திருப்புகழ் 1004 தசையும் உதிரமும்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1004 thasaiyumudhiramum  (common)
Thiruppugazh - 1004 thasaiyumudhiramum - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

......... பாடல் .........

தசையு முதிரமு நிணமொடு செருமிய
     கரும கிருமிக ளொழுகிய பழகிய
          சடல வுடல்கடை சுடலையி லிடுசிறு ...... குடில்பேணுஞ்

சகல கருமிகள் சருவிய சமயிகள்
     சரியை கிரியைகள் தவமெனு மவர்சிலர்
          சவலை யறிவினர் நெறியினை விடஇனி ...... யடியேனுக்

கிசைய இதுபொரு ளெனஅறி வுறவொரு
     வசன முறஇரு வினையற மலமற
          இரவு பகலற எனதற நினதற ...... அநுபூதி

இனிமை தருமொரு தனிமையை மறைகளின்
     இறுதி யறுதியி டவரிய பெறுதியை
          இருமை யொருமையில் பெருமையை வெளிபட ...... மொழிவாயே

அசல குலபதி தருமொரு திருமகள்
     அமலை விமலைக ளெழுவரும் வழிபட
          அருளி அருணையி லுறைதரு மிறையவ ...... ளபிராமி

அநகை அநுபவை அநுதயை அபிநவை
     அதல முதலெழு தலமிவை முறைமுறை
          அடைய அருளிய பழையவ ளருளிய ...... சிறியோனே

வசுவ பசுபதி மகிழ்தர வொருமொழி
     மவுன மருளிய மகிமையு மிமையவர்
          மரபில் வனிதையும் வனசரர் புதல்வியும் ...... வடிவேலும்

மயிலு மியலறி புலமையு முபநிட
     மதுர கவிதையும் விதரண கருணையும்
          வடிவு மிளமையும் வளமையு மழகிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தசையும் உதிரமும் நிணமொடு செருமிய ... சதை, இரத்தம்,
மாமிசம் ஆகியவை நெருங்கியுள்ள,

கரும கிருமிகள் ஒழுகிய பழகிய சடல உடல் ... செயல்கள்
நிறைந்துள்ள புழுக்கள் இருந்து பழகும் அறிவில்லாத
ஜடப்பொருளாகிய உடல்,

கடை சுடலையில் இடு சிறு குடில் பேணும் ... இறுதியில், சுடு
காட்டில் இடப்படுகின்ற சிறிய வீடு, (இதைப்) போற்றி வளர்க்கும்

சகல கருமிகள் சருவிய சமயிகள் ... (சாத்திர முறைப்படி)
அனைத்துக் கிரியைகளையும் செய்பவர்கள், போராடுகின்ற
சமய வாதிகள்,

சரியை கிரியைகள் தவம் எனும் அவர் சிலர் ... சரியை,
கிரியை, தவம் என்று சொல்லும் சிலர்,

சவலை அறிவினர் நெறியினை விட இனி அடியேனுக்கு ...
மனக் குழப்பம் உள்ள அறிவில்லாதவர்கள் ஆகியோர் கொண்டுள்ள
மார்க்கத்தை* நான் விட்டொழிக்க, இனிமேல் அடியவனாகிய எனக்கு

இசைய இது பொருள் என அறிவு உற ... இதுதான் ஞானப்
பொருள் என்று என் மனதில் படும்படி,

ஒரு வசனம் உற இரு வினை அற மலம் அற ... ஒப்பற்ற
உபதேசத்தை நான் பெறவும், நல்வினை, தீவினை எனப்படும்
இருமைகள் நீங்கவும், எனது (ஆணவம், கன்மம், மாயை என்ற)
மும்மலங்களும் நீங்கவும்,

இரவு பகல் அற எனது அற நினது அற ... (ஆன்மாவின்) கேவல
சகல நிலைகள் நீங்கவும், என்னுடைய மமகாரம் ஒழியவும், உன்னுடைய
துவித நிலை (அதாவது நீ வேறு, நான் வேறு என்ற தன்மை) நீங்கவும்,

அநுபூதி இனிமை தரும் ஒரு தனிமையை ... அனுபவ
உண்மையை, இன்பத்தைத் தருகின்ற ஒப்பற்ற தனி நிலையை,

மறைகளின் இறுதி அறுதி இட அரிய பெறுதியை ...
வேதங்களின் முடிவான பொருள்களும் முடிவு செய்து கூறுதற்கு
அரிதான பேற்றினை,

இருமை ஒருமையில் பெருமையை வெளிபட மொழிவாயே ...
சக்தி, சிவம் என்னும் இரண்டு பேதங்களின் ஒன்றான தன்மையின்
பெருமை விளங்க அடியேனுக்கு வெளிப்படுத்தும்படி உபதேசித்து
அருள்வாயாக.

