திருப்புகழ் 1041 மாதா வோடே  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1041 mAdhAvOdE  (common)
Thiruppugazh - 1041 mAdhAvOdE - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

mp3
 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானா தானா தானா தானா
     தானா தானத் ...... தனதான

......... பாடல் .........

மாதா வோடே மாமா னானோர்
     மாதோ டேமைத் ...... துனமாரும்

மாறா னார்போ னீள்தீ யூடே
     மாயா மோகக் ...... குடில்போடாப்

போதா நீரூ டேபோய் மூழ்கா
     வீழ்கா வேதைக் ...... குயிர்போமுன்

போதா காரா பாராய் சீரார்
     போதார் பாதத் ...... தருள்தாராய்

வேதா வோடே மாலா னார்மேல்
     வானோர் மேனிப் ...... பயமீள

வேதா னோர்மே லாகா தேயோர்
     வேலால் வேதித் ...... திடும்வீரா

தீதார் தீயார் தீயு டேமூள்
     சேரா சேதித் ...... திடுவோர்தஞ்

சேயே வேளே பூவே கோவே
     தேவே தேவப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மாதாவோடே மாமான் ஆனோர் மாதோடே
மைத்துனமாரும்
... தாயுடன் அம்மான்மாரும், மனைவியுடன்
மைத்துனன்மாரும்,

மாறானார் போல் நீள்தீ யூடே ... என்னுடன் பகைமை
பூண்டவர்கள் போல, பெரு நெருப்பின் இடையில்,

மாயா மோகக் குடில்போடாப் ... மாயைக்கும் ஆசைக்கும்
இடம் தந்த இந்த உடலை இட்டு,

போதா நீரூடே போய் மூழ்கா ... நீரின் இடையே போய் முழுகி,

வீழ்கா வேதைக்கு உயிர்போமுன் ... பின்பு (மயானத்தை விட்டு)
நீங்குதல் என்கிற துன்பத்துக்கு இடம் தந்து, உயிர் போவதற்கு முன்பாக,

போதா காரா பாராய் ... ஞான உருவத்தனே, கண் பார்த்து
அருள்வாயாக.

சீரார் போதார் பாதத்து அருள்தாராய் ... சிறப்பு நிறைந்த தாமரை
மலர்போன்ற திருவடியின் அருளைத் தருவாயாக.

வேதாவோடே மால் ஆனார்மேல் வானோர் மேனிப்
பயமீளவே
... பிரமனுடன் திருமால், மற்றும் விண்ணில் உள்ள தேவர்கள்
இவர்களின் உடலில் கண்ட பயம் நீங்குவதற்கு,

தானோர் மேல் ஆகாதேயோர் வேலால் வேதித்திடும் வீரா ...
தானவர்களாகிய அசுரர்கள் மேம்படாதவாறு ஒப்பற்ற வேலாயுதத்தால்
அவர்களை வதைத்திட்ட வீரனே,

தீதார் தீயார் தீயு டேமூள் சேரா சேதித்திடுவோர்தம் சேயே ...
கொடியவர்களாகிய திரிபுராதி அசுரர்கள் தீயின் இடையே சேரும்படி
அழித்தவராகிய சிவபெருமானின் குழந்தையே,

வேளே பூவே கோவே ... செவ்வேள் முருகனே, அழகனே,
தலைவனே,

தேவே தேவப் பெருமாளே. ... தேவனே, தேவர்களுக்கெல்லாம்
பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.120  pg 3.121  pg 3.122  pg 3.123 
 WIKI_urai Song number: 1044 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 1041 - mAdhA vOdE (common)

mAthA vOdE mAmA nAnOr
     mAthO dEmaith ...... thunamArum

mARA nArpO neeLthee yUdE
     mAyA mOkak ...... kudilpOdAp

pOthA neeru dEpOy mUzhkA
     veezhkA vEthaik ...... kuyirpOmun

pOthA kArA pArAy seerAr
     pOthAr pAthath ...... tharuLthArAy

vEthA vOdE mAlA nArmEl
     vAnOr mEnip ...... payameeLa

vEthA nOrmE lAkA thEyOr
     vElAl vEthith ...... thidumveerA

theethAr theeyAr theeyu dEmUL
     sErA sEthith ...... thiduvOrtham

sEyE vELE pUvE kOvE
     thEvE thEvap ...... perumALE.

......... Meaning .........

mAthA vOdE mAmA nAnOr mAthO dEmaith thunamArum mARA nArpO(l): It appears as though my mother, uncles, wife and brothers-in-law are all alientated from me

neeLthee yUdE mAyA mOkak kudilpOdA: because this body of mine, the one which is the source of many a delusion and desire, is about to be consigned to tall flames of fire;

pOthA neeru dEpOy mUzhkA: because after disposing of this body, they would all have a dip in water and go away;

veezhkA vEthaik kuyirpOmun: saving me from this degeneration, before my life departs from this body,

pOthA kArA pArAy seerAr pOthAr pAthath tharuLthArAy: Oh Quintessence of True Knowledge, kindly bestow Your gracious eyes on me granting Your hallowed lotus-feet!

vEthA vOdE mAlA nArmEl vAnOr mEnip payameeLavE: In order to allay the fear felt right up to their bones by Lord BrahmA, VishNu and other celestials,

thAnOrmE lAkAthE yOr vElAl vEthith thidumveerA: You crushed the demons, holding them down with Your matchless spear, Oh valorous One!

theethAr theeyAr theeyu dEmUL sErA sEthith thiduvOrtham sEyE: The evil demons of Thiripuram were all burnt down and killed by Lord SivA, and You are His Son!

vELE pUvE kOvE thEvE thEvap perumALE.: You are the reddish God of Love! You are the handsome king! Oh Lord, You are the God of all the Celestials, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

mp3
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1041 mAdhA vOdE - common


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]