(இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு எனது முக்கியக் குறிப்பைப் படியுங்கள் - நன்றி).
(Please read my important note before using this website - Thank You).
திருப்புகழ் 1002 கடலை பயறொடு  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1002 kadalaipayaRodu  (common)
Thiruppugazh - 1002 kadalaipayaRodu - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

mp3
 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

......... பாடல் .........

கடலை பயறொடு துவரையெ ளவல்பொரி
     சுகியன் வடைகனல் கதலியி னமுதொடு
          கனியு முதுபல கனிவகை நலமிவை ...... யினிதாகக்

கடல்கொள் புவிமுதல் துளிர்வொடு வளமுற
     அமுது துதிகையில் மனமது களிபெற
          கருணை யுடனளி திருவருள் மகிழ்வுற ...... நெடிதான

குடகு வயிறினி லடைவிடு மதகரி
     பிறகு வருமொரு முருகசண் முகவென
          குவிய இருகர மலர்விழி புனலொடு ...... பணியாமற்

கொடிய நெடியன அதிவினை துயர்கொடு
     வறுமை சிறுமையி னலைவுட னரிவையர்
          குழியில் முழுகியு மழுகியு முழல்வகை ...... யொழியாதோ

நெடிய கடலினில் முடுகியெ வரமுறு
     மறலி வெருவுற ரவிமதி பயமுற
          நிலமு நெறுநெறு நெறுவென வருமொரு ...... கொடிதான

நிசிசர் கொடுமுடி சடசட சடவென
     பகர கிரிமுடி கிடுகிடு கிடுவென
          நிகரி லயில்வெயி லெழுபசு மையநிற ...... முளதான

நடன மிடுபரி துரகத மயிலது
     முடுகி கடுமையி லுலகதை வலம்வரு
          நளின பதவர நதிகுமு குமுவென ...... முநிவோரும்

நறிய மலர்கொடு ஹரஹர ஹரவென
     அமரர் சிறைகெட நறைகமழ் மலர்மிசை
          நணியெ சரவண மதில்வள ரழகிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கடலை பயறொடு துவரை எள் அவல் பொரி சுகியன் வடை
க(ன்)னல் கதலி இ(ன்)னமுதொடு
... கடலை, பயறு
இவைகளுடன், துவரை, எள், பொரி, சுகியன், வடை, கரும்பு, வாழை
இனிய அமுது போன்ற சுவையுடன்

கனியும் முது பல கனி வகை நலம் இவை இனிதாகக் கடல்
கொள் புவி முதல் துளிர்வொடு வளம் உற
... பழுத்துள்ள முதிர்ந்த
பலவிதமான பழ வகைகள் நல்லபடியாக இவைகளை இன்பத்துடன்,
கடலால் சூழப்பட்ட பூமியில் உள்ளவர்கள் முதல் யாவரும் தழைத்து
வளப்பம் பெறுவதற்காக,

அமுது துதி கையில் மனம் அது களி பெற கருணையுடன்
அ(ள்)ளி திருவருள் மகிழ்வுற
... அமுதாக தனது துதிக்கையில்
மனம் மகிழ்ச்சி பெற கருணை மிகுந்து அள்ளி எடுத்து திருவருள் பாலிக்க,

நெடிதான குடகு வயிறினில் அடைவிடு மத கரி பிறகு வரும்
ஒரு முருக சண்முக என
... பெரிய குடம் போன்ற வயிற்றினில்
அடைக்கின்ற மத யானை போன்ற கணபதியின் பின் தோன்றிய ஒப்பற்ற
முருகனே, ஷண்முகனே என்று

குவிய இரு கரம் மலர் விழி புனலொடு பணியாமல் ... இரண்டு
கைகளும் குவிய, மலர்ந்த கண்களிலிருந்து நீர் பெருக, உன்னைப்
பணியாமல்,