அசல குல பதி தரும் ஒரு திரு மகள் ... மலைகளுள் சிறந்த
இமய மலை அரசன் ஈன்ற ஒப்பற்ற அழகிய பார்வதி,

அமலை விமலைகள் எழுவரும் வழிபட ... களங்கம் அற்றவள்,
தூய்மையான சப்த மாதர்கள்** ஏழு பேரும் (தன்னை) வணங்க

அருளி அருணையில் உறை தரும் இறையவள் அபிராமி ...
அருள் செய்து திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் தேவி, அழகி,

அநகை அநுபவை அநுதயை அபிநவை ... பாவம் அற்றவள்,
ஞான அனுபவம் உடையவள், காருண்யம் மிக்கவள், புதுமையானவள்,

அதல முதல் எழு தலம் இவை முறை முறை ... அதலம் முதலான
ஏழு உலகங்களுக்கும் முறைப்படி

அடைய அருளிய பழையவள் அருளிய சிறியோனே ...
முற்றிலுமாக அருள் செய்த பழமை வாய்ந்தவள் ஆகிய உமாதேவி
பெற்றருளிய குழந்தையே,

வசுவ பசுபதி மகிழ் தர ஒரு மொழி ... அக்கினி சொரூபியாகிய
சிவ பெருமான் மகிழும்படி ஒப்பற்ற உபதேச மொழியான

மவுனம் அருளிய மகிமையும் ... மவுன உபதேசத்தை அவருக்கு
அருளிய விசேஷப் பெருமையும்,

இமையவர் மரபில் வனிதையும் வனசரர் புதல்வியும்
வடிவேலும்
... தேவர்கள் குலத்தில் வந்த மங்கை தேவயானையும்,
வேடர் குலப் பெண்ணாகிய வள்ளியும், கூர்மையான வேலும்,

மயிலும் இயல் அறி புலமையும் உப நிட மதுர கவிதையும்
விதரண கருணையும்
... மயிலும், இயற்றமிழில் வல்ல புலமையும்,
உபநிஷதக் கருத்துக்கள் அடங்கிய தேவாரமும், கொடைத் திறம்
நிறைந்த உனது கருணையும்,

வடிவும் இளமையும் வளமையும் அழகிய பெருமாளே. ... உனது
வடிவமும், இளமையும், செழுமையும் சிறந்து விளங்கும் அழகுமிக்க
பெருமாளே.


* நான்கு பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:

1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம்
வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு
பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.

2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல்.
இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.

3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு
ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி,
முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.

4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு
ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'.

. . . சிவஞான சித்தியார் சூத்திரம்.


** சப்த மாதாக்கள்:

அபிராமி, மகேசுவரி, கெளமாரி, நாராயணி, வாராகி, இந்திராணி, காளி.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.40  pg 3.41  pg 3.42  pg 3.43  pg 3.44  pg 3.45 
 WIKI_urai Song number: 1007 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1004 - thasaiyum udhiramum (common)

thasaiyu muthiramu niNamodu serumiya
     karuma kirumika Lozhukiya pazhakiya
          sadala vudalkadai sudalaiyi lidusiRu ...... kudilpENum

sakala karumikaL saruviya samayikaL
     sariyai kiriyaikaL thavamenu mavarsilar
          savalai yaRivinar neRiyinai vidaini ...... yadiyEnuk

kisaiya ithuporu Lena aRi vuRavoru
     vasana muRa iru vinaiyaRa malamaRa
          iravu pakalaRa enathaRa ninathaRa ...... anupUthi

inimai tharumoru thanimaiyai maRaikaLin
     iRuthi yaRuthiyi davariya peRuthiyai
          irumai yorumaiyil perumaiyai veLipada ...... mozhivAyE

asala kulapathi tharumoru thirumakaL
     amalai vimalaika Lezhuvarum vazhipada
          aruLi aruNaiyi luRaitharu miRaiyava ...... LapirAmi

anakai anupavai anuthayai abinavai
     athala muthalezhu thalamivai muRaimuRai
          adaiya aruLiya pazhaiyava LaruLiya ...... siRiyOnE

vasuva pasupathi makizhthara vorumozhi
     mavuna maruLiya makimaiyu mimaiyavar
          marapil vanithaiyum vanasarar puthalviyum ...... vadivElum

mayilu miyalaRi pulamaiyu mupanida
     mathura kavithaiyum vitharaNa karuNaiyum
          vadivu miLamaiyum vaLamaiyu mazhakiya ...... perumALE.

......... Meaning .........

thasaiyum uthiramum niNamodu serumiya karuma kirumikaL ozhukiya pazhakiya sadala udal: This body is closely knit with muscles, blood and flesh; it is filled up with active germs yet it is an inert and dull body;

kadai sudalaiyil idu siRu kudil pENum: this little cottage is ultimately consigned to the cremation ground. Cherishing and nourishing such a body,

sakala karumikaL saruviya samayikaL sariyai kiriyaikaL thavam enum avar silar: there are many ritualists, religious fanatics, and a few people hanging on to methods of worship* through offerings and meditation;

savalai aRivinar neRiyinai vida: and confused and unwise ones. I wish to give up the methods of all these people.

ini adiyEnukku isaiya ithu poruL ena aRivu uRa: Henceforth, I should be clearly revealed the True Spiritual Knowledge;

oru vasanam uRa iru vinai aRa malam aRa: for that, a valuable lesson has to be taught to me; both my good and bad deeds must be severed; my three major blemishes (namely, arrogance, karma and delusion) must be removed;

iravu pagal aRa enathu aRa ninathu aRa: the two states of uniqueness and commonness of the soul must be gone; my possessiveness must perish; and the duality (the distinction between You and me) must go.

anupUthi inimai tharum oru thanimaiyai: It is Truth based on experience; It is a matchless and prominent state that gives eternal bliss;

maRaikaLin iRuthi aRuthi ida ariya peRuthiyai: It is such a rarity that even the pinnacles of the VEdAs cannot describe It with certainty;

irumai orumaiyil perumaiyai veLipada mozhivAyE: Its two manifestations of Sakthi and SivA are none other than an eternal immutable existence, and to enlighten me of Its greatness, kindly preach to me!

asala kula pathi tharum oru thiru makaL: Lord HimavAn, the King of the mountains, delivered this matchless and beautiful daughter, PArvathi;

amalai vimalaikaL ezhuvarum vazhipada: She is unblemished; She is worshipped by all the seven** immaculate Divine Mothers;

aruLi aruNaiyil uRai tharum iRaiyavaL apirAmi: She is graciously seated in ThiruvaNNAmalai; She is extremely charming;

anakai anupavai anuthayai abinavai: She is Pure without any sin; She is experienced in the Spiritual Knowledge; She is full of compassion; She is for ever new and the leading light;

athala muthal ezhu thalam ivai muRai muRai adaiya aruLiya pazhaiyavaL: She is the Old Traditional One who blesses, one and all, in the most complete and orderly manner, in the seven worlds, starting with the athala world;

aruLiya siRiyOnE: You are the child of such a great Mother, UmAdEvi!

vasuva pasupathi makizh thara oru mozhi mavunam aruLiya makimaiyum: Lord SivA, who is in the form of fire, was elated when You taught Him the method of mastering the art of silence;

imaiyavar marapil vanithaiyum vanasarar puthalviyum vadivElum: DEvayAnai, the damsel belonging to the Celestials; VaLLi, the belle of the hunter-tribe; Your sharp Spear;

mayilum iyal aRi pulamaiyum upa nida mathura kavithaiyum vitharaNa karuNaiyum: Your Peacock; Your proficiency in literary Tamil; Your composition of ThEvAram songs consisting of all the concepts of the scriptures; Your magnanimous, compassionate and charitable disposition;

vadivum iLamaiyum vaLamaiyum azhakiya perumALE.: Your Divine shape, youthfulness and magnificence are all radiating everywhere, Oh Handsome and Great One!


* The four methods of worship are:

1.  sariyai:  Worship through service in temples such as doing penance, washing the floor, lighting the lamps, maintaining the flower garden, plucking the flowers for offering, making of garlands, singing of hymns, decorating the deities etc. This is known as 'dhAdha mArgam - sAlOkam'.

2.  kiriyai:  Worship, both inwardly and externally, of a God with a form through daily offerings (pUjA) and with several pUjA materials. This is called 'puthra mArgam - sameepam'.

3.  yOgam:  Inward worship only of a formless God by control of senses, holding the oxygen in the inhaled air and letting it through the six centres of 'kuNdalini chakrA' after understanding each state fully, experiencing the flow of nectar in the 'Lunar zone' between the eyebrows and letting it seep throughout the body and meditating on the full effulgence. This is 'sakha mArgam - sArUbam'.

4.  gnAnam:  Ceasing all external and internal activities, this method consists of worshipping through the medium of intellect alone, seeking the True Knowledge. This is 'san mArgam - sAyujyam'.


** Saptha MAthAs (Seven Divine Mothers):

AbhirAmi, Maheswari, KaumAri, NArAyaNi, VArAhi, IndirANi and KALi.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1004 thasaiyum udhiramum - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]