திருப்புகழ் 1003 கமல குமிளித  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1003 kamalakumiLidha  (common)
Thiruppugazh - 1003 kamalakumiLidha - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

......... பாடல் .........

கமல குமிளித முலைமிசை துகிலிடு
     விகட கெருவிக ளசடிகள் கபடிகள்
          கலக மிடுவிழி வலைகொடு தழுவிக ...... ளிளைஞோர்கள்

கனலி லிடுமெழு கெனநகை யருளிகள்
     அநெக விதமொடு தனியென நடவிகள்
          கமரில் விழுகிடு கெடுவிகள் திருடிகள் ...... தமைநாடி

அமுத மொழிகொடு தவநிலை யருளிய
     பெரிய குணதர ருரைசெய்த மொழிவகை
          அடைவு நடைபடி பயிலவு முயலவு ...... மறியாத

அசட னறிவிலி யிழிகுல னிவனென
     இனமு மனிதரு ளனைவரு முரைசெய
          அடிய னிதுபட அரிதினி யொருபொரு ...... ளருள்வாயே

திமித திமிதிமி டமடம டமவென
     சிகர கரதல டமருக மடிபட
          தெனன தெனதென தெனவென நடைபட ...... முநிவோர்கள்

சிவமி லுருகியு மரகர வெனவதி
     பரத பரிபுர மலரடி தொழஅநு
          தினமு நடமிடு பவரிட முறைபவள் ...... தருசேயே

குமர சரவண பவதிற லுதவிய
     தரும நிகரொடு புலமையு மழகிய
          குழக குருபர னெனவொரு மயில்மிசை ...... வருவோனே

குறவ ரிடுதினை வனமிசை யிதணிடை
     மலையு மரையொடு பசலைகொள் வளர்முலை
          குலவு குறமக ளழகொடு தழுவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கமல குமிளித முலை மிசை துகில் இடு விகட கெருவிகள்
அசடிகள் கபடிகள்
... தாமரையின் மொக்குப் போல புடைத்தெழுந்த
மார்பின் மீது மேலாடையை எடுப்பாக அணியும் மிகுந்த கர்வம்
பிடித்தவர்கள், மூடர்கள், வஞ்சகர்கள்,

கலகம் இடு விழி வலை கொடு தழுவிகள் இளைஞோர்கள்
கனலில் இடு மெழுகு என நகை அருளிகள்
... கலகத்தை
விளைவிக்கும் கண்ணாகிய வலையை வீசித் தழுவுபவர்கள், வாலிபர்களை
நெருப்பில் இட்ட மெழுகைப் போல உருகச்செய்து சிரிப்பவர்கள்,

அநெக விதமொடு தனி என நடவிகள் கமரில் விழுகிடு
கெடுவிகள் திருடிகள் தமை நாடி
... பலவிதமான வழிகளில்,
இணை இல்லாத வகையில் நடை நடப்பவர்கள், படுகுழிக்குள் விழும்படிச்
செய்யும் கேடு விளைவிப்பவர்கள், திருட்டுக் குணம் உடையவர்கள் ஆகிய
விலைமகளிரைத் தேடிச் சென்றவன் நான்.

அமுத மொழி கொடு தவ நிலை அருளிய பெரிய குண தரர்
உரை செய்த மொழி வகை
... அமுதம் போன்ற சொற்களால்
(எனக்குத்) தவ நிலையைத் தந்து அருளிய பெரிய குணவானாகிய
தவப்பெரியார்* உபதேசித்த மொழியின் படி

அடைவு நடை படி பயிலவும் முயலவும் அறியாத அசடன்
அறிவிலி இழி குலன் இவன் என
... தகுதியான நடை முறையை
அனுஷ்டிக்கவும், முயற்சி செய்யவும் அறியாத முட்டாள், அறிவில்லாதவன்,
இழி குலத்தைச் சேர்ந்தவன் இவன் என்று

இனமும் மனிதருள் அனைவரும் உரை செய அடியன் இது
பட அரிது இனி ஒரு பொருள் அருள்வாயே
... சுற்றத்தார்களும்,
பிற மனிதர்கள் யாவரும் இழிவாய்ப் பேச, அடியேன் அத்தகைய பேச்சில்
படுதல் முடியாது. இனிமேல் ஒப்பற்ற ஞானப் பொருளை நீ அருள்
புரிவாயாக.

