திருப்புகழ் 1035 ஊனுந் தசையுடல்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1035 Ununthasaiyudal  (common)
Thiruppugazh - 1035 Ununthasaiyudal - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானந் தனதன தானந் தனதன
     தானந் தனதன ...... தனதான

......... பாடல் .........

ஊனுந் தசையுடல் தானொன் பதுவழி
     யூருங் கருவழி ...... யொருகோடி

ஓதும் பலகலை கீதஞ் சகலமு
     மோரும் படியுன ...... தருள்பாடி

நானுன் திருவடி பேணும் படியிரு
     போதுங் கருணையில் ...... மறவாதுன்

நாமம் புகழ்பவர் பாதந் தொழஇனி
     நாடும் படியருள் ...... புரிவாயே

கானுந் திகழ்கதி ரோனுஞ் சசியொடு
     காலங் களுநடை ...... யுடையோனுங்

காருங் கடல்வரை நீருந் தருகயி
     லாயன் கழல்தொழு ...... மிமையோரும்

வானிந் திரனெடு மாலும் பிரமனும்
     வாழும் படிவிடும் ...... வடிவேலா

மாயம் பலபுரி சூரன் பொடிபட
     வாள்கொண் டமர்செய்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஊனுந் தசையுடல் தானொன்பதுவழி ... மாமிசமும் சதையும் கூடிய
இந்த உடல் தன்னுடன் ஒன்பது துவாரங்கள்*

ஊருங் கருவழி யொருகோடி ... சேர்ந்துவரும் கருவின் வழி ஒரு
கோடிக் கணக்கானது. (அந்தப் பிறவித் துயரம் ஒழிய)

ஓதும் பலகலை கீதஞ் சகலமும் ... நான் படிக்கின்ற சாத்திர
நூல்களையும், இசை ஞானத்தையும் மற்ற எல்லா கற்கவேண்டியவையும்

ஓரும் படியுனது அருள்பாடி ... யான் உணரும்படியாக உன்னுடைய
திருவருளைத் துதித்துப் பாடி,

நானுன் திருவடி பேணும் படி ... யான் உன்னுடைய திருவடிகளை
விரும்பிப் போற்றும்படி

இருபோதுங் கருணையில் மறவாது ... காலை மாலை இரண்டு
வேளைகளிலும் உன் கருணைத்திறத்தில் ஞாபகம் வைத்து,

உன்நாமம் புகழ்பவர் பாதந் தொழ ... உன் திருநாமங்களைப்
போற்றுவோரின் பாதங்களைத் தொழ

இனி நாடும் படியருள் புரிவாயே ... இனியேனும் யான்
விரும்பும்வண்ணம் நீ திருவருள் புரிவாயாக.

கானுந் திகழ்கதிரோனுஞ் சசியொடு ... காட்டிலும் கூட தன்
கதிர்களை வீசும் சூரியனும், சந்திரனும்,

காலங்களு நடையுடையோனும் ... இறப்பு, நிகழ்வு, எதிர்வு
என்ற முக்காலங்களும், காற்றும்,

காருங் கடல்வரை நீருந் தருகயிலாயன் ... மேகமும், கடலும்,
மலையும், நீரும் - இவைகளையெல்லாம் படைத்த கைலாயநாதனாகிய
சிவபிரானின்

கழல்தொழுமிமையோரும் ... பாதங்களைப் பணியும் தேவர்களும்,

வானிந்திரன் நெடு மாலும் பிரமனும் ... தேவநாட்டு இந்திரன்,
தெடிய திருமால், பிரமன் ஆகியோரும்

வாழும் படிவிடும் வடிவேலா ... வாழும்படியாகச் செலுத்திய கூரிய
வேலாயுதனே,

மாயம் பலபுரி சூரன் பொடிபட ... பல மாயங்களைப் புரிந்த சூரன்
தூள்பட்டு அழியும்படி

வாள்கொண் டமர்செய்த பெருமாளே. ... வாள் கொண்டு
போர்புரிந்த பெருமாளே.


* ஒன்பது துவாரங்கள்:

இரு செவிகள், இரு கண்கள், இரு நாசித் துவாரங்கள், ஒரு வாய், இரு கழிவுத் துவாரங்கள்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.110  pg 3.111 
 WIKI_urai Song number: 1038 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1035 - Unun thasaiyudal (common)

Unun dhasai udal thAnon padhu vazhi
     yUrun karuvazhi ...... orukOdi

Odhum palakalai geetham sakalamu
     mOrumpadi unadhu ...... aruL pAdi

nAnun thiruvadi pENumpadi iru
     pOdhum karuNaiyil ...... maravAdhun

nAmam pugazhbavar pAdham thozha ini
     nAdumpadi aruL ...... purivAyE

kAnun thigazh kadhirOnum sasiyodu
     kAlangaLu nadai ...... udaiyOnun

kArum kadalvarai neerumtharu kayi
     lAyan kazhal thozhum ...... imaiyOrum

vAn indhira nedu mAlum biramanum
     vAzhumpadi vidum ...... vadivElA

mAyampala puri SUran podipada
     vAL koNdamar seydha ...... perumALE.

......... Meaning .........

Unun dhasai udal thAnon padhu vazhi: The body consisting of flesh and muscles comes along with nine portals*

yUrun karuvazhi orukOdi: and takes millions of births through the womb. (To end the miserable birth cycle,)

Odhum palakalai geetham sakalamum: whatever holy writings that I read, the music I practise and all other learnings I acquire,

Orumpadi unadhu aruL pAdi: kindly make me realise their significance; for that, I have to sing Your glory;

nAnun thiruvadi pENumpadi: I have to willingly pay obeisance to Your hallowed feet

irupOdhum karuNaiyil maravAdhun: keeping Your grace in my mind in the morning and in the evening;

nAmam pugazhbavar pAdham thozha ini nAdumpadi aruL purivAyE: and kindly bless me to seek henceforth Your devotess who praise Your holy name and prostrate at their feet.

kAnun thigazh kadhirOnum sasiyodu: The sun and the moon that shine even in the jungles,

kAlangaLu nadai udaiyOnun: the three tenses (the past, the present and the future), the wind,

kArum kadalvarai neerum: the clouds, the oceans, the mountains and the water

tharu kayilAyan kazhal thozhum imaiyOrum: are all created by Lord SivA who presides at the Mount KailAsh; all those celestials who worship that SivA,

vAn indhira nedu mAlum biramanum: IndrA of the heavenly land, the tall one (Vishnu) and BrahmA,

vAzhumpadi vidum vadivElA: were all protected when You wielded Your sharp spear, Oh Lord!

mAyampala puri sUran podipada: The demon SUran, who was up to several delusory tricks and disguises, was shattered to pieces

vAL koNdamar seydha perumALE.: when You fought him with a drawn sword, Oh Great One!


* The nine portals of the body:

two eyes, two ears, two nostrils, a mouth and two excretory organs.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1035 Unun thasaiyudal - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]