திருப்புகழ் 1075 திரிபுரம் அதனை  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1075 thiripuramadhanai  (common)
Thiruppugazh - 1075 thiripuramadhanai - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தனன தனதன தனன
     தனதன தனன ...... தனதான

......... பாடல் .........

திரிபுர மதனை யொருநொடி யதனி
     லெரிசெய்த ருளிய ...... சிவன்வாழ்வே

சினமுடை யசுரர் மனமது வெருவ
     மயிலது முடுகி ...... விடுவோனே

பருவரை யதனை யுருவிட எறியு
     மறுமுக முடைய ...... வடிவேலா

பசலையொ டணையு மிளமுலை மகளை
     மதன்விடு பகழி ...... தொடலாமோ

கரிதிரு முகமு மிடமுடை வயிறு
     முடையவர் பிறகு ...... வருவோனே

கனதன முடைய குறவர்த மகளை
     கருணையொ டணையு ...... மணிமார்பா

அரவணை துயிலு மரிதிரு மருக
     அவனியு முழுது ...... முடையோனே

அடியவர் வினையு மமரர்கள் துயரு
     மறஅரு ளுதவு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

திரிபுரம் அதனை யொருநொடி யதனில் ... அசுரர்களின்
திரிபுரத்தை ஒரே நொடியளவில்

எரிசெய்து அருளிய சிவன்வாழ்வே ... பஸ்மம் ஆக்கி அருளிய சிவன்
பெற்ற செல்வமே,

சினமுடை அசுரர் மனமது வெருவ ... கோபம் கொண்ட
அசுரர்களின் மனத்தில் அச்சம் தோன்ற

மயிலது முடுகி விடுவோனே ... உன் மயிலினை வேகமாகச்
செலுத்துவோனே,

பருவரை யதனை யுருவிட எறியும் ... பெரிய கிரெளஞ்சமலையினை
ஊடுருவும்படி எறிந்த

அறுமுக முடைய வடிவேலா ... கூரிய வேலை உடைய ஆறுமுகனே,

பசலையொடு அணையும் இளமுலை மகளை ... விரகத்தினால்
பசலை நோய் வந்து தவிக்கும் இள மார்புள்ள என் மகளை

மதன்விடு பகழி தொடலாமோ ... மன்மதன் விடும் மலரம்புகள்
தொளைத்திடலாமோ?

கரிதிரு முகமும் இடமுடை வயிறும் ... யானையின் அழகிய
முகமும் பெருத்த வயிறும்

உடையவர் பிறகு வருவோனே ... உடையவராம் வினாயகருக்குப்
பின்பு பிறந்தவனே,

கனதனம் உடைய குறவர்தம் மகளை ... சிறப்பும் செல்வமும்
உடைய குறவர்களது மகள் வள்ளியை

கருணையொடு அணையும் மணிமார்பா ... கருணையோடு தழுவும்
அழகிய மார்பை உடையவனே,

அரவணை துயிலும் அரிதிரு மருக ... பாம்புப் படுக்கையில்
உறங்கும் ஹரியின் அழகிய மருமகனே,

அவனியும் முழுதும் உடையோனே ... இந்த உலகம் அத்தனையும்
சொந்தமாகக் கொண்டவனே,

அடியவர் வினையும் அமரர்கள் துயரும் அற ... அடியவர்கள்
வினையும் அசுரர்கள் தரும் துன்பமும் அற்றுப்போகும்படியாக

அருளுதவு பெருமாளே. ... திருவருளைத் தந்திடும் பெருமாளே.


இப்பாடல் முருகனின் காதலால் விரகமுற்ற மகளுக்காக தாயார் பாடும் பாடல்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.186  pg 3.187 
 WIKI_urai Song number: 1078 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1075 - thiripuram adhanai (common)

thiripuram adhanai orunodi adhanil
     eriseydh aruLiya sivan ...... vAzhvE

sinamudai asurar manamadhu veruva
     mayiladhu mudugi ...... viduvOnE

paruvarai adhanai uruvida eRiyum
     aRumugam udaiya ...... vadivElA

pasalai yodaNaiyum iLamulai magaLai
     madhanvidu pagazhi ...... thodalAmO

karithiru mukamum idamudai vayiRum
     udaiyavar piRagu ...... varuvOnE

ganathanam udaiya kuRavartha magaLai
     karuNai yodaNaium ...... aNimArbA

aravaNai thuyilum ari thiru maruga
     avaniyu muzhudhum ...... udaiyOnE

adiyavar vinaiyum amarargaL thuyarum
     aRa aruL udhavu ...... perumALE.

......... Meaning .........

thiripuram adhanai orunodi adhanil: In one moment, the asuras' abode, Thiripuram, was

eriseydh aruLiya sivan vAzhvE: burnt down graciously by SivA; You are His Son!

sinamudai asurar manamadhu veruva: To scare the wits out of the angry demons,

mayiladhu mudugi viduvOnE: You drove Your Peacock fiercely amidst them!

paruvarai adhanai uruvida eRiyum: The large mountain, Krounchamalai, was pierced by

aRumugam udaiya vadivElA: Your sharp spear, Oh Arumuga (Six-faced God),

pasalai yodaNaiyum iLamulai magaLai: This daughter of mine, afflicted by separation from You and suffering from decoloration of her young chest,

madhanvidu pagazhi thodalAmO: does not deserve to be pierced by the flower-arrows shot by Manmathan (Love God).

karithiru mukamum idamudai vayiRum udaiyavar piRagu varuvOnE: You are the younger brother of VinAyagA, with a holy elephant-face and a large belly.

ganathanam udaiya kuRavartha magaLai: VaLLi, the damsel of rich and famous KuRavas,

karuNai yodaNaium aNimArbA: was embraced by You with love and compassion!

aravaNai thuyilum ari thiru maruga: You are the nephew of Hari, who sleeps on the snake-bed!

avaniyu muzhudhum udaiyOnE: You are the proud possessor of the entire world!

adiyavar vinaiyum amarargaL thuyarum: Your devotees' karma and the asuras' tormentation

aRa aruL udhavu perumALE.: are both destroyed by Your Grace, Oh Great One!


This song is supposed to be composed by a mother whose daughter is tormented by love for, and separation from, Murugan.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1075 thiripuram adhanai - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]