ...... விடமீதோ

எனவிழி கூறா வாரா அரிவையர் தோளூ டாடா
     இறுதியில் வேறாய் மாறா ...... நினைவாலே

பலபல கோளாய் மாலா யுழலும தானால் வீணே
     படிறுசொ லாகா லோகா ...... யதனாகிப்

பரிவுட னாடாய் வீடா யடிமையு மீடே றாதே
     பணிதியில் மூழ்கா மாயா ...... விடுவேனோ

அலைகடல் கோகோ கோகோ எனவுரை கூறா வோடா
     அவுணரை வாடா போடா ...... எனலாகி

அழகிய வேலால் வாளால் நிலவிய சீரா வாலே
     யவருடல் வாணா ளீரா ...... எதிராகி

மலைமிகு தோளா போதா அழகிய வாலா பாலா
     மகபதி வாழ்வே சேயே ...... மயில்வீரா

மறைதொழு கோவே தேவே நறை செறி பூவே நீரே
     வளவிய வேளே மேலோர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

இலகிய வேலோ சேலோ ஒளி விடு வாளோ போதோ எமன்
விடு தூதோ மானோ விடம் ஈதோ
... விளங்குகின்ற வேலாயுதமோ,
சேல் மீனோ, தாமரையோ, யமன் அனுப்பியுள்ள தூதோ, மானோ, நஞ்சு
தானோ இது

என விழி கூறா வாரா அரிவையர் தோள் ஊடு ஆடா ... என்று
வியக்கக்கூடிய கண்களால் பேசும்படி வருகின்ற விலைமாதர்களின்
தோள்களில் ஈடுபட்டுத் திளைத்து,

இறுதியில் வேறாய் மாறா நினைவாலே பல பல கோளாய் ...
கடைசியாக மனம் வேறுபட்டு, மாறுபட்ட எண்ணத்தால் பலபல
தீமைகள் உண்டாக,

மாலாய் உழலும் அது ஆனால் வீணே படிறு சொல் ஆகா
லோகாயதன் ஆகி
... மோகத்துடன் அலைச்சல் உறுகின்றதாக என்
அனுபவம் ஆனதால், வீணான வஞ்சனைச் சொற்களைப் பேசி
(யாருக்கும்) ஆகாத உலகாயதனாகி,

பரிவுடன் நாடாய் வீடாய் அடிமையும் ஈடேறாதே பணிதியில்
மூழ்கா மாயா விடுவேனோ
... அன்புடன் நாட்டிலும் வீட்டிலும்
பயனடையாமல் அடிமையாகிய நானும் செல்வச் செருக்கில் முழுகி
இறந்து படுவேனோ?

அலை கடல் கோ கோ கோ கோ என உரை கூறா ... அலை
வீசும் கடல் கோகோ கோகோ என்று கூச்சலிட்டு,

ஓடா அவுணரை வாடா போடா எனல் ஆகி ... ஓடும்
அசுரர்களை வாடா போடா என்று அறை கூறிப் போருக்கு அழைப்பதாகி,

அழகிய வேலால் வாளால் நிலவிய சீராவாலே ... அழகிய
வேலாலும் வாளாலும், ஒளி விடுகின்ற சிறு கத்தியாலும்,

அவர் உடல் வாழ் நாள் ஈரா எதிராகி மலை மிகு தோளா
போதா அழகிய வாலா பாலா
... அந்த அசுரர்களின் உடலையும்
வாழ் நாளையும் முடியும்படி எதிர்த்துப் பிளந்த மலை போன்ற பெரிய
தோள்களை உடைய ஞான சொரூபனே, அழகான பாலாம்பிகையின்
குழந்தையே,

மகபதி வாழ்வே சேயே மயில் வீரா ... இந்திரனுடைய செல்வமே,
இறைவனின் சேயே, மயில் வீரனே,

மறை தொழு கோவே தேவே நறை செறி பூவே நீரே ...
வேதங்கள் தொழுகின்ற நாயகனே, தேவனே, நறு மணம் வீசும் மலரே,
உயிர்களுக்கு ஆதாரமான தண்ணீரே,

வளவிய வேளே மேலோர் பெருமாளே. ... செழுமை வாய்ந்த
செவ்வேளே, அறிவிலே பெரியவர்களின் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.322  pg 3.323  pg 3.324  pg 3.325 
 WIKI_urai Song number: 1139 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1136 - ilagiya vElO (common)

ilakiya vElO sElO oLividu vALO pOthO
     emanvidu thUthO mAnO ...... vidameethO

enavizhi kURA vArA Aivaiyar thOLU dAdA
     iRuthiyil vERAy mARA ...... ninaivAlE

palapala kOLAy mAlA yuzhaluma thAnAl veeNE
     padiRuso lAkA lOkA ...... yathanAkip

parivuda nAdAy veedA yadimaiyu meedE RAthE
     paNithiyil mUzhkA mAyA ...... viduvEnO

alaikadal kOkO kOkO enavurai kURA vOdA
     avuNarai vAdA pOdA ...... enalAki

azhakiya vElAl vALAl nilaviya seerA vAlE
     yavarudal vANA LeerA ...... ethirAki

malaimiku thOLA pOthA azhakiya vAlA pAlA
     makapathi vAzhvE sEyE ...... mayilveerA

maRaithozhu kOvE thEvE naRai seRi pUvE neerE
     vaLaviya vELE mElOr ...... perumALE.

......... Meaning .........

ilakiya vElO sElO oLi vidu vALO pOthO eman vidu thUthO mAnO vidam eethO: "Is it an elegant spear, sEl fish, lotus, the messenger of Yaman (God of Death), deer or the evil poison itself"

ena vizhi kURA vArA arivaiyar thOL Udu AdA: so one wonders about the eyes of the whores who come forward with such captivating expression; longing for their shoulders, indulging in them,

iRuthiyil vERAy mARA ninaivAlE pala pala kOLAy: ultimately feeling disgusted and suffering from many miseries due to conflicting thoughts,

mAlAy uzhalum athu AnAl veeNE padiRu sol AkA lOkAyathan Aki: my experience has been one of loitering around in delusion; am I to become an utterly useless fellow, a lowly earthling, resorting to vain speech?

parivudan nAdAy veedAy adimaiyum eedERAthE paNithiyil mUzhkA mAyA viduvEnO: not being loved for usefulness at home or for my country, am I, this humble slave of Yours, destined to die, drowned in the arrogance of my wealth?

alai kadal kO kO kO kO ena urai kURA: The wavy seas made roaring noise;

OdA avuNarai vAdA pOdA enal Aki: the fleeing demons were challenged to return to the battlefield, being called in ignoble terms of disrespect;

azhakiya vElAl vALAl nilaviya seerAvAlE: using the elegant spear, the sword and the dazzling dagger,

avar udal vAzh nAL eerA ethirAki malai miku thOLA pOthA azhakiya vAlA pAlA: the bodies and lives of those demons were severed by Your mountain-like shoulders, Oh Lord in the form of true knowledge! You are the child of the beautiful Goddess BAlAmbikai (PArvathi)!

makapathi vAzhvE sEyE mayil veerA: You are the treasure of IndrA! You are the son of the Lord SivA! Oh valorous One, mounting the peacock!

maRai thozhu kOvE thEvE naRai seRi pUvE neerE: You are the Lord worshipped by the vEdAs! Oh God, You are the flower full of fragrance! You are like water providing the basic need for lives!

vaLaviya vELE mElOr perumALE.: You are the Lord Murugan of a rich red hue! You are the Lord of the wise elders, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1136 ilagiya vElO - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]