திருப்புகழ் 954 இலைச்சுருட் கொடு  (தனிச்சயம்)
Thiruppugazh 954 ilaichchurutkodu  (thanichchayam)
Thiruppugazh - 954 ilaichchurutkodu - thanichchayamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்
     தனத்தனத் தனத்தனத் ...... தனதான

......... பாடல் .........

இலைச்சுருட் கொடுத்தணைத் தலத்திருத் திமட்டைகட்
     கிதத்தபுட் குரற்கள்விட் ...... டநுராகம்

எழுப்பிமைக் கயற்கணைக் கழுத்தைமுத் தமிட்டணைத்
     தெடுத்திதழ்க் கடித்துரத் ...... திடைதாவி

அலைச்சலுற் றிலச்சையற் றரைப்பைதொட் டுழைத்துழைத்
     தலக்கணுற் றுயிர்க்களைத் ...... திடவேதான்

அறத்தவித் திளைத்துறத் தனத்தினிற் புணர்ச்சிபட்
     டயர்க்குமிப் பிறப்பினித் ...... தவிராதோ

கொலைச்செருக் கரக்கரைக் கலக்குமிக் ககுக்குடக்
     கொடித்திருக் கரத்தபொற் ...... பதிபாடுங்

குறித்தநற் றிருப்புகழ்ப் ப்ரபுத்துவக் கவித்துவக்
     குருத்துவத் தெனைப்பணித் ...... தருள்வோனே

தலைச்சுமைச் சடைச்சிவற் கிலக்கணத் திலக்கியத்
     தமிழ்த்ரயத் தகத்தியற் ...... கறிவோதுஞ்

சமர்த்தரிற் சமர்த்தபச் சிமத்திசைக் குளுத்தமத்
     தனிச்சயத் தினிற்பிளைப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

இலைச் சுருள் கொடுத்து அணைத்தலத்து இருத்தி
மட்டைகட்கு இதத்த புள் குரல்கள் விட்டு அநுராகம் எழுப்பி
...
சுருட்டிய வெற்றிலையைப் (பாக்குடன்) கொடுத்து படுக்கையில் இருக்க
வைத்து, பயனற்ற முட்டாள்களுக்கு இன்பம் தரக்கூடிய பறவைகளின்
குரல்களை தொண்டையிலிருந்து வெளிவிட்டு காமப் பற்றை எழுப்பியும்,

மைக் கயல் கணை கழுத்தை முத்தம் இட்டு அணைத்து
எடுத்து இதழ்க் கடித்து உரத்து இடை தாவி
... மை பூசப்படும்
கயல் மீன் போன்ற கண்ணிலும் கழுத்திலும் முத்தம் தந்து அணைத்தும்,
எடுத்தும், வாயிதழைக் கடித்தும், மார்பிடத்தே தாவியும்,

அலைச்சல் உற்று இலச்சை அற்று அரைப் பை தொட்டு
உழைத்து உழைத்து அலக்கண் உற்று உயிர்க் களைத்திடவே
தான்
... அலைச்சல் உற்று நாணம் இல்லாமல், பெண்குறியைத் தொட்டு,
மிக உழைத்து, துன்பம் அடைந்து, உயிர் களைத்துப் போகும் அளவுக்கு,

அறத் தவித்து இளைத்து உறத் தனத்தினில் புணர்ச்சி பட்டு
அயர்க்கும் இப் பிறப்பு இனித் தவிராதோ
... மிகவும் தவிப்பு
அடைந்து, உடல் இளைத்து, மார்பகங்களை மிகத்தழுவி, அலுத்துப்
போகும் இந்த பிறப்பு இனியாவது நீங்காதோ?

கொலைச் செருக்கு அரக்கரைக் கலக்கும் மிக்க குக்குடக்
கொடித் திருக் கரத்த
... கொலை செய்வதில் பெருமை கொள்ளும்
அரக்கர்களை கலங்கச் செய்தவனே, சேவல் கொடியைக் கையில்
ஏந்தியவனே,

பொன் பதி பாடும் குறித்த நல் திருப்புகழ் ப்ரபுத்துவக்
கவித்துவக் குருத்துவத்து எனைப் பணித்து அருள்வோனே
...
அழகிய தலங்கள் தோறும் உன்னைப் பாடும் நோக்கத்தைக் கொண்ட
நல்ல திருப்புகழில் மிக மேம்பட்ட கவி பாடும் குருஸ்தானத்தில் என்னை
நிலைக்க வைத்துக் கட்டளை இட்டு அருள் புரிந்தவனே,

தலைச் சுமைச் சடைச் சிவற்கு இலக்கணத்து இலக்கியத் தமிழ்
த்ரயத்து அகத்தியற்கு அறிவு ஓதும் சமர்த்தரில் சமர்த்த
...
தலையில் சுமை போல் பாரமான சடையைக் கொண்ட சிவபெருமானுக்கும்,
இலக்கணம், இலக்கியம், நாடகம் என்னும் முத்தமிழில் வல்லவரான
அகத்திய முனிவர்க்கும் ஞானபோதகனே, சாமர்த்தியத்தில் முதல்
இடத்தில் இருப்பவனே,

பச்சிமத் திசைக்கு உள உத்தமத் தனிச்சயத்தினில்
பி(ள்)ளைப் பெருமாளே.
... மேற்குத் திசைக்குள் உள்ள உத்தமமான
தனிச்சயம்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் (சிவனாரின்) பிள்ளைப்
பெருமாளே.