திமித திமிதிமி டமடம டமவென சிகர கரதல டமருகம்
அடிபட
... திமித திமிதிமி டமடம டமவென்ற ஒலியுடன் உயரப் பிடித்த
கையில் உள்ள உடுக்கை அடிபடவும்,

தெனன தெனதென தென என நடைபட முநிவோர்கள்
சிவமில் உருகியும் அரகர என
... தெனன தெனதென என்று
நிகழ்ச்சிகள் நிகழவும், முனிவர்கள் சிவத் தியானத்தில் உருகியும், ஹர ஹர
என்று ஒலி எழுப்பியும்,

அதி பரத பரிபுர மலர் அடி தொழ அநு தினமும் நடம்
இடுபவர் இடம் உறைபவள் தரு சேயே
... சிறப்பான பரத சாஸ்திர
முறையில் சிலம்பணிந்த மலர் போன்ற திருவடிகளை வணங்கவும்,
நாள்தோறும் நடனம் செய்யும் சிவபெருமானின் இடது பாகத்தில்
வீற்றிருக்கும் பார்வதி தேவி பெற்ற குழந்தையே,

குமர சரவணபவ திறல் உதவிய தரும ... குமரனே, சரவணபவனே,
ஞான வலிமையைத் தந்த தரும மூர்த்தியே,

நிகரொடு புலமையும் அழகிய குழக குருபரன் என ஒரு மயில்
மிசை வருவோனே
... ஒளியும், புலமையும் அழகோடு விளங்கும்
இளைஞனே, குருபரனே, என்று அனைவரும் போற்றும்படி ஒப்பற்ற
மயில் மீது வருபவனே,

குறவர் இடு தினை வனம் மிசை இதணிடை மலையும்
அரையொடு பசலை கொள் வளர் முலை குலவு
... குறவர்கள்
பயிரிட்ட தினைப்புனத்தில் பரண்மீது நின்று, இடையோடு போர் செய்யும்
பசலை** நிறம் கொண்டு எழுந்த மார்பகம் விளங்கும்

குற மகள் அழகொடு தழுவிய பெருமாளே. ... குற மகளான
வள்ளியை அழகு பெறத் தழுவிய பெருமாளே.


* அருணகிரியாரின் தவவலிமையை உணர்ந்த அருணாசலேசுரர் தவப்
பெரியார் போலத் தோன்றி, அறுமுகக் கடவுளைத் தியானிக்கவும் என்று
உபதேசம் செய்தார். இதைப் பொருட்படுத்தாத அருணகிரியார் சில காலம்
வீணாக்கினார். ஊரார் வசவுக்கும் உள்ளானார். பின்னர் வருந்தினார்.


** தலைவர் பிரிவதால் ஏற்படும் விரக தாபத்தால் உண்டாகும் நிற வேறுபாடு.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.38  pg 3.39  pg 3.40  pg 3.41 
 WIKI_urai Song number: 1006 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1003 - kamala kumiLidha (common)

kamala kumiLitha mulaimisai thukilidu
     vikada keruvika LasadikaL kapadikaL
          kalaka miduvizhi valaikodu thazhuvika ...... LiLainjOrkaL

kanali lidumezhu kenanakai yaruLikaL
     aneka vithamodu thaniyena nadavikaL
          kamaril vizhukidu keduvikaL thirudikaL ...... thamainAdi

amutha mozhikodu thavanilai yaruLiya
     periya guNathara ruraiseytha mozhivakai
          adaivu nadaipadi payilavu muyalavu ...... maRiyAtha

asada naRivili yizhikula nivanena
     inamu manitharu Lanaivaru muraiseya
          adiya nithupada arithini yoruporu ...... LaruLvAyE

thimitha thimithimi damadama damavena
     sikara karathala damaruka madipada
          thenana thenathena thenavena nadaipada ...... munivOrkaL

sivami lurukiyu marakara venavathi
     paratha paripura malaradi thozhAnu
          thinamu nadamidu pavarida muRaipavaL ...... tharusEyE

kumara saravaNa pavathiRa luthaviya
     tharuma nikarodu pulamaiyu mazhakiya
          kuzhaka gurupara nenavoru mayilmisai ...... varuvOnE

kuRava riduthinai vanamisai yithaNidai
     malaiyu maraiyodu pasalaikoL vaLarmulai
          kulavu kuRamaka Lazhakodu thazhuviya ...... perumALE.

