திருப்புகழ் 1076 புழுககில் களபம்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1076 puzhugagilkaLabam  (common)
Thiruppugazh - 1076 puzhugagilkaLabam - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தனன தனதன தனன
     தனதன தனன ...... தனதான

......... பாடல் .........

புழுககில் களப மொளிவிடு தரள
     மணிபல செறிய ...... வடமேருப்

பொருமிரு கலச முலையினை யரிவை
     புனையிடு பொதுவின் ...... மடமாதர்

அழகிய குவளை விழியினு மமுத
     மொழியினு மவச ...... வநுராக

அமளியின் மிசையி லவர்வச முருகி
     அழியுநி னடிமை ...... தனையாள்வாய்

குழலிசை யதுகொ டறவெருள் சுரபி
     குறுநிரை யருளி ...... யலைமோதுங்

குரைசெறி யுததி வரைதனில் விறுசு
     குமுகுமு குமென ...... வுலகோடு

முழுமதி சுழல வரைநெறு நெறென
     முடுகிய முகிலின் ...... மருகோனே

மொகுமொகு மொகென ஞிமிறிசை பரவு
     முளரியின் முதல்வர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

புழுகு அகில் களபம் ஒளி விடு தரளம் மணி பல செறிய வட
மேருப் பொரும் இரு கலச முலையினை
... புனுகு சட்டம், அகில்,
கலவைச் சந்தனம், ஒளி வீசும் முத்து மாலை, ரத்தின மாலை பலவும்
நெருங்க, வட திசையில் உள்ள மேரு மலையை நிகர்க்கும் குடம்
போன்ற மார்பகங்களிலும்,

அரிவை புனை இடு பொதுவின் மட மாதர் அழகிய குவளை
விழியினும் அமுத மொழியினும்
... பணிப் பெண்கள்அலங்கரிக்கும்
இளம் பருவத்துப் பொது மகளிரின் அழகிய குவளை மலர் போன்ற
கண்களிலும், அமுதம் போன்ற பேச்சிலும்,

அவச அநுராக அமளியின் மிசையில் அவர் வசம் உருகி
அழியு(ம்) நின் அடிமை தனை ஆள்வாய்
... தன் வசம் அழிந்துக்
காமப் பற்றுடன் படுக்கை மீது அந்த விலைமாதர்கள் மேல் வசப்பட்டு
மனம் உருகி அழிந்து போகும் அடிமையாகிய என்னை
ஆண்டருள்வாயாக.

குழல் இசை அது கொடு அற வெருள் சுரபி குறு நிரை
அருளி
... புல்லாங்குழலின் இசையால் மிகவும் மயங்கி அஞ்சிய
காராம் பசு முதலிய சிறிய பசுக் கூட்டத்துக்கு உதவி செய்து அருளி,

அலை மோதும் குரை செறி உததி வரை தனில் விறுசு குமு
குமு குமு என உலகோடு முழு மதி சுழல வரை நெறு நெறு
என முடுகிய முகிலின் மருகோனே
... அலை வீசுவதும், ஒலி
நிரம்பச் செய்வதுமான கடல், மலை போல சுழன்று அலைகளை வீசி
குமுகுமு குமு என்று பொங்கவும், உலகுடன் பூரண சந்திரன் சுழற்சி
அடைய, மந்திர மலை நெறு நெறு என்று சுழலவும், விரைந்து
(திருப்பாற் கடலைக்) கடைந்த மேக வண்ணனாகிய திருமாலின்
மருகோனே,

மொகு மொகு மொகு என ஞிமிறு இசை பரவு முளரியின்
முதல்வர் பெருமாளே.
... மொகுமொகு மொகு என்று வண்டுகள்
இசை பாடும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனின் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.186  pg 3.187  pg 3.188  pg 3.189 
 WIKI_urai Song number: 1079 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1076 - puzhugagil kaLabam (common)

puzhukakil kaLapa moLividu tharaLa
     maNipala seRiya ...... vadamErup

porumiru kalasa mulaiyinai yarivai
     punaiyidu pothuvin ...... madamAthar

azhakiya kuvaLai vizhiyinu mamutha
     mozhiyinu mavasa ...... vanurAka

amaLiyin misaiyi lavarvasa muruki
     azhiyuni nadimai ...... thanaiyALvAy

kuzhalisai yathuko daRaveruL surapi
     kuRunirai yaruLi ...... yalaimOthum

kuraiseRi yuthathi varaithanil viRusu
     kumukumu kumena ...... vulakOdu

muzhumathi suzhala varaineRu neRena
     mudukiya mukilin ...... marukOnE

mokumoku mokena njimiRisai paravu
     muLariyin muthalvar ...... perumALE.

......... Meaning .........

puzhuku akil kaLapam oLi vidu tharaLam maNi pala seRiya vada mErup porum iru kalasa mulaiyinai: Languishing in their pot-like breasts that look like the Mount MEru in the North, smeared with a paste of civet, incence and mixed sandalwood, wearing compactly-set chains of dazzling pearls and gems,

arivai punai idu pothuvin mada mAthar azhakiya kuvaLai vizhiyinum amutha mozhiyinum: and pining for the eyes that look like black lily belonging to the young whores beautified by the servant women and their sweet speech like nectar,

avasa anurAka amaLiyin misaiyil avar vasam uruki azhiyu(m) nin adimai thanai ALvAy: I lost my self-control and, with great passion, was ensnared by those whores on their bed; my mind simply melted, destroying me altogether; kindly take charge of this slave and bless me with Your grace!

kuzhal isai athu kodu aRa veruL surapi kuRu nirai aruLi: When He played on the flute, the little herd of cows (of the milk-yielding variety) were mesmerised and became scared; Lord KrishNa helped those cows graciously;

alai mOthum kurai seRi uthathi varai thanil viRusu kumu kumu kumu ena ulakOdu muzhu mathi suzhala varai neRu neRu ena mudukiya mukilin marukOnE: The sea full of waves making a loud noise tossed mountain-high waves and swelled up very fast; the earth and the full moon went on a dizzy spell; Mount Manthira began to rotate around its own axis with a breaking sound as Lord VishNu, of the complexion of the black cloud, began to churn the milky ocean speedily; and You are the nephew of that Lord!

moku moku moku ena njimiRu isai paravu muLariyin muthalvar perumALE.: The beetles swarming around the lotus of Brahma on which He is seated began to hum musically; and You are the Lord of that Brahma, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1076 puzhugagil kaLabam - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]