பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளந்தைகள் திருப்புகழ் உரை 777 பாதி வாலி பிடிக்க, மற்றொரு பாதியைத் தேவர்கள் ിക് இலக்குமி, பாரிஜாதம் முதலான பல சித்திகள்) அரும் பொருள்கள் வெளிப்பட்டு வரும்படிப் பாற்கடலைக் கடைவித்த அதிகாரியாய் (தலைவனாய்) அமுதத்தைத் (தேவர்களுக்கு அளித்தருளிய கிருபர் மூர்த்தியாகிய பச்சை நிறத்திருமாலின் மருகன்ே! அழிவில்லாத (குபேரன் நகராகிய) அளகாபுரி போலப் பல மாட கூடங்கள், மலர்ச் சோலைகள் சூழ்ந்துள்ள கீரனுார் என்னும் தலத்தில் வேல் ஏந்தி அருளும் பெருமாளே! (தோதக வித்தைகள் கற்பவர் உறவாமோ) குளந்தை நகர் 957. அலைபோலப் புரளுகின்ற நீண்ட கூந்தல், வில்லைப் போன்ற நெற்றி, (ஆலம் விழி) விஷம் அனைய கன். (தகைந்த) காண்போர் மனத்தைக் கவரும் . வசப்படுத்தும் சிறந்த கொங்கை துடி (உடுக்கை) போன்ற இடை-இவைதமை உடைய அழகிய பெண்கள் மீதுள்ள. நிரம்பிய மோகம் என்னும் இருள் நிறைந்த பெரிய குழியில் அகப்பட்டு - வசப்பட்டு - இறுதிக் காலத்தில்) (காலனுக்குப் பயந்து - யமனுக்கு அஞ்சி உயிர் நடுங்கத் தவியாமல் - நான் நல்ல்படி இருக்கும்படியான). வரத்தை நீ கொடுக்கா விட்டால் வே று எவர்தாம் கொடுப்பார்கள்? மகிழ்ச்சியுடன் மயில் மீதேறி பூமியை வலம் வந்தவனே! குரும்பை (தென்னங் குரும்பை) போன்ற அழகிய கொங்கையைக் கொண்ட குறமகள் வள்ளியின் மணவாளனே! குளந்தை (பெரிய குளம்) என்னும் பெரிய ஊர்க் கோயிலில் வீற்றிருக்கின்ற பெருமாளே! (வரம் (நீயன்றி) வேறு எவர் தருவார்)