......... Meaning .........

kamala kumiLitha mulai misai thukil idu vikada keruvikaL asadikaL kapadikaL: These women cover their prominent lotus-bud-like bosom by a top cloth in a showy way; they are vain, foolish and treacherous;

kalakam idu vizhi valai kodu thazhuvikaL iLainjOrkaL kanalil idu mezhuku ena nakai aruLikaL: they cast the net of their combative eyes and hug (the victims); they make their young suitors melt like wax on fire and taunt them;

aneka vithamodu thani ena nadavikaL kamaril vizhukidu keduvikaL thirudikaL thamai nAdi: Their gait is of many varieties and is matchless; they bring down their victims in such a way that they are tossed into a bottomless pit; they have a thieving mentality; and I went after such whores.

amutha mozhi kodu thava nilai aruLiya periya guNa tharar urai seytha mozhi vakai: I was blessed by a great spiritual guide* of immense virtues whose words were like nectar, and he showed me the path towards bliss; I never paid heed to his preaching;

adaivu nadai padi payilavum muyalavum aRiyAtha asadan aRivili izhi kulan ivan ena: I was called a fool who neither followed the right method nor made an attempt to do so and was branded as a stupid person of the basest lineage;

inamum manitharuL anaivarum urai seya adiyan ithu pada arithu ini oru poruL aruLvAyE: my relatives and other people ridiculed me; I just cannot bear to be a victim of such derision; from now on, kindly teach me the matchless True Principle of Knowledge!

thimitha thimithimi damadama damavena sikara karathala damarukam adipada: To the beat of "thimitha thimithimi damadama dama", the hand-drum held in the hand up above is thumped;

thenana thenathena thena ena nadaipada munivOrkaL sivamil urukiyum arakara ena: the tempo of the events is swift to the beat of "thenana thenathena thena"; the sages are deeply immersed in the meditation on SivA, making the sound "Hara, Hara";

athi paratha paripura malar adi thozha anu thinamum nadam idupavar idam uRaipavaL tharu sEyE: the devotees are worshipping the ankled, lotus feet of the Lord, raised in the Bharatha Natya style; that is Lord SivA dancing every day, on whose left side DEvi PArvathi is concorporate; You are the child of that DEvi!

kumara saravaNapava thiRal uthaviya tharuma: Oh KumarA, SaravaNabavA, You are the symbol of righteousness that gave me the strength of True Knowledge!

nikarodu pulamaiyum azhakiya kuzhaka guruparan ena oru mayil misai varuvOnE: You come mounted on the unique peacock amidst the admiration of all who say "Oh handsome, bright and wise youngster, You are the Great Master!"

kuRavar idu thinai vanam misai ithaNidai malaiyum araiyodu pasalai koL vaLar mulai kulavu: She stood on a raised platform in the millet-field that was cultivated by the kuRavAs; her slender waist was compressed by the aggressive and prominent bosom whose colour had faded into a yellowish-green** tinge;

kuRa makaL azhakodu thazhuviya perumALE.: She is VaLLi, the damsel of the kuRavAs, and she hugged You gracefully, Oh Great One!


* Knowing the strength of his meditation, Lord ArunAchalEswarar -SivA- came to him in the disguise of an old ascetic and urged AruNagirinAthar to contemplate on the six-faced Lord Murugan. Ignoring this preaching, AruNagirinAthar whiled away his time, incurring the scorn of the public, which he regretted later.


** The decolorisation of the bosom into yellowish-green occurs when the heroine suffers the agony of separation from her lover.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1003 kamala kumiLidha - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]