திருப்புகழ் 1090 உறவின் முறையோர்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1090 uRavinmuRaiyOr  (common)
Thiruppugazh - 1090 uRavinmuRaiyOr - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தாத்த தனதனன தாத்த
     தனதனன தாத்த ...... தனதான

......... பாடல் .........

உறவின்முறை யோர்க்கு முறுதுயரம் வாய்த்து
     உளமுருகு தீர்த்தி ...... வுடலூடே

உடலைமுடி வாக்கு நெடியதொரு காட்டில்
     உயர்கனலை மூட்டி ...... விடஆவி

மறலிமற மார்த்த கயிறுதனை வீக்கி
     வலிவினொடு தாக்கி ...... வளையாமுன்

மனமுமுனி வேட்கை மிகவுமுன தாட்கள்
     மகிழ்வியல்கொ டேத்த ...... மதிதாராய்

பிறைநுதலி சேற்க ணமையரிவை வேட்பு
     வரையில்மற வோர்க்கு ...... மகவாகப்

பிறிதுருவில் வாய்த்து நிறைதினைகள் காத்த
     பிடியினடி போற்று ...... மணவாளா

அறுகுபிறை யாத்தி அலைசலமு மார்த்த
     அடர்சடையி னார்க்கு ...... மறிவீவாய்

அடரவரு போர்க்கை அசுரர்கிளை மாய்த்து
     அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

உறவின் முறையோர்க்கும் உறு துயரம் வாய்த்து ... உறவு முறை
கொண்டுள்ள சுற்றத்தாருக்கு வெகுவாகத் துக்கத்தை உண்டாகும்படி
விளைவித்து,

உளம் உருகு தீர்த்து இவ்வுடலூடே உடலை முடிவாக்கு(ம்)
நெடியது ஒரு காட்டில்
... அவர் தம் உள்ளத்தில் உள்ள கவலையால்
உருகுதலை விட்டு, இந்த உடலை எடுத்ததின் வினைப்பயனாக, உடலை
அழிவு செய்கின்ற பெரிய ஒரு சுடுகாட்டில்

உயர் கனலை மூட்டி விட ஆவி மறலி மறம் ஆர்த்த கயிறு
தனை வீக்கி
... மிக்கெழும் நெருப்பை மூட்டிவிட, உயிரை யமன் தனது
வீரம் பொருந்திய பாசக் கயிற்றால் கட்டி,

வலிவினொடு தாக்கி வளையா முன் ... வலிமையாக மோதி
வளைத்து இழுப்பதற்கு முன்,

மனமும் உ(ன்)னி வேட்கை மிகவும் உன(து) தாள்கள்
மகிழ்வு இயல் கொடு ஏத்த மதி தாராய்
... எனது மனமும்
உன்னை நினைத்து காதல் மிக உண்டாக, உனது திருவடிகளை
மகிழ்ச்சியுடன் சிரத்தையோடு போற்றுதற்கு புத்தியைத் தந்து அருளுக.

பிறை நுதலி சேல் கண் அமை அரிவை வேட்பு வரையில்
மறவோர்க்கு மகவாக
... பிறை போன்ற நெற்றியை உடைய, சேல் மீன்
போன்ற கண்களை உடைய பெண்ணாகிய வள்ளியை, விருப்பத்துடன்
வளர்ந்த வள்ளி மலையில் வேடர்களுக்குக் குழந்தையாக வந்து,

பிறிது உருவில் வாய்த்து நிறை தினைகள் காத்த பிடியின்
அடி போற்று(ம்) மணவாளா
... மானிடம் இல்லாத மான் வயிற்றில்
தோன்றி வளர்ந்து, நன்கு விளைந்த தினைக் கொல்லையைக் காத்த
பெண் யானை ஆகிய வள்ளியின் பாதங்களைப் போற்றும் கணவனே,

அறுகு பிறை ஆத்தி அலை சலமும் ஆர்த்த அடர்
சடையினார்க்கும் அறிவு ஈவாய்
... அறுகம் புல், நிலவு, ஆத்தி, அலை
வீசும் நீர் கொண்ட கங்கை (இவைகளைச்) சூடிய, நெருங்கிய சடையை
உடைய சிவபெருமானுக்கும் உபதேசப் பொருளை ஓதியவனே,

அடர வரு போர்க்கை அசுரர் கிளை மாய்த்து அமரர் சிறை
மீட்ட பெருமாளே.
... நெருங்கி வரும் போர்க்களத்தில் அசுரர்களின்
சுற்றத்தை மாய்த்தொழித்து, தேவர்களைச் சிறையினின்றும் மீட்ட
பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.210  pg 3.211  pg 3.212  pg 3.213 
 WIKI_urai Song number: 1093 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1090 - uRavin muRaiyOr (common)

uRavinmuRai yOrkku muRuthuyaram vAyththu
     uLamuruku theerththi ...... vudalUdE

udalaimudi vAkku nediyathoru kAttil
     uyarkanalai mUtti ...... vidaAvi

maRalimaRa mArththa kayiRuthanai veekki
     valivinodu thAkki ...... vaLaiyAmun

manamumuni vEtkai mikavumuna thAtkaL
     makizhviyalko dEththa ...... mathithArAy

piRainuthali sERka Namaiyarivai vEtpu
     varaiyilmaRa vOrkku ...... makavAkap

piRithuruvil vAyththu niRaithinaikaL kAththa
     pidiyinadi pOtRu ...... maNavALA

aRukupiRai yAththi alaisalamu mArththa
     adarsadaiyi nArkku ...... maRiveevAy

adaravaru pOrkkai asurarkiLai mAyththu
     amararsiRai meetta ...... perumALE.

......... Meaning .........

uRavin muRaiyOrkkum uRu thuyaram vAyththu: Causing a lot of grief to all the kith and kin;

uLam uruku theerththu ivvudalUdE udalai mudivAkku(m) nediyathu oru kAttil uyar kanalai mUtti vida: and later, when they compose themselves by getting over their anguish, the body will be taken to the cremation ground, led by destiny that governed it since birth; there it will be consigned into leaping fire;

Avi maRali maRam Arththa kayiRu thanai veekki valivinodu thAkki vaLaiyA mun: before Yaman (God of Death) ties my life with his powerful rope of bondage and tows it along with a strong twist and jerk,

manamum u(n)ni vEtkai mikavum una(thu) thALkaL makizhvu iyal kodu Eththa mathi thArAy: kindly let my mind contemplate upon You with abundant love and grant me the intellect to gladly praise Your hallowed feet with devotion!

piRai nuthali sEl kaN amai arivai vEtpu varaiyil maRavOrkku makavAka: She has a forehead like the crescent moon and eyes like the sEl fish; She happily grew up in Mount VaLLimalai as the daughter of the hunters;

piRithu uruvil vAyththu niRai thinaikaL kAththa pidiyin adi pOtRu(m) maNavALA: She was not born to a human being but was conceived and delivered by a deer; She guarded the fully grown crop in the millet field; that VaLLi is like a she-elephant, and You are her consort adoring her feet, Oh Lord!

aRuku piRai Aththi alai salamum Arththa adar sadaiyinArkkum aRivu eevAy: You preached the meaning of the PraNava ManthrA to Lord SivA who has adorned His dense and matted hair with aRugam (cynodon) grass, crescent moon, Aththi (mountain ebony) leaf, and River Gangai with wavy water!

adara varu pOrkkai asurar kiLai mAyththu amarar siRai meetta perumALE.: You destroyed the demons along with their clan who confronted You in the battlefield and liberated the celestials from their prison, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1090 uRavin muRaiyOr - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]