திருப்புகழ் 953 தரங்க வார்குழல்  (குளந்தைநகர்)
Thiruppugazh 953 tharangkavArkuzhal  (kuLandhainagar)
Thiruppugazh - 953 tharangkavArkuzhal - kuLandhainagarSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனந்த தானனத் தனதன ...... தனதான

......... பாடல் .........

தரங்க வார்குழற் றநுநுதல் ...... விழியாலம்

தகைந்த மாமுலைத் துடியிடை ...... மடமாதர்

பரந்த மாலிருட் படுகுழி ...... வசமாகிப்

பயந்து காலனுக் குயிர்கொடு ...... தவியாமல்

வரந்த ராவிடிற் பிறரெவர் ...... தருவாரே

மகிழ்ந்து தோகையிற் புவிவலம் ...... வருவோனே

குரும்பை மாமுலைக் குறமகள் ...... மணவாளா

குளந்தை மாநகர்த் தளியுறை ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தரங்க(ம்) வார் குழல் தநு நுதல் விழி ஆலம் தகைந்த மா
முலைத் துடி இடை மட மாதர்
... அலைபோலப் புரளுகின்ற நீண்ட
கூந்தல், வில்லைப் போன்ற நெற்றி, ஆலகால விஷத்தைப் போன்ற
கண்கள், காண்போர் மனத்தைக் கவரும் பெரிய மார்பகங்கள், உடுக்கை
போன்ற சுருங்கிய இடுப்பு இவைகளைக் கொண்ட அழகிய விலைமாதர்கள்
மீதுள்ள

பரந்த மால் இருள் படு குழி வசமாகிப் பயந்து காலனுக்கு
உயிர் கொடு தவியாமல்
... நிரம்பிய மோகம் என்னும் இருள் நிறைந்த
பெரிய குழியில் அகப்பட்டு, யமனுக்கு அஞ்சி உயிர் நடுங்க நான்
தவிக்காதபடிச் செய்வாய்.

வரம் தராவிடில் பிறர் எவர் தருவாரே ... நீ எனக்கு வரம்
தராவிட்டால் வேறு எவர் தான் கொடுப்பார்கள்?

மகிழ்ந்து தோகையில் புவி வலம் வருவோனே ... மனம் மகிழ்ந்து
மயிலின் மீது ஏறி பூமியை வலமாகச் சுற்றி வந்தவனே,

குரும்பை மா முலைக் குற மகள் மணவாளா ... தென்னங்
குரும்பை போன்ற சிறந்த மார்பகங்களைக் கொண்ட குறக் குலத்துப்
பெண் வள்ளியின் கணவனே,

குளந்தை மா நகர் தளி உறை பெருமாளே. ... குளந்தை என்று
விளங்கும் பெரியகுளத்தில்* உள்ள கோயிலில் வீற்றிருக்கும் பெருமாளே.


* பெரியகுளம் மதுரை மாவட்டத்தில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1335  pg 2.1336 
 WIKI_urai Song number: 957 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 953 - tharanga vArkuzhal (kuLanthainagar)

tharanga vArkuzhat Ranunuthal ...... vizhiyAlam

thakaintha mAmulaith thudiyidai ...... madamAthar

parantha mAlirut padukuzhi ...... vasamAkip

payanthu kAlanuk kuyirkodu ...... thaviyAmal

varantha rAvidiR piRarevar ...... tharuvArE

makizhnthu thOkaiyiR puvivalam ...... varuvOnE

kurumpai mAmulaik kuRamakaL ...... maNavALA

kuLanthai mAnakarth thaLiyuRai ...... perumALE.

......... Meaning .........

tharanga(m) vAr kuzhal thanu nuthal vizhi Alam thakaintha mA mulaith thudi idai mada mAthar: These whores are endowed with long hair that sways like a wave, bow-like forehead, eyes like the AlakAla venom, huge bosom that captivate the mind of the on-lookers and slender waist like the hand-drum;

parantha mAl iruL padu kuzhi vasamAkip payanthu kAlanukku uyir kodu thaviyAmal: I have been ensnared in the dark and deep rut of obsessive passion for them and am trembling for my life in the fear of Yaman (God of Death); kindly save me from such suffering.

varam tharAvidil piRar evar tharuvArE: If You do not grant me this boon, who else is going to give it to me?

makizhnthu thOkaiyil puvi valam varuvOnE: You mounted the peacock with relish and went around the entire world!

kurumpai mA mulaik kuRa makaL maNavALA: She has great bosom that look like tender coconuts; She is VaLLi, the damsel of the KuRavA lineage, and You are her consort, Oh Lord!

kuLanthai mA nakar thaLi uRai perumALE.: You are seated inside the temple of this place KuLanthai, known as PeriyakuLam*, Oh Great One!


* PeriyakuLam is in the district of Madhurai.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 953 tharangka vArkuzhal - kuLandhainagar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]