திருப்புகழ் 1126 ஆராத காதலாகி  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1126 ArAdhakAdhalAgi  (common)
Thiruppugazh - 1126 ArAdhakAdhalAgi - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானான தான தான தானன
     தானான தான தான தானன
          தானான தான தான தானன ...... தந்ததான

......... பாடல் .........

ஆராத காத லாகி மாதர்த
     மாபாத சூட மீதி லேவிழி
          யாலோல னாய்வி கார மாகியி ...... லஞ்சியாலே

ஆசாப சாசு மூடி மேலிட
     ஆசார வீன னாகி யேமிக
          ஆபாச னாகி யோடி நாளும ...... ழிந்திடாதே

ஈராறு தோளு மாறு மாமுக
     மோடாரு நீப வாச மாலையு
          மேறான தோகை நீல வாசியு ...... மன்பினாலே

ஏனோரு மோது மாறு தீதற
     நானாசு பாடி யாடி நாடொறு
          மீடேறு மாறு ஞான போதக ...... மன்புறாதோ

வாராகி நீள்க பாலி மாலினி
     மாமாயி யாயி தேவி யாமளை
          வாசாம கோச ராப ராபரை ...... யிங்குளாயி

வாதாடி மோடி காடு காளுமை
     மாஞால லீலி யால போசனி
          மாகாளி சூலி வாலை யோகினி ...... யம்பவானி

சூராரி மாபு ராரி கோமளை
     தூளாய பூதி பூசு நாரணி
          சோணாச லாதி லோக நாயகி ...... தந்தவாழ்வே

தோளாலும் வாளி னாலு மாறிடு
     தோலாத வான நாடு சூறைகொள்
          சூராரி யேவி சாக னேசுரர் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

ஆராத காத லாகி மாதர்தம் ... அடக்க முடியாத மோகம் கொண்டு,
பெண்களுடைய

ஆபாத சூட மீதி லே ... உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரையுள்ள
அங்கங்களிலே

விழி யாலோலனாய் விகாரமாகி ... கண்கள் ஈடுபடுவதால்
காமுகனாகி மன விகாரம் அடைந்து

இலஞ்சியாலே ஆசா பசாசு மூடி மேலிட ... குணம் கெட்டு, ஆசை
என்ற பேய் என்னைக் கவர்ந்து ஆட்கொள்ள,

ஆசார வீனனாகியே ... நான் ஆசாரக் குறைவுபட்டவனாக,

மிக ஆபாசனாகி யோடி நாளும் அழிந்திடாதே ... மிகவும்
அசுத்தனாக, இங்கும் அங்கும் ஓடி தினமும் கெட்டழியாமல் இருக்க,

ஈராறு தோளும் ஆறு மாமுகமோடு ... பன்னிரண்டு
தோள்களுடனும், ஆறு திருமுகங்களுடனும்,

ஆரு நீப வாச மாலையும் ... நிறைந்த வாசனையுள்ள கடப்ப மலர்
மாலையுடனும்,

ஏறான தோகை நீல வாசியும் ... ஆண் மயிலாகிய நீல நிறக்
குதிரையுடனும்,

அன்பினாலே ஏனோரும் ஓதுமாறு தீதற ... அன்பு பூண்டு
பிற மக்களும் போற்றிப் புகழுமாறு, கேடுகள் நீங்க,

நானாசு பாடி யாடி நாடொறும் ஈடேறு மாறு ... நான் ஆசு*
கவிகளைப்பாடியும், ஆடியும், தினமும் முன்னேறுமாறு,

ஞான போதகம் அன்புறாதோ ... ஞானோபதேசத்தை எனக்குச்
செய்ய வருவதற்கு நீ அன்பு கொள்ளக் கூடாதோ? (இதன் பின்பு
சுவாமிகள் தேவியின் துதி செய்கிறார்).

வாராகி நீள் கபாலி மாலினி ... வாராகி, பெரிய கபாலத்தைக்
கையிலே ஏந்தியவள், மாலையை அணிந்தவள்,

மாமாயி யாயி தேவி யாமளை ... மகமாயி, ஆயி, தேவி, சியாமள
நிறத்தினள்,

வாசா மகோசரா பராபரை இங்கு உள் ஆயி ... வாக்குக்கு
எட்டாதவள், பராத்பரை, உள்ளத்தில் தங்குகிற தாய்,

வாதாடி மோடி காடுகாள் உமை ... சிவனுடன் வாதாடிய காளி,
துர்க்கை, வனதேவதை, உமாதேவி,

மாஞால லீலி ஆல போசனி ... பெரிய பூமியிலே
திருவிளையாடல்கள் புரிபவள், விஷத்தை உண்டவள்,

மாகாளி சூலி வாலை யோகினி ... மஹா காளி, சூலத்தை
ஏந்தியவள், பாலாம்பிகை, யோகினி,

அம்பவானி சூராரி மாபுராரி கோமளை ... அழகிய பவானி,
மகிஷாசுரமர்த்தனி, பெரும் திரிபுராந்தகி, அழகி,

தூளாய பூதி பூசு நாரணி ... திருநீற்றை விபூதியாகப் பூசிய
மேனியளான நாராயணி,

சோணாசலாதி லோக நாயகி தந்தவாழ்வே ...
திருவண்ணாமலையின் ஆதி தேவி, உலகநாயகி பெற்ற செல்வமே,

தோளாலும் வாளினாலு மாறிடு ... தோள்கொண்டும்
வாள்கொண்டும் போரிட்டுப் பகைமை பூண்டவனும்,

தோலாத வான நாடு சூறைகொள் ... தோல்வியே இல்லாதவனும்,
தேவருலகைச் சூறையாடினவனுமான

சூராரியே விசாகனே சுரர் தம்பிரானே. ... சூரனைக்
கொன்றவனே, விசாகனே, தேவர்களின் பெருமாளே.


* தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:

ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,
மதுரம் - இனிமை வாய்ந்தது,
சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,
வித்தாரம் - வர்ணனை மிக்கது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.296  pg 3.297  pg 3.298  pg 3.299 
 WIKI_urai Song number: 1129 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 1126 - ArAdha kAdhalAgi (common)

ArAtha kAtha lAki mAthartha
     mApAtha chUda meethi lEvizhi
          yAlOla nAyvi kAra mAkiyi ...... lanjiyAlE

AsApa sAsu mUdi mElida
     AchAara veena nAki yEmika
          ApAsa nAki yOdi nALuma ...... zhinthidAthE

eerARu thOLu mARu mAmuka
     mOdAru neepa vAsa mAlaiyu
          mERAna thOkai neela vAsiyu ...... manpinAlE

EnOru mOthu mARu theethaRa
     nAnAsu pAdi yAdi nAdoRu
          meedERu mARu nyAna pOthaka ...... manpuRAthO

vArAki neeLka pAli mAlini
     mAmAyi yAyi thEvi yAmaLai
          vAchAma kOsa rApa rAparai ...... yinguLAyi

vAthAdi mOdi kAdu kALumai
     mAnyAla leeli yAla pOsani
          mAkALi chUli vAlai yOkini ...... yampavAni

sUrAri mApu rAri kOmaLai
     thULAya pUthi pUsu nAraNi
          sONAsa lAthi lOka nAyaki ...... thanthavAzhvE

thOLAlum vALi nAlu mARidu
     thOlAtha vAna nAdu sURaikoL
          sUrAri yEvi sAka nEsurar ...... thambirAnE.

......... Meaning .........

ArAtha kAtha lAki mAthartham: I had an uncontrollable passion for women;

ApAtha chUda meethi lEvizhi yAlOla nAy vikAra mAki: my eyes were roving over all the limbs of women from foot to toe and my mind was spoilt;

yilanjiyAlE AsA pasAsu mUdi mElida: and having lost my morals, I was consumed by the devil of lust.

AchAara veena nAki yE: I became a totally indisciplined character.

mika ApAsa nAki yOdi nALum: I felt so unclean, running hither and thither daily.

azhinthidAthE: To save me from further degeneration, (You have to appear before me with)

eerARu thOLu mARu mAmukam: Your twelve shoulders and six holy faces,

OdAru neepa vAsa mAlaiyum: adorned by the ever fragrant garland of kadappa flowers,

ERAna thOkai neela vAsiyum: with the majestic peacock looking like a blue horse.

anpinAlE EnOru mOthu mARu theethaRa: Even those who are not Your devotees will praise You out of love, and all evil things will be gone!

nAnAsu pAdi yAdi nAdoRum: To enable me to sing (Asu) poems* of Your glory and dance daily

eedERu mARu nyAna pOthakam anpuRAthO: You have to teach me the True Knowledge for my salvation. Will You not be kind enough to come towards me?

     (Hereafter, SwAmigaL gives a detailed description of DEvi, Mother Goddess)

vArAki neeLka pAli mAlini: VArAgi, She holds a large skull in Her hand, She is garlanded,

mAmAyi yAyi thEvi yAmaLai: She is the Great Mother, DEvi, with emerald green complexion,

vAchAma kOsa rA parAparai: She is beyond any description, She is Omniscient,

yinguLAyi: She dwells as the Mother inside the heart of hearts,

vAthAdi mOdi: She is KALi who contested with SivA in dance, She is DurgA,

kAdu kALumai: She is the forest-angel, She is UmA PArvathi,

mAnyAla leeli yAla pOsani: She performs several miracles in this vast world, She consumes poison,

mAkALi chUli: She is Maha KALi, holding the Trident,

vAlai yOkini yampavAni: She is ever youthful, She is YOgini, She is lovely BhavAni,

sUrAri mApu rAri kOmaLai: She killed MahishAsurA, She burnt down Thiripuram, She is beautiful,

thULAya pUthi pUsu nAraNi: She is NarAyaNi applying the holy ash all over Her body,

sONAsa lAthi: She is the Prime Goddess at ThiruvaNNAmalai,

lOka nAyaki thanthavAzhvE: She is the Ruler of the entire world - and She delivered You unto us!

thOLAlum vALi nAlu mARidu: He (SUran) fought with his shoulders and swords;

thOlAtha vAna nAdu sURaikoL: he never gets defeated; he destroyed the land of DEvAs;

sUrAri yEvi sAka nEsurar thambirAnE.: but that SUran was killed by You! Oh VisAkA, You are worshipped by all DEvAs, Oh Great One!


* The four varieties of Tamil poetry are:

Asu (alliteration)
Mathuram (sweetness)
Chiththiram (artful presentation) and
ViththAram (description).

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1126 ArAdha kAdhalAgi - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]