திருப்புகழ் 1074 இசைந்த ஏறும்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1074 isaindhaERum  (common)
Thiruppugazh - 1074 isaindhaERum - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனந்த தானந் தனதன தானன ...... தனதான

......... பாடல் .........

இசைந்த ஏறுங் கரியுரி போர்வையும் ...... எழில்நீறும்

இலங்கு நூலும் புலியத ளாடையு ...... மழுமானும்

அசைந்த தோடுஞ் சிரமணி மாலையு ...... முடிமீதே

அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய ...... குருநாதா

உசந்த சூரன் கிளையுடன் வேரற ...... முனிவோனே

உகந்த பாசங் கயிறொடு தூதுவர் ...... நலியாதே

அசந்த போதென் துயர்கெட மாமயில் ...... வரவேணும்

அமைந்த வேலும் புயமிசை மேவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

இசைந்த ஏறும் ... விருப்பமுடன் ஏறுகின்ற ரிஷப வாகனமும்,

கரியுரி போர்வையும் ... கஜமுகாசுரனின் தோலை உரித்துப்
போர்த்திய போர்வையும்,

எழில்நீறும் ... அழகிய திருநீறும்,

இலங்கு நூலும் ... விளங்குகின்ற பூணூலும்,

புலியத ளாடையும் ... புலித்தோல் ஆடையும்,

மழுமானும் ... கோடரியும், மானும்,

அசைந்த தோடும் ... காதுகளில் அசைந்தாடும் தோடுகளும்,

சிரமணி மாலையும் ... சடையிலே தரித்த அழகிய கொன்றை
மாலையும்,

முடிமீதே அணிந்த ஈசன் ... தலைமுடி மீது அணிந்த ஈசனாம்
சிவபெருமான்

பரிவுடன் மேவிய குருநாதா ... பரிவோடு போற்றிப் பரவிய
குருநாதனே,

உசந்த சூரன் கிளையுடன் வேரற முனிவோனே ... கர்வம் மிக்க
சூரன் தன் சுற்றத்தாருடன் வேரற்றுப் போகும்படி கோபித்தவனே,

உகந்த பாசங் கயிறொடு தூதுவர் நலியாதே ... விருப்போடு
பாசக்கயிறை எடுத்து வந்த யமதூதர்கள் சோர்வு அடையாமல்

அசந்த போதென் துயர்கெட ... என் உயிர் கொண்டு செல்லும்
சமயம் நான் அயரும்போது எனது துயரங்கள் நீங்குமாறு

மாமயில் வரவேணும் ... சிறந்த மயில் மேல் நீ வந்தருள வேண்டும்.

அமைந்த வேலும் புயமிசை மேவிய பெருமாளே. ... அழகிய
வேலினை தோளில் வைத்திருக்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.184  pg 3.185 
 WIKI_urai Song number: 1077 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
The Kaumaram Team
கௌமாரம் குழுவினர்

The Kaumaram Team
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Thiru P. Shanmugam
திரு பொ. சண்முகம்

Thiru P. Shanmugam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Singapore B. Subhashini
'சிங்கப்பூர்' செல்வி சுபாஷினி

Singapore B. Subhashini
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Karivalam Thiru Muruga Sundhar
'கரிவலம்' திரு முருக சுந்தர்

Thiru M. Sundhar
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1074 - isaindha ERum (common)

isaindha ERum kariyuri pOrvaiyum ...... ezhilneeRum

ilangu nUlum puliyadhaL Adaiyu ...... mazhumAnum

asaindha thOdum siramaNi mAlaiyu ...... mudimeedhE

aNindha eesan parivudan mEviya ...... gurunAthA

usandha sUran kiLaiyudan vEraRa ...... munivOnE

ugandha pAsam kayiRodu dhUthuvar ...... naliyAdhE

asandha pOdhen thuyarkeda mAmayil ...... varavENum

amaindha vElum buyamisai mEviya ...... perumALE.

......... Meaning .........

isaindha ERum: The Great Bull, Nandi, on which He mounts with pleasure;

kariyuri pOrvaiyum: the shawl made of elephant hide (stripped from the demon GajamukAsuran);

ezhilneeRum: the elegant and bright holy ash on His body;

ilangu nUlum: the prominent PUNUl (sacred thread on the left shoulder);

puliyadhaL Adaiyum: the attire made of tiger skin;

mazhumAnum: the pickaxe and the deer on two hands;

asaindha thOdum: the swinging earstuds; and

siramaNi mAlaiyu mudimeedhE: the kondRai (Indian laburnum) garland worn on the head;

aNindha eesan: these are the decorations of our Lord, SivA.

parivudan mEviya gurunAthA: He prevails upon You with love as Master!

usandha sUran kiLaiyudan vEraRa munivOnE: The mighty and proud demon, SUran, and his dynasty were annihilated by Your rage!

ugandha pAsam kayiRodu dhUthuvar naliyAdhE: When Yama's (Death-God) messengers approach me with relish with their favourite weapon, PAsakkayiRu (Rope of Bondage), I should not be disheartened;

asandha pOdhen thuyarkeda mAmayil varavENum: and at that weak moment when they take my life away, You must come to me on Your great peacock to end my misery.

amaindha vElum buyamisai mEviya perumALE.: You display the beautiful spear on Your shoulder, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1074 isaindha ERum - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]