* தனிச்சயம் மதுரைக்கு மேற்கே சோழவந்தான் வட்டத்தில் உள்ளது.
பாண்டியன் இந்திரனுடன் தனித்து நின்று போராடி ஜயம் பெற்ற தலமானதால்
தனிச்சயம் என்ற பெயர் பெற்றது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1337  pg 2.1338  pg 2.1339  pg 2.1340 
 WIKI_urai Song number: 958 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 954 - ilaichchurut kodu (thanichchayam)

ilaicchurut koduththaNaith thalaththiruth thimattaikat
     kithaththaput kuraRkaLvit ...... tanurAkam

ezhuppimaik kayaRkaNaik kazhuththaimuth thamittaNaith
     theduththithazhk kadiththurath ...... thidaithAvi

alaicchalut Rilacchaiyat Raraippaithot tuzhaiththuzhaith
     thalakkaNut RuyirkkaLaith ...... thidavEthAn

aRaththavith thiLaiththuRath thanaththiniR puNarcchipat
     tayarkkumip piRappinith ...... thavirAthO

kolaiccheruk karakkaraik kalakkumik kakukkudak
     kodiththiruk karaththapoR ...... pathipAdung

kuRiththanat Riruppukazhp prapuththuvak kaviththuvak
     kuruththuvath thenaippaNith ...... tharuLvOnE

thalaicchumaic chadaicchivaR kilakkaNath thilakkiyath
     thamizhthrayath thakaththiyaR ...... kaRivOthunj

chamarththariR chamarththapac chimaththisaik kuLuththamath
     thanicchayath thiniRpiLaip ...... perumALE.

......... Meaning .........

ilaic churuL koduththu aNaiththalaththu iruththi mattaikatku ithaththa puL kuralkaL vittu anurAkam ezhuppi: Offering the folded betel leaves (with the nut), they place their suitors on the bed, and to entertain those useless fools, the whores make many a crooning sound of birds from their throats and provoke passion;

maik kayal kaNai kazhuththai muththam ittu aNaiththu eduththu ithazhk kadiththu uraththu idai thAvi: the men kiss all over their kayal-fish-like eyes, with black-pigment, and neck, hugging them and taking them in their arms, biting their lips and caressing their bosom;

alaicchal utRu ilacchai atRu araip pai thottu uzhaiththu uzhaiththu alakkaN utRu uyirk kaLaiththidavE thAn: they toss and turn seeking to touch their genitals without shame; they labour excessively, feeling miserable to the point of exhaustion;

aRath thaviththu iLaiththu uRath thanaththinil puNarcchi pattu ayarkkum ip piRappu inith thavirAthO: being much distressed, they hug the breasts repeatedly weakening their body; can this birth where one gets worn out like this be terminated at all?

kolaic cherukku arakkaraik kalakkum mikka kukkudak kodith thiruk karaththa: Those demons who prided themselves on slaughtering people were flabbergasted, Oh Lord, holding the staff of the Rooster in Your hand!

pon pathi pAdum kuRiththa nal thiruppukazh prapuththuvak kaviththuvak kuruththuvaththu enaip paNiththu aruLvOnE: Enabling me to sing about Your glory in many abodes of Yours composing excellent Thiruppugazh songs, You graciously commanded me to assume an enduring position as master, Oh Lord!

thalaic chumaic chadaic chivaRku ilakkaNaththu ilakkiyath thamizh thrayaththu akaththiyaRku aRivu Othum chamarththaril chamarththa: His matted hair looks like a heavy burden on His head; to that Lord SivA as well as sage Agasthiyar, who is well-versed in the three branches of Tamil including literature, grammar and drama, You preached the essence of True Knowledge, Oh Master! You are the cleverest of the clever ones, Oh Lord!

pacchimath thisaikku uLa uththamath thanicchayaththinil pi(L)Laip perumALE.: Of all the western towns, this place Thanichchayam* is considered the most sacred, and You chose it as Your abode, Oh Great Son of Lord SivA!


* Thanichchayam (meaning Solo Victory) is near ChOzhavanthAn, west of Madhurai. As the PAndiyA King fought with Indra all by himself and won the duel, the place is named Thanichchayam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 954 ilaichchurut kodu - thanichchayam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]