கொடிய நெடியன அதி வினை துயர் கொடு வறுமை
சிறுமையின் அலைவுடன்
... கொடியதும் பெரிதானதுமான மிக்க
வினையால் ஏற்படும் துயரத்துடன், வறுமையால் வரும் தாழ்வினால்
மனம் அலைச்சல் அடைந்து,

அரிவையர் குழியில் முழுகியும் அழுகியும் உழல் வகை
ஒழியாதோ
... விலைமாதர்களின் வஞ்சகப் படுகுழியில் முழுகியும்,
பாழடைந்தும் திரிகின்ற தன்மை என்னைவிட்டு நீங்காதோ?

நெடிய கடலினில் முடுகியெ வரம் உறு மறலி வெரு உற ரவி
மதி பயம் உற
... பெரிய கடல் போல விரைந்து எழுந்து (உயிர்களைக்
கவரும்) வரம் பெற்ற யமன் பயப்படவும், சூரியனும் சந்திரனும் பயப்படவும்,

நிலமும் நெறு நெறு நெறு என வரும் ஒரு கொடிதான நிசிரர்
கொடுமுடி சட சட சட என
... பூமியும் நெறு நெறு என அதிரவும்
போர்க்களத்துக்கு வந்த கொடியர்களான அசுரர்களின் கொடிய தலைகள்
சட சட சட என்று அதிர்ந்து வீழவும்,

பகர கிரி முடி கிடு கிடு கிடு என ... சொல்லப்படும் எட்டு
மலைகளின் சிகரங்கள் கிடு கிடு என்று அதிர்ச்சி உறவும்,

நிகர் இல் அயில் வெயில் எழு பசுமைய நிறம் உளதான
நடனம் இடு(ம்) பரி துரகதம் மயில் அது
... உவமை இல்லாத
வேலாயுதத்துடன், ஒளி வீசும் பச்சை நிறமுள்ளதும் நடனம் செய்யும்
வாகனமான குதிரை போன்ற மயில் மீது ஏறி

முடுகி கடுமையில் உலகதை வலம் வரும் நளின பத ...
வேகமாக உக்கிரத்துடன் புவியை வலம் வந்த தாமரை போன்ற
திருவடிகளை உடையவனே,

வர நதி குமு குமு என முநிவோரும் நறிய மலர் கொடு ஹர
ஹர ஹர என
... ஜீவநதியாகிய கங்கை குமு குமு என்று கொந்தளிக்க,
முனிவர்களும் வாசனை மிகுந்த மலர்களோடு ஹர ஹர என்று போற்ற,

அமரர் சிறை கெட நறை கமழ் மலர் மிசை ந(ண்)ணியே ...
தேவர்கள் சிறை நீங்க, நறு மணம் வீசும் தாமரை மலர் மீது தங்கியிருந்து

சரவணம் அதில் வளர் அழகிய பெருமாளே. ... சரவணப்
பொய்கையில் வளர்ந்த அழகிய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.36  pg 3.37 
 WIKI_urai Song number: 1005 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

YouTube  'YouTube' Links for this song  
  இப்பாடலுக்கான யூ ட்யூப் பதிவுகள்  

to come வரவிருக்கின்றது

 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 


Song 1002 - kadalai payaRodu (common)

kadalai payaRodu thuvaraiye Lavalpori
     sukiyan vadaikanal kathaliyi namuthodu
          kaniyu muthupala kanivakai nalamivai ...... yinithAkak

kadalkoL puvimuthal thuLirvodu vaLamuRa
     amuthu thuthikaiyil manamathu kaLipeRa
          karuNai yudanaLi thiruvaruL makizhvuRa ...... nedithAna

kudaku vayiRini ladaividu mathakari
     piRaku varumoru murukasaN mukavena
          kuviya irukara malarvizhi punalodu ...... paNiyAmaR

kodiya nediyana athivinai thuyarkodu
     vaRumai siRumaiyi nalaivuda narivaiyar
          kuzhiyil muzhukiyu mazhukiyu muzhalvakai ...... yozhiyAthO

nediya kadalinil mudukiye varamuRu
     maRali veruvuRa ravimathi payamuRa
          nilamu neRuneRu neRuvena varumoru ...... kodithAna

nisisar kodumudi sadasada sadavena
     pakara kirimudi kidukidu kiduvena
          nikari layilveyi lezhupasu maiyaniRa ...... muLathAna

nadana midupari thurakatha mayilathu
     muduki kadumaiyi lulakathai valamvaru
          naLina pathavara nathikumu kumuvena ...... munivOrum

naRiya malarkodu harahara haravena
     amarar siRaikeda naRaikamazh malarmisai
          naNiye saravaNa mathilvaLa razhakiya ...... perumALE.

......... Meaning .........

kadalai payaRodu thuvarai eL aval pori sukiyan vadai ka(n)nal kathali i(n)namuthodu: Along with peanuts, lentils, split beans, sesame-seed, puffed rice, sukiyan (roasted ball of coconut and jaggery), vadai (fried lentil dough), sugarcane and plantain, all of which taste like nectar,

kaniyum muthu pala kani vakai nalam ivai inithAkak kadal koL puvi muthal thuLirvodu vaLam uRa: ripe and mature fruits of many kinds are assembled; for the prosperity of all people living on this earth surrounded by the seas,

amuthu thuthi kaiyil manam athu kaLi peRa karuNaiyudan a(L)Li thiruvaruL makizhvuRa: He happily takes that food with His trunk in one sweep and graciously devours it;

nedithAna kudaku vayiRinil adaividu matha kari piRaku varum oru muruka saNmuka ena: He stuffs that food in His large pot-belly; He is Lord GaNapathi looking like a wild elephant; I have failed to worship You as His younger brother, the matchless six-faced Lord, Murugan;

kuviya iru karam malar vizhi punalodu paNiyAmal: nor have I prostrated at Your feet by folding my two arms and shedding tears from my wide-open eyes;

kodiya nediyana athi vinai thuyar kodu vaRumai siRumaiyin alaivudan: instead, my mind has been blown away due to the humiliation brought about by poverty and misery caused by my past evil and enormous deeds;

arivaiyar kuzhiyil muzhukiyum azhukiyum uzhal vakai ozhiyAthO: will I never be able to kick away the habit of falling into the treacherous pits laid by the whores and roaming about towards utter decay?

nediya kadalinil mudukiye varam uRu maRali veru uRa ravi mathi payam uRa: The gifted God of Death (Yaman) who rises swiftly like a swelling sea (to take lives away) became very scared; the sun and the moon were also terrified;

nilamum neRu neRu neRu ena varum oru kodithAna nisirar kodumudi sada sada sada ena: and the earth began to shake precariously as the evil demons marched into the battlefield; their heads were felled with a thundering noise;

pakara kiri mudi kidu kidu kidu ena: the peaks of the famous eight mountains began to shake and rumble;

nikar il ayil veyil ezhu pasumaiya niRam uLathAna nadanam idu(m) pari thurakatham mayil athu: when You mounted the horse-like, dancing and bright peacock, holding Your matchless spear in the hand!

muduki kadumaiyil ulakathai valam varum naLina patha: You fiercely went around the earth at mighty speed, Oh Lord with hallowed lotus feet,

vara nathi kumu kumu ena munivOrum naRiya malar kodu hara hara hara ena: as the perennial river Gangai gushed with a bubbling sound and the sages worshipped You with fragrant flowers chanting "Hara, Hara, Hara";

amarar siRai keda naRai kamazh malar misai na(N)NiyE: and the celestials were liberated from their prison. You took Your seat upon the fragrant lotus in

saravaNam athil vaLar azhakiya perumALE.: the pond at SaravaNam where You grew up, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

mp3
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1002 kadalai payaRodu - common